முகப்பு

dimanche 13 novembre 2016

நகல்

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

sountha

முடியும் என்பவனால் எல்லாமே முடியும்

  1. முடியும் என்பவனால் எல்லாமே முடியும்..முடியாது என்பவனால்..இறுதியில் அவனின் வாழ்க்கையே வீணாகி முடிந்துவிடும்...முயற்சி இல்லாதவர்கள்..முதுகெலும்பில்லாதவனுக்கு சம்மானவன்...நீங்கள்?
    உன்னால் எது முடியாது?
    எதுவரை முடியாது?
    எதற்காக முடியாது?
    எதனால் முடியாது?...
    இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட நீஎப்போது முடிவு செய்கின்றாயோ,;;;;;;;அந்த நொடிப்பொழுதிலிருந்து அத்தனையும் உன்னால் முடியும்.....

இறைவன்




  1. நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
    நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
    "காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
    ...
    காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!
    இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
    கலகலவென சிரித்தான் இறைவன்
    "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
    தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
    ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
    எனக்கான இடத்தை,
    எனக்கான நேரத்தை,
    எனக்கான விழாக்களை,
    என்னை வணங்கும் முறையை
    எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
    இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.

மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!




  1. புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!
    ( படியுங்கள்)
    1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
  2. மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...
  3. ...
  4. உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
    ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.
  5. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க.
  6. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும்.
    அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
  7. 2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
  8. மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
  9. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை.
    ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.
  10. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
  11. 3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
  12. மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.
  13. அவளை மதிக்கவேண்டும்.
    உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.
  14. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!
  15. 4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
    உதவி செய்யணும்.
  16. பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
    நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...
  17. அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்..
    சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..
  18. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!
  19. 5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
  20. காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..
  21. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
  22. ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
  23. உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
    அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
  24. உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்.....

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்



  1. சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
    பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
    எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும...் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
    மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
    ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
    அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
    எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
    இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
    அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
    லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
    ‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

படித்தேன்..பகர்கிறேன்



படித்து வருந்தியது!!! படித்தேன்..பகர்கிறேன்.

.
🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,
🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,
...
🌴எதிர் காலத்தில் எதை உண்ணும்மோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,
🌴திருமணத்தில் நான் விழைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,
🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,
🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,
இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭
விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!
இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
இப்படிக்கு விவசாயி.
🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்🌳

"பால் சொம்பு"



  1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைக்கின்றனர்???
  2. "ஒரு கணவனும் மனைவியும் அவர்கள் சந்திக்கும் முதல் தனிமையான இடம் படுக்கை அறை... நான்கு சுவற்றில் தனது அன்புக்குறியவரை, தனது வாழ்க்கையின் பாதியை, தனது எதிர்காலத்தை, அந்த இடத்தில்தான் முதன்முதலாக சந்திக்கின்றனர். வாழ்நாள் முடியும்... எந்த நிலையிலும் தனது கணவன்/மனைவியை முதன்முதலில் பார்த்த அந்த இனிமையான நினைவுகளை அவர்கள் மனதிலிருந்து அவ்வளவு சுலபமாக யாராலும...் அழிக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு மிக சிறப்பாக தொடங்கவேண்டும்.
  3. அதன்படி நம் தமிழர்களின் பாரம்பரிய ஒரு பழக்க வழக்கம் முதலிரவில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைப்பது...அதன் அர்த்தம்? பால் போல தூய்மையான சுவையான ஒரு வாழ்க்கையை இருவரும் தொடங்கவேண்டும், பால் போல கலப்படம் இல்லா வென்மையான குணம் இருவருக்கும் இருக்கவேண்டும்.
  4. அதாவது...
  5. ((முதலில் மனைவி தன் கணவனுக்கு பால் சொம்பை நீட்டுவாள். கணவன் அதை வாங்கி
  6. 1; இந்த பாலின் உள்ள சுவை, மணம், வென்மை, போல நமது வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல், இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில் பாதி பால் பருகுவான். மீதி பாலை தன் மனைவிக்கு கொடுத்து
  7. 2; இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வென்மை பிரியாதது போல் மரணம் வரை உன்னுடன் நான் இருப்பேன். என்ற அர்த்தத்தில் மீதி பாலை அருந்துவாள்.))

mercredi 9 novembre 2016

'பொண்டாட்டிடா'..."

  1. மந்திரவாதி ஒரு டம்ளர் நீரை
    கவிழ்த்து அதிலிருந்து ஒரு
    கைக்குட்டை வர வைத்தான்....
    கூட்டத்தில் இருந்த எல்லோரும்...
    அதிசயத்துடன் கைத்தட்டினர்...

    ஒருவர் மட்டும் கைத்தட்டாமல்
    உம்மென்று இருந்தார்...
    அவரிடம் சென்று, "நீங்க ஏன் சிரிக்கல, உம்மென்று இருக்கீங்க" என்று கேட்டார்...
    அதற்கு அவர், "இது ரொம்பவே சாதாரணம்...
    நீ ஒரு டம்ளர் தண்ணீல ஒரு கைக்குட்டை தானே எடுத்தாய்..
    என் பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல
    ஒரு பட்டு புடவையே
    எடுத்துடுவாடா.
    புரிஞ்சுக்கடா...

    'பொண்டாட்டிடா'..."

சொல்லாதீர்கள்..



  1. ஆறுதலுக்காய் பிறரிடம்
    அழுகைக்கான காரணத்தை
    சொல்லாதீர்கள்..
    ஆறுதல் கிடைக்கிறதோ
    இல்லையோ.. உங்களை ...
    அழ வைப்பதற்கான வழி
    அவர்களுக்கு கிடைத்து விடும்

உன்னை நேசிக்கும்..!!



  1. உருவத்தில் நீ
    எப்படி இருந்தாலும்
    உனக்கு பிடித்தமானவரின் உள்ளத்தில்
    நீ ஒரு குழந்தையாக இரு
    இந்த உலகமே...
    உன்னை நேசிக்கும்..!!

எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!



  1. இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல
    எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!
    ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
    அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது....
    கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.

    "அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
    " ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.
    சில விநாடிகளுக்குப் பிறகு,
    "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
    அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
    என்று சொன்னான் அர்ஜுனன்.
    மேலும் சில விநாடிகள் கழித்து
    "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
    கிருஷ்ணர் சொல்ல,
    கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.
    இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
    "அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
    அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
    "நிஜம் தான் கிருஷ்ணா...அது
    காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
    பதிலளித்தான் அர்ஜுனன்.
    " என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
    தெரியாதா.?"
    கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
    "கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
    சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
    புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
    அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
    தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
    🌹இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

    கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
    அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
    உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
    கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்
    இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!

dimanche 6 novembre 2016

thavaru


manam


சில வினாடிகள்



  1. பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,
    "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.
    சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்

கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.



பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன.அவை அப்படியே சுகமாகவும்,பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.
தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது.அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்
அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும்,
காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.

ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.