முகப்பு

samedi 30 décembre 2017

மகிழ்ச்சி



மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

மகிழ்வான வாழ்வை



மகிழ்வான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், நாம் செய்ய வேண்டியது ஒன்றே.., நமது குறைகளை ஏற்றுக் கொள்ளவதும், உணர்ந்து கொள்வதுமே..

"மனுஷங்க"



பணத்துக்காக மட்டுமே
மதிக்கிற பல உறவுகள்
வேண்டாம் எனக்கு,
என் மனசுக்காக மட்டுமே
என்னை மதிக்கிற நாலு...
"மனுஷங்க" இருந்தாலே
போதும்!

அன்பு



அன்பு காட்டுவது என்றால் உண்மையாய் அன்பு காட்டுங்கள் வெறுப்பது என்றால் வெறுத்து விடுங்கள் இரண்டையும் கலந்து செய்யாதீர்கள்

lundi 25 décembre 2017

கிருஸ்துமஸ் நல்வாழ்த்து



வானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் அனைவரின் மனங்களை வென்றார் பரமபிதா இயேசு பெருமான் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

mardi 5 décembre 2017

sontham


nee


sila


unmai


nallavar


paravai


யோசித்து பார் புரியும் .....



யோசித்து பார் புரியும் .....
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே.....
நீ இறந்தபிறகு உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்.. தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான்

மகிழ்ச்சியை



கடந்து போன நினைவுகளை
நினைத்து நினைத்து
நிகழ்கால மகிழ்ச்சியை
இழக்கின்றோம் !!!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்



நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்....
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.
பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.
2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
ஆனால்,
உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,
👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்