முகப்பு

mardi 29 janvier 2013

வனப்பைக் கூட்டும்!

 
 
ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!
எப்படி வாழ்ந்தோம்
என்பதும் ஒரு அங்கம்.
வாழக் கிடைத்த
... வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது
வசந்தத்தின் முகவரியை
அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே வசீகரத்தின்
வனப்பைக் கூட்டும்!

 

மனித மனங்களில் !

 
 
பாய்ந்தால் ஆறு
ஓடினால் ஓடை
வீழ்ந்தால் அருவி
நின்றால் குளம்
நிறைந்தால் ஏரி
கலந்தால் கடல்
... என்றழைக்கின்றோம்
எல்லாம் தண்ணீர்தானே!
அனைத்து உயிரிலும் உறைந்திருப்பன்
இறைவன் என்கிறோம் .
இறைவன் மதத்தில் இல்லை
உலக உயிர்களில்
நீக்கமற நிறைந்திருக்கிறான்
மனித மனங்களில் !
 

திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்

 
 
பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.


உன்னால்...

 
 
உன் நினைவுகளால்
வண்ணம் பூச மறந்து
வானில் அடையாளம்
தெரியாமல் வட்டமிட்டுக்
கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நான்...
... உதிரம் இல்லாத இதயம்
உயிர் வாழ துடிக்குது
உன்னால்...

 

தமிழ் வாழ்த்து

 
 
தமிழ் வாழ்த்து
தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது
மண்ணோடு போகும்வரை
... தமிழோடு வாழ்கவென்றும்
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும்

(படித்ததில் மிகவும் பிடித்தது)

இரு மன திருமணம்

 
 
இளவேனில் இளஞ்சிரிப்பில்
இடம்மாறி இதயங்கள்
இதையன்றி வாழ்வில்லை
இசைத்திடுவோம் இனியநாதமென
இணைத்திடும் இனிதாய்
இரு மன திருமணம்

பாசம் பகிர்ந்திருந்தால்
பண்பு குலையாது
எண்ணங்கள் பரிமாறப்பட்டால்
... மதித்தல் மேலோங்கும்
அன்பு அரணாய் உயர்ந்தால்
அரவணைத்துக் காத்திருக்கும்

அதுவே குற்றம்காணில்
குறுகிப்போம் நல்லுறவு
பற்றற வழிசமைக்கும்
சொற்கள் சுருள வைக்கும்
தொட்டதெல்லாம் துயராகும்
சுதந்திரம் எதுவெனக் கேட்கும்
கட்டவிழக் காத்திருக்கும்

கட்டல்ல திருமணம்
கண்டுணரும் அன்பின் வேரில்
புரிந்துணர்வின் கிளைகளில்
விட்டுக் கொடுப்பின் இலைகளில்
சந்ததிகள் செழித்தோங்கி
காலத்தில் பதிபடுவது
புரிந்தவருக்கோ கொள்ளையின்பம்
இழந்தவர்க்கோ நரகம்!

வி.அல்விற் .
29.01.2013.


samedi 26 janvier 2013

கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை

 

 

தன்னை புரிந்து கொண்டவன் மனிதன்
மனிதனின் வலியேய் புரிந்துகொண்டவன்
மாமனிதன்

வெற்றிடம் என்பவன் முட்டாள்
காற்று நிறைந்திருக்கிறது என்பான்
அறிவாளி

மாற்றுக்கருத்தே மருந்தாகும்
மதயானை சமுதாயத்திற்கு .
மதிப்பெண்ணோ மதுபானை மாணவனுக்கு

ஆயிரம் பொய்களுக்கு
ஒரு உண்மை இணையாகாது
என்பதை உணர்ந்தவன் பகுத்தறிவாளன்

இருப்பதை கொடுப்பவன் கொடையாளி
திருடியதை கொடுப்பவன் சுயநலவாதி
அனைவரும் அறியார்

காலமறிந்து மாற்றிக்கொள்பவன்
திறமைசாலி
காலத்தை குறை கூறுபவன் கிணற்றுத் தவளை

பிறப்பை உணர்ந்தவன் என்றும்
இறப்பை தேடி வீதியில் அலையும்
உல்லாச பறவை .

இமையில் விழுந்த தூசியேய்
கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை என
அறிவான் சாணக்கியன்




mardi 22 janvier 2013

அன்பில்லாத

 
 
உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்

அமைதியை தேடித்தேடி

 
 
அமைதியை தேடித்தேடி
தினம் ஆளாய்ப்பறக்கிறோம்......
அது நம் ஆன்மாக்குள்ளே
இருப்பதை அறிய மறுக்கிறோம்...................
எதையோ தொலைந்ததாய்
நினைத்து நினைத்து
...நித்தம் நித்தம் தேடுகிறோம் ...........
ஆனால் எதைத்தொலைத்தோம்
என்றுதான் “விடை தேடுகிறோம்”

 

உங்கள் இதயம்

 
சந்தோஷத்தை உங்களுக்கு
யாரும் கொடுக்க முடியாது.
உங்கள் மனதில்
இருந்து உருவாகுபவை....................
மகிழ்ச்சி சூழ்நிலைகள்
உருவாக்குபவை அல்ல......
உங்கள் இதயம்
உருவாக்குபவை...


என் மனதை

 
 
உயிரின் உருவம் நீயடி
என் உயிரைத்திண்பது ஏனடி..?
மனதில் நின்றவள் நீயடி,
என் மனதைக் குடைவது ஏனடி...?


வசீகரத்தின்

 
 
ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!
எப்படி வாழ்ந்தோம்
என்பதும் ஒரு அங்கம்.
வாழக் கிடைத்த
... வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது
வசந்தத்தின் முகவரியை
அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே வசீகரத்தின்
வனப்பைக் கூட்டும்!

 

உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்

 
 
நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.

அணைத்துவிடாதீர்கள்.

 
 
கலங்கரை விளக்கத்தை பார்க்கும் பணிக்காக பெண்ணொருத்தி கணவனுடன் புதிய இடத்திற்கு வந்தாள். அதையே இரவு பகலாகப் பார்த்த கணவன் நோயுற்று இறந்தான். அவனை அந்த இடத்தில் புதைத்தார்கள். இறக்கும் போது அவன் விளக்கை பார்த்துக் கொள் என்றுவிட்டு இறந்தான். அவ...ள் அவன் சொன்னபடியே கலங்கரை விளக்கத்தை கவனமாக பார்த்துக் கொண்டே, அவன் கல்லறையையும் பார்த்தாள். விளக்கைப் பார்த்துக் கொள் என்ற குரல் தினசரி அவளுக்குக் கேட்கும். சில நாட்களில் கவலைகள் மறந்து இயல்பான பெண்ணாக அவள் மாறிவிட்டாள். ஆம் கையில் இருக்கும் வாழ்க்கை விளக்குப் போன்றதாகும். அதை கவனமாக பாருங்கள், இறந்தவர்களை நினைத்து அழுது விளக்கை அணைத்துவிடாதீர்கள்.

 

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

 
 
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
...
3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


dimanche 13 janvier 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள். ...!

 
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எண்ணியது யாவும் நிறைவேற,
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க,
குறைவில்லா வாழ்வு பெற வாழ்த்துக்கள். ...!


jeudi 3 janvier 2013

நிம்மதி

 
 
பெண்ணை மலரென்றான் கவிஞன்.
அதே பெண்ணை முள்ளென்றான் சந்நியாசி.
மலரைப் பார்த்தக் கவிஞன்
முள்ளை மறந்துவிட்டான்.
முள்ளைப் பார்த்த சந்நியாசி
மலரை மறந்துவிட்டான்.
நான் இரண்டையும் பார்த்தேன்.
அதனால்,
நிம்மதியை மறந்துவிட்டேன்.


உண்மை

 
 
பொய்யை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற
இந்த உலகம்,
உண்மையை மட்டும் எப்போதுமே
உரசிப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டதில்லை

கற்றோரை மதி

 
 
மன்னித்துவிடு
மகானாவாய்
மறந்துவிடு
மகத்துவம் பெறுவாய்
சிந்தித்துவிடு
சிகரம் தொடுவாய்

மண்ணை காப்பாற்று
வீரனாவாய்
கொள்கையை செயல்படுத்து
அரசனாவாய்
வலிகளை தாங்கு
மனஉறுதி அடைவாய்

முயற்சி செய்
முன்னேற்றம் காண்பாய்
சாதித்துகாட்டு
சரித்திரம் படைப்பாய்
பெற்றோரை வணங்கு
நல்ல மனிதனாவாய்

தமிழ்மொழியை சுவாசி
தமிழனாவாய்
தாய்நாட்டை நேசி
நல்ல குடிமகனாவாய்
நம்பியோரை கைவிடாதே !
கடவுளாவாய்

கற்றோரை மதி
நல்ல மாணவனாவாய்


காலத்தால் அழியாதது

 
 
கவியால் வந்த
கலையான உறவு,என்றும்
கலையாத உறவு
வார்த்தைகளால் வளர்ந்து
வண்ணமாக வீற்ற நட்பு
என்றும்,
காலத்தால் அழியாதது......


இயேசு கிறித்துவுக்கு தோத்திரம்

 
 
பாவங்கள் போக்கவந்த பாலகர்
பாரினில் பாதிபேர் போற்றுகின்ற நாயகர்
கதை சொல்லி போதனைகள் செய்தார்
கல்லடியும் கசையடியும் பெற்றார்

யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்
அந்த யோவானுக்கே கடவுளாய் ஆனார்
வானம் மண்ணும் போற்றும் தேவ தூதுவர்
வாடுகின்ற மனிதர்க்கு மஹா புருஷர்

வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்
கர்த்தரிடம் முறையிட வருவர்
அவர் கருணையே உருவானவர்
எப்போதும் கைதூக்கி விடுபவர் .

கர்த்தருக்கு தோத்திரம்
தேவ குமாரருக்கு தோத்திரம்
மேய்ப்பருக்கு தோத்திரம்
இயேசு கிறித்துவுக்கு தோத்திரம்.


தாய்

 

தாய்

நான் முதன்முதல்
தொட்ட பெண்மணி -
அகிலத்தில் அப்பாய்ன்மென்ட்
வாங்கி வந்தபோது
அனைவரையும்
அறிமுகப் படுத்திய நிர்வாகி-
நான்-
வசித்ததும்சுவாசித்ததும்
அவளிடமே.