முகப்பு

mercredi 8 février 2012

நேரம்

நமக்கு இனிமேலும் நேரம் இருக்காது, இருக்கும் நேரம் எப்போதுமே நம்மிடம் இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது.
 நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
 சூரிய உதயத்திற்கும் அத்தமனத்துக்கும் நடுவே இரண்டு தங்க மயமான மணி நேரங்கள். ஒவ்வொன்றிலும் அறுபது வைர நிமிடங்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்டு பிடிப்புக்களுக்கு பரிசு எதுவும் கிடையாது. ஏனெனில் அவற்றை மீட்க முடியாது.
 நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் நாளைய விதி பற்றி சொல்ல முடியாது, ஊகிக்க முடியாது. அதனால் இன்றைய பொழுதை வீணாக்காதீர்கள் ஏனென்றால் அது வரவே வராது.
 நேரத்தின் உண்மையான மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு கணத்தையும் பறித்து, பற்றி, அனுபவியுங்கள். சோர்வு, சோம்பேறித்தனம், தள்ளிப்போடுதல் கூடவே கூடாது. இன்று செய்ய முடிந்ததை நாளை தள்ளிப் போடாதீர்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire