முகப்பு

dimanche 30 janvier 2011

ஞானமுள்ள வார்த்தை



போராட்டமான நேரத்தில் மனிதனுக்கு உதவக்கூடிய வாசகத்தை கண்டு பிடிக்கும்படி ஒரு ராஜா ஐந்து அறிஞர்களை கேட்டார். அவர்கள் கண்டறிந்து சொன்ன மந்திரம் இதுதான் – இது கூட கடந்து சென்றுவிடும் - இதோ அந்த மந்திரப் பாடல் :

துயரத்தில் இருக்கிறாயா தோழா ?

உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்

ஆறுதல் கொள் இதுகூட கடந்து சென்றுவிடும்.


மேன்மையடைந்துவிட்டாயா சந்தோஷத்தில் தள்ளாடாதே

மனதைக் கட்டுப்படுத்து இதுகூட கடந்து சென்றுவிடும்.

ஆபத்தில் இருக்கிறாயா ? மனம் அலை பாய்கிறதா ?

நம்பிக்கை கொள்..! இதுகூட கடந்து சென்றுவிடும்.

போரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா ?

ராஜாபோல திரிகிறாயா ? இதுகூட கடந்து சென்றுவிடும்.

நீ யாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும்

இந்த ஞானமுள்ள வார்த்தையைக் கேள் இதுகூட கடந்து சென்றுவிடும்.



mardi 25 janvier 2011

வைரங்கள்



உன் நேரத்தை பாதுகாத்துகொள்

அவை தீட்டப்படாத வைரங்கள்.



lundi 24 janvier 2011

வெகுமதி


ஏழ்மையால் வருந்திய பாடகன் ஒருவன் தற்கொலை செய்ய மரக்கிளையில் தூக்கிட்டுத் தொங்கினான். அவனை அந்த வழியால் வந்த அரசன் காப்பாற்றினான். உயிர் தப்பிய அவன் அரசனைப் புகழ்ந்து இனிய குரலில் பாடினான். பாடலைக் கேட்டும் அரசன் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை. நீ என்னைவிட பணக்காரன், உன் குரலால் பாடினால் உலகம் முழுவதற்கும் நீயே முடிசூடா மன்னன் என்றான். தற்கொலை செய்யச் சென்றவன் பெரிய பாடகனாக மாறினான். உயிரின் வெகுமதியை உணர்த்தவே அரசன் தனக்கு வெகுமதி எதையும் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தான்.




தண்ணீர்


தண்ணீருக்கு ஒரு தன்மை உண்டு, அது யாருடன் சேருகிறதோ அதுவாக மாறும். சந்தனத்துடன் சேர்ந்தால் திலகமாகும், மண்ணுடன் கலந்தால் சேறாகும். இதுபோலவே பிள்ளைகளின் நடத்தையும் அவர்கள் யாருடன் சேர்ந்துள்ளனர் என்பதே தீர்மானமாகும்.




jeudi 20 janvier 2011

மனித வாழ்வு


சொல்லில் சுத்தமும்

சிந்தனையில் நேர்மையும்

செயலில் துணிவும் கூடவே

மற்றவர்களையும் தம்மைப் போல்

மதிக்கும் தன்மையையும் வளர்க்கவேண்டும்...



லட்சியம் இல்லாத மனித வாழ்வு

ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது

mercredi 19 janvier 2011

அன்பை


அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு

அறிவை பெருக்குவதில் பேராசைக்காரனாக இரு

முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாக இரு

கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு

எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு

பணம்


பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது

பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது

பெண்சாதி


அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
The one who is capable of converting half a coin into a thousand gold coins is a wife, and the one who is capable of reducing a thousand gold coins to half a coin is also a wife.
Explanation:
This why people say marriage is made in heaven. If you have a good wife you have agood fortune, if you have a bad one you are doomed.

” All women are good : good for something or good for nothing.”

நெய்


உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .

While he was alive they couldn’t not afford one spoonful of ghee, now they spend nine spoons of ghee for the cermonial fire.
Explanation:
Addressed to people who cant afford thing but still do it to please others. Here a family which couldnt afford a spoon of ghee now spends nine spoons for the death cermony just to put a show to others and please others who come for the cermony. Most marraiges in India are done this way. When family cant afford much money they get loans and arrange a grand marraige.



mardi 18 janvier 2011

முகம்


நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
Pay 4 times to buy the friendship of a good man , pay 10 times to annul your friendship with a bad man.

தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.

A child that has not seen the face of the mother and the crop which has not seen the rain would never prosper.
Proverb to tell importance of rain and mother!

lundi 17 janvier 2011

பிரித்து


என்னுள் கலந்தவள் நீ

என்னை கரைய வைப்பவள் நீ...

என் மூச்சுக் காற்றில்

கலந்தவளே நீ பிரிந்து

பிரித்து விடாதே...

கொடியது

 
உண்மையான காதல்,

எண்ணத்திலே மலர்ந்து

உள்ளத்திலே

இடத்தை தேடிக்கொள்ளும்.

இன்பத்தின் இனியதும்

துன்பத்தின் கொடியதும் காதலே.

வாழ்க்கையில்



வாழ்க்கையில்

விடை தெரியாத பல வினாக்கள் உண்டு

முற்று பெறாத சில வரிகளும் உண்டு

உன் நண்பனுக்காக


உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

dimanche 16 janvier 2011

நம்பிக்கை


நம்பிக்கை இருக்கும் இடத்தில் வீரம், மனோபலம், விடாமுயற்சி, வலிமை எல்லாமே இருக்கிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமேயல்லாது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
 இன்றும் நீ உயிருடன் இருக்கிறாய் என்றால் ஒரு நோக்கத்திற்காகவே இறைவன் வாழ வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்.


