முகப்பு

dimanche 27 février 2011

நிழல்


நீரில் விழுந்த நிழல்

நனைந்து விடுமா?

நெருப்பில விழுந்த நிழல்

வெந்து விடுமா??

குழியில் விழுந்த நிழல்

புதைந்து விடுமா???

நான் உனக்கொரு நிழலல்லவா...

நீ தான் என்றும்

என் நிஜமல்லவா.......

குற்றம


நிலவு இரவை எதிர்பார்கிறது

சூரியன் பகலை எதிர்பார்கிறது

மேகம் காற்றை எதிர்பார்கிறது

பூமி மழையை எதிர்பார்கிறது

நான் உன்னிடம் காதலை எதிர்பார்ப்பதில்

...மட்டும் என்ன குற்றம.!!!

samedi 26 février 2011

நினைவில் வை


ஆசை அளவாக வை..

அழகை விலையாக வை..

மனதை நிலையாக வை..

பாசத்தை உறுதியாய் வை..

நட்பை உண்மையாக வை..

ஆனால் அதில் என்னை மட்டும்..

உன் உயிராய் வை..

இதை என்றும் நினைவில் வை ...!!!

- புவனேஷ்..

பூக்கும்


காதலுக்கு

கவுரவம் கொடுத்துப் பார்

பூமத்திய ரேகையின் மத்தியிலும்

உன் முகவரி

பூவாய் பூக்கும்

அன்பே


அன்பே

என் கவிதை வரிகள்

வசீகரமானது உணமையானால்

எனது முயற்சி

மகுடம் சூட்டியது உண்மையானால்

என் இதயம் உன்னால்

ஒளிபெற்றது உண்மையானால்

நீ மட்டும் போதும்

என் இதயத்துக்கு

நினைத்ததெல்லாம் சாதிக்க...

vendredi 25 février 2011

என் இதய


என் இனிய கண்ணே

உன் நினைவலைகள்

என் இதய குடத்தில்

நிரம்பி வழிகிறது

அதன் மிச்சம் தான்

குளத்தில் விழுந்ததால்

தாமரையாக மலர்கிறது

காற்றுடன் கலந்ததால

தென்றல் ஆகிறது

காகிதத்தில் விழுந்ததால்

கவிதையாகிறது!!!!!!!!!

மகிழட்டும்......


வருகின்ற காலம்

வசந்த காலம் ஆகட்டும்

வீசுகின்ற காற்றெல்லாம்

தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்

மரங்களெல்லாம் சிரிக்கட்டும்

வருடுகின்ற மகிழ்ச்சியால்

மனமெல்லாம் மகிழட்டும்......

jeudi 24 février 2011

வாழ்க்கை


புன்னகைத்துப் பார்...

பூமி வசப்படும்!

முயற்சித்துப் பார்...

வானம் வசப்படும்!

காதலித்துப் பார்...

கவிதை வசப்படும்!

துணிந்து பார்...

வெற்றி வசப்படும்!

வாழ்ந்து பார்...

வாழ்க்கை வசப்படும்!

அவளுக்காக.....


பிறந்தது முதல்

பெற்றோருக்காக

திருமணம் முதல்

கணவருக்காக

தாய்மை முதல்

...பிள்ளைகளுக்காக

எப்போது அவளுக்காக.....???

வெற்றி


ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது.




முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.




mercredi 23 février 2011

பொருள்


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.




நிஜம்


இறந்த காலம் என்பது முடிவடைந்துவிட்டது, எதிர்காலம் என்பது கானல் நீர்போல விரட்ட விரட்ட நகர்ந்து போவது என்றுமே கைகளுக்கு வராதது. நிஜம் என்பது நிகழ்காலம் ஒன்று மட்டும்தான் (ஆகவே எதிர்காலம் ஒப்படைக்கப்பட முடியாதது என்பது பல மகான்களின் நூல்களில் காணப்படும் எளிமையான செய்தியாகும்.)


மகிழ்ச்சி


மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!

எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!



...“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

வீடு


திருக்குறளில் அறம் – பொருள் – இன்பம் – வீடு ஆகிய நான்கு விடயங்களையும் பேசவந்த வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று விடயங்களை மட்டும் பேசுகிறார். அவர் வீடுபேற்றைப்பற்றி ஒரு குறள்கூட எழுதவில்லை..

ஏன் ?

அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நெறிகளையும் நீங்கள் சிறுவயது முதலே சரிவரக் கடைப்பிடித்தால், வீடுபேறு தானாக உங்களுக்கு வரும். அது ஒரு நாளில் வழங்கப்படும் அட்சய பாத்திரமல்ல.. அது ஒரு நெடிய பணி..



தன்னம்பிக்கை


வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.


lundi 21 février 2011

உண்மை


உள்ளம் முழுதும்

உண்மை வைத்தால்

உன்னை வெல்ல

உலகில் எவருமில்லை

வெள்ளம் போலே

இன்பம் பொங்கும்

வேறு வாழ்வில்

ஏதுமில்லையே

பார்வதி அம்மா


நம் தமிழீழ தாயான

பார்வதி அம்மா

முந்தித்தவமிருந்து

முந்நூறு நாள்

சுமந்து

அந்தி பகலாய்

ஆதரித்த

எங்கள் அம்மா..

போய்வா…!



முன்னையிட்ட தீ

முப்புரத்திலே..

பின்னையிட்ட தீ

தென்னிலங்கையிலே..

அன்னையிட்ட தீ

அடிவயிற்றிலே..

நானுமிட்ட தீ

மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா –

கண்ணீர் அஞ்சலிகள்

dimanche 20 février 2011

கண்ணீர் அஞ்சலிகள்


தாய் மண்ணின் பெருமை ஊட்டிய

நம் தமிழீழ தாயான பார்வதி அம்மையே

உனக்கு கண்ணீர் அஞ்சலிகள்

vendredi 18 février 2011

காலப் புயல்!


உயிரிலே பின்னி

உறவில் கலந்து

பயிர்போல வாழ்ந்தோமே

தயிர்திரிந்து

கெட்டதுபோல் நம்

காதல் கெட்டழிந்து

மண்மீது

சட்டென

மாண்டதே சாய்ந்து!

எரிந்த மெழுகாய்

இதயம் உருகிப்

பிரிவை நினைத்துப் பிதற்ற

கரித்துண்டாய்

ஆனதடி நெஞ்சு;

அதிலே நெருப்பிட்டுப்

போனதடி காலப் புயல்!

இனிய செயலே

உனது இனிய வாழ்க்கை !

பொறுமையே

உனது ஆஸ்த்தி

நேர்மையே

உனது வெற்றி !

கோபம்

உனது எதிரி !

உழைப்பே

உனது உயர்வு !

அமைதியே

உனது ஆறுதல் !



வெற்றி


எப்போதும் முக மலர்ச்சியோடு இரு !

உன்னை வாட்டும் கவலைகளை சிரிப்பால் ஒழி.

எதையும் பரபரப்புடன் செய்யாதே !

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி

இவை மூன்றும் வெற்றியின் முக்கிய படிகளாகும்.



சுமை


புத்தகமும் ஒரு சுமைதான்

படிக்காத போது

குடையும் ஒரு சுமைதான்

மழை இல்லாத போது

பட்டமும் ஒரு சுமைதான்

வேலை இல்லாத போது

அழகும் ஒரு சுமைதான்

இரசிகன் இல்லாத போது

வாழ்வும் ஒரு சுமைதான்

சுவை இல்லாத போது

jeudi 17 février 2011

பிழைப்பதற்கு!


ஆசையாகப் பள்ளிவரை

புத்தகப் பையைச்

சுமக்கிறாள் சிறுமி

படிப்பதற்கல்ல...

பிழைப்பதற்கு!

amma


amma

Avalai nan nesikka villai,

Suvaasikiren...!

Valthu solla aval

en valkkail vanthaval alla...!

Valkkayai thanthaval...!

Thats ''Mother''.



mardi 15 février 2011

அன்போடு


அவமானத்துடன்
வாழ்வதைவிட
அன்போடு
சமாதியாகலாம்.




தன்னம்பிக்கை


தோற்கடிக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு

அழிவில் சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..!

காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..!

தன்னம்பிக்கையுடன் நின்றால் மீண்டும் வென்றுவிடலாம்.

உலகில் உள்ள மிக வலிமை

உள்ள ஆயுதம் தன்னம்பிக்கை தான்

அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.



lundi 14 février 2011

காதலர் தின நல் வாழ்த்துக்கள்


ர்ருயிர்

இணைந்து

ஓருயிராய்

ஒடுங்கும்

ஒர்

இராண்டாம்

உயிர்

பிறப்பே

காதல்

அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்

காதலர் தின நல் வாழ்த்துக்கள்

dimanche 13 février 2011

காதல்




உன்னோடு பழகிய போது தான் என் இதயம் நட்பின் வலிமையை அறிந்துகொண்டது உன்னோடு வாழ்ந்தபோது தான் என் இதயம் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டது இன்று உன்னை பிரிந்தபோது தான் என் இதயம் பிரிவின் வலியை உணர்ந்து கொண்டது

காதல் செய்யும் காதலர்களுக்கும்

காதல் தேடும் மாணவர்களுக்கும்

எனது இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்




vendredi 11 février 2011

தடை


நோயும் ஊனமும் உடலுக்குத்தான் தடை மனதிற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்.




jeudi 10 février 2011

மனிதனுக்கு அழகு !


