முகப்பு

dimanche 24 août 2014

ml


mm


kudumbam


samedi 16 août 2014

உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே..!!!



சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”
உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே..!!!

sm


sm


sm


jeudi 14 août 2014

ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


mardi 12 août 2014

வாழ்க்கை


நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!(3.2.2012)

உன் வாழ்க்கை



சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

தத்துக்கிளி



தத்துக்கிளி எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்கும் எதிலும் முழுமையாக ஈடுபடாது. எல்லாவற்றுக்கும் பயந்து ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவி எதையுமே செய்யாதிருக்கும் தத்துக்கிளி போல வாழக்கூடாது. ஏனென்றால் கஷ்டங்களை கண்டு ஒதுங்குவதால் உங்களால் எதையுமே சாதிக்க இயலாது.

நிதி



ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று நிதி திரட்டாதே தான் ஏன் ஏழையாக இருக்கிறேன் என்ற இரகசியத்தை கண்டு பிடிக்கத் தெரியாத ஏழைக்கு நீ எவ்வளவு உதவி செய்தாலும் அவன் இறுதிவரை ஏழையாகவே இருப்பான். பலர் வெளிநாடு வந்தும் கடனாளியாக இருப்பது போல..

வீரமும் விவேகமும்.


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.

lundi 4 août 2014

செயற்படுங்கள்

 
 
 
நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா.. அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனென்றால் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எழுந்து செயற்படுங்கள், நோக்கத்துடன் செயற்படுங்கள்.
 
 
 உங்களுக்குப் பின்னால் கடந்த காலத்தின் கீழ்ப்பாகமற்ற பாதாளம் இருக்கிறது, முன்னால் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் எதிர்காலம் இருக்கிறது.. எதை வைத்து இந்த வாழ்வை கவலையாக்குகிறாய் முட்டாள் மனிதனே..
 
 
 நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை.. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது, சந்தோஷம் மனதில் இருந்தே வருகிறது.
 
 
 இந்த வாழ்வில் மன்னிக்க ஏதாவது இருந்தால் உடனே மன்னியுங்கள், மன்னிக்காமல் போவதைவிட மெதுவாகவேனும் மன்னிப்பது நல்லது. 

நேரம் நிற்காது

 
 
 
 
வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே..
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது..
வாழ்க்கை இருண்டது சிக்கலானது என்றாலும் கலங்காதே..
நேரம் நிற்காது உன் துக்கத்திற்காக தாமதியாது..
இன்றைய கசப்பு நாளை கடந்த காலமாகிவிடும்..
அழாதே.. புதிய நம்பிக்கை.. புதிய கனவுகள்.. புதிய முகங்கள்..
இன்னும் பிறக்காத வருடங்களில் அனுபவிக்காத சந்தோஷங்கள் உள்ளன..