இயற்கை அழகு !!

சுட்டெரிக்கும் சூரியனும்

அந்தியில் அழகு !

தேய்ந்து போகுமென்றாலும்

பால் நிலா அழகு !

வீழ்கின்ற போதிலும்

மலை அருவி அழகு !

ஓயாமல் ஓசை எழுப்பினாலும்

அலைகடல் அழகு !

வளைந்து நெளிந்து போனாலும்

நதி நீர் அழகு !

கருத்து போய் இருந்தாலும்

மழை மேகம் அழகு !

இயற்கை அழகை

 பாதுகாத்தல்

மனிதனுக்கு அழகு !

mercredi 9 février 2011

கல்யாணம்


கணவனை அடக்க மனைவியும், மனைவியை அடக்க கணவனும் போராடுவதல்ல கல்யாணம். கணவன் மனைவி இருவரும் ஒருரை ஒருவர் தெய்வீக பிம்பங்களாக கருதுவதே அதன் இறுதி நிலை. கணவன் – மனைவி இருவரும் தவறு செய்யாத, தவறு செய்தாலும் மன்னிக்கும் பருவம் இதுவாகும். இந்த நிலையை அடையும் போதுதான் வாழ்க்கைக்கு புது அர்த்தம் ஏற்படும்.




வாய்ப்பு


வாய்ப்புக்களுக்காக காத்திருக்காதீர்கள், தேடிவரும் வாய்ப்புக்களை நழுவ விடாதீர்கள், தேவைப்பட்டால் வாய்ப்புக்களை நீங்களே உருவாக்குங்கள். ஒவ்வொரு வாய்ப்பும் உங்கள் உயர்வுக்கான இன்னொரு வாய்ப்பை தன்னுள் கொண்டிருக்கும்.




mardi 8 février 2011

அழகு


நிலவால் இரவுக்கு அழகு !

இரவால் நிலவுக்கு அழகு !

இரண்டும் சேர்ந்து வானத்திற்கு அழகு !

தாமரையால் தண்ணீருக்கு அழகு !

தண்ணீரால் தாமரைக்கு அழகு !

இரண்டும் சோந்து தடாகத்திற்கு அழகு !

அதுபோல நல் மாணவரால் ஆசிரியருக்கு அழகு !

நல்லாசிரியரால் மாணவருக்கு அழகு !

இருவராலும் பாடசாலைக்கு அழகு !



இளைஞனே !


இளைஞனே !

நதியாக நட சமுத்திரத்திலே சங்கமிக்கலாம் !

சத்தியத்தை நம்பு சரித்திரத்திலே எழுத்தாகலாம் !

இமயம் நீ – தாழ்வு உனக்கு இல்லை !

கதிர் நீ – குளிர் உனக்கு இல்லை !

வானம் நீ – சுருக்கம் உனக்கு இல்லை !

மகாநதி நீ – சோர்வு உனக்கு இல்லை !

சமுத்திரம் நீ – ஓய்வு உனக்கு இல்லை !

அண்டம் நீ ! உலகம் நீ ! சக்தி நீ !

அண்டசராசரங்களும் நீ !

விதியால் உன்னை என்ன செய்ய முடியும் ?

விதியைப் பொசுக்கி சாம்பலாக்கு !

சந்தோசம்

போராட்டம் என்பது புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பது சிறப்பல்ல, பலத்தை புனித வழியில் செயற்படுத்துவதே போராட்டத்திற்கு சிறப்புத்தரும்.
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
தேவையற்றவர்களின் தேவையற்ற புலம்பல்களில் கவனத்தைச் செலுத்தி தேவையான விடயங்களை கைவிட்டு விடாதே.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்கள் சந்தோசம் சுற்றி வரட்டும், சந்தோசம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது.



lundi 7 février 2011

வரவே வராது.


நீங்கள் பேசிய பேச்சு !

தவறவிட்ட சந்தர்ப்பம் !

நீங்கள் இழந்த ஒரு கணம் !

இவை மூன்றும் திரும்பி

வரவே வராது.



வார்த்தைகள்


கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.




வாழ்க்கை


அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.

ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.



mardi 1 février 2011

471. - திருக்குறள்




வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

Weight justly the difficulty of the enterprise, thy own strength and the strength of thine enemy, and the strength also of your allies: and then enter thou upon it.



நீங்கள்


எது சரியென்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களோ அதை முதலில் அவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களை பகிஷ்கரித்துவிட்டு மறுபுறம் அவர்களே உங்களை ஆதரிக்க வேண்டுமெனவும் எண்ணுவது அறியாமை.




உலகம்



நாம் பிறப்பதற்கு முன்பே இந்த உலகம் உருவாகிவிட்டது. எத்தனையோபேர் நெற்றி வியர்வை சிந்தி உருவாக்கிய இந்த உலகத்தில் நாம் பிறந்து அந்த வசதிகளை அனுபவித்துக் கொண்டு, நாமே எல்லாமென நினைப்பது அறியாமை. இந்த உலகம் என்ற தங்குமடத்தில் நாம் வெறும் பயணிகளே.




தீமை


தீமையை அழிப்பதற்காக நீயும் தீயவனாக மாறிவிடாதே. களைகள் உள்ள இடமெல்லாம் நெல்லைப் பயிரிடு தீயவை தானாக அழியும். தீயவனை அழிக்க நீயும் தீயவனாக மாறினால் நாளடைவில் அவனைவிட நீயும் தீயவனாக மாற வாய்ப்புண்டு.




முன்னேற்றம்


இயற்கையின் தடைகளை தாண்டினால் மட்டுமே மனிதனால் முன்னேற முடியும். உழைப்பினாலும் சிந்தனையாலுமே அது சாத்தியமாகும். அனைத்திற்கும் உழைப்பே அத்திவாரமாகும். கடின உழைப்பில்லாது முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகும்.




குமரி


எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள்.

தோல்விக்கான முக்கிய 25 காரணங்கள்.


தோல்விக்கான முக்கிய 25 காரணங்கள்.



01. வாழ்வில் இலட்சியமோ குறிக்கோளோ இல்லாமல் இருப்பது.

02. மற்றவர்களின் வேலைகளில் மூக்கை நுழைப்பது.

03. போதுமான படிப்பறிவு இல்லாதது.

04. சுய கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, உறங்குவது, வாய்ப்புக்களை அலட்சியம் செய்வது.

05. சராசரிக்கு மேல் குறி வைக்கும் குறிக்கோள் இல்லாதிருப்பது.

06. ஒருவன் தான் ஆரம்பிப்பதை கடைசிவரை விடா முயற்சியோடு தொடராமல் இருப்பது.

07. எதிர்மறை மனோபாவம் ஒரு பழக்கமாக இருப்பது.

08. எதுவுமே இல்லாமல் ஒன்றைப்பெற ஆசைப்படுவது, சூதாட்டம் போல கஷ்டப்படாமல் எல்லாம் வருமென எண்ணுவது.

09. முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பது, எடுத்த முடிவில் நிலையாக நிற்க முடியாமல் அடிக்கடி மாறுவது.

10. தவறான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ( உ.ம். – அழகுக்காக )

11. வரவையும், செலவையும் திட்டமிடாமல் இருப்பது.

12. திட்டமிட்டு நேரத்தை பயன்படுத்தாமலிருப்பது.

13. விசுவாசமாக இருக்க வேண்டியவரிடம் விசுவாசம் இல்லாமல் இருப்பது.

14. கட்டுப்படுத்த முடியாத தலைக்கனம் திமிர்.

15. அடுத்தவர்களை பழிவாங்க நினைப்பது.

16. அடுத்தவர் உறவுகள் பற்றி தீய வதந்தி பேசும் பழக்கம்.

17. பிரபஞ்ச அறிவு இருப்பதை நம்ப மறுப்பது.

18. நல்ல பலன்களை பெற எப்படி பிரார்த்திப்பதென தெரியாதிருப்பது.

19. தனக்கு தேவையான அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது.

20. சொந்தக் கடன்களை திருப்பித் தருவதில் அக்கறையற்று இருப்பது.

21. பொய் பேசுவது அல்லது உண்மைகளை திரித்துப் பேசுவது.

22. வேலைகளை தள்ளிப் போடுவது.

23. திருப்பிச் செய்யாமல் அடுத்தவரிடம் மீண்டும் உதவி கேட்பது.

24. வியாபாரத்தில் தொழில்களில் வேண்டுமென்றே நேர்மையற்று நடப்பது.

25. பொய் பேசுவதை தேசியப் பழக்கமாகக் கொள்வது. இவைகள் அனைத்தும் முக்கியமான 25 காரணிகளாகும்.