கூடவே கூடாது


நேரத்தின் உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சோர்வு, சோம்பேறித்தனம், தள்ளிப்போடுதல் கூடவே கூடாது. இன்று செய்ய முடிந்ததை நாளை தள்ளிப் போடாதீர்கள்.

mercredi 12 janvier 2011

தை திருநாள்

pongal Tamil Greetings
மங்களம் மலரும் பொங்கல்

மனம் மகிழும் பொங்கல்

இனிக்கின்ற செங்கரும்பாய்

பிறக்கின்ற தைப்பொங்கல்

தமிழர்கள் போற்றி மகிழும்

கதிரவனின் தைப்பொங்கல்

ஆனந்தம் பொங்கி மகிழும்

ஆதவனக்கோர் இனிய பொங்கல்

தரணியெங்கும் பொங்கிடும்

தமிழர்களின் திருநாளாம்

தை திருநாள்.

பொங்கலில் பொங்குதுவே

தைத்திருநாளாம் தமிழர் பொங்கல் தனில்

தரணி எங்கும் பொங்கிடுவோம் வாரீர்
Happy Pongal



mardi 11 janvier 2011

நண்பன்


*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

*பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
(thank u aarthy)

vendredi 7 janvier 2011

கண்ணே


என் இனிய கண்ணே

உன் நினைவலைகள்

என் இதய குடத்தில்

நிரம்பி வழிகிறது

அதன் மிச்சம் தான்

குளத்தில் விழுந்ததால்

தாமரையாக மலர்கிறது

காற்றுடன் கலந்ததால

தென்றல் ஆகிறது

காகிதத்தில் விழுந்ததால்

கவிதையாகிறது!!!!!!!!!

jeudi 6 janvier 2011

பயன்


விருட்சம் ஒன்று

விறகுக்காக...வெட்டப்பட்டு

அடுப்பில் எரிந்து சாம்பலானது

விதை ஒன்று

சிதையில் விழுந்து

விருட்சமாகாமலேயே

சாம்பலானது

பயனாகி மடிந்தது ஒன்று

பயனின்றி முடிந்தது ஒன்று

இருப்பினும்

சாம்பலின் பயன் ஒன்று தான்

அன்னை


அன்னை என்னும் மூன்றெழுத்து

எம் வாழ்வில் பரிசாய் கிடைத்த உயிரெழுத்து

அவள் பாசம் என்றும் பொய்க்காத மெய்யெழுத்து

உறங்கிய வாழ்க்கையை உசுப்பி

உலகில் எனை மனிதனாக்கிய உறவு அவள்

என்றும் அவள் ஒளிரும் சூரியன்

அம்மா! அம்மா!! அம்மா!!!

அம்மா


அம்மா என்பது ஒரு அற்புதமான வார்த்தை அதில் ஆயிரம் அர்த்தங்கள்

அன்பையும் கருணையையும் நமக்கு கற்றுத்தருபவள்

தோல்வியில் துவளும் போதும் வெறுமையில் வாடும் போதும் எம்மை அணைத்துக்கொள்பவள்

செல்லும் வழியும் தெரியாமல் அடையும் இலக்கையும் அறியாமல் தடுமாறும் எமக்கு கலங்கரை விளக்காய் துணை நிற்பவள்

நம் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியாக தோள் கொடுப்பவள்

எத்தனையோ அதிசயங்கள் ஒரே இடத்தில அது அம்மா

எந்த பெருமையும் இல்லாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரே உலக அதிசயம் அவள், அம்மா

mardi 4 janvier 2011

அமிழ்தம்


தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.

விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

dimanche 2 janvier 2011

மகிழ்ச்சி


வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!

எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!

“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

samedi 1 janvier 2011

2011 ஆம் ஆண்டு

2011 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரத்தில் 4ஆம் பாதத்தில் பிறக்கிறது. விசாகம் நட்சநத்திரத்தை தீதுரு விசாகம் என்று சொல்வார்கள். அதாவது தீமையைத் தரக்கூடியது. அதன்பிறகு அந்தத் தீமையை அழிக்கக் கூடியது என்று சொல்வார்கள்.

பாய்தனில் படுத்தோர் தேறார், பாம்பின் வாய் தேரைதானே, வழிநடை போனார் மேலார் இவர்களெல்லாம் விசாக நட்சத்திரத்தில் புதிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் விபத்துகள் வந்து சேரும். அல்லது அந்தப் பயணம் வெற்றிகரகமாக இருக்காது. ஒரு குறிக்கோளுக்காக பயணம் செய்தால், அந்தக் குறிக்கோள் நிறைவடையாது. தோல்வியில் முடியும். அதனால்தான் வழிநடை போனோர் மேலார்.
அதற்கடுத்தது பாய்தனில் படுத்தோர் தேறார். உடம்பு முடியாமல் விசாக நட்சத்தில் படுத்தால் அவர்களை நிச்சயமாக காப்பாற்ற முடியாது. விசாக நட்சத்திரம் நடக்கும் நாளில் மருத்துவமனையில் சென்று படுத்துவிட்டால், பிழைப்பது கடினம். இதுபோன்ற நட்சத்திரத்தில்தான் இந்த வருடம் பிறக்கிறது. இது பெரிய பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கக்கூடியது. எங்கு பார்த்தாலும் சச்சரவுகள், பிரச்சனைகள் என்று எல்லா இடங்களிலும் மாறி மாறி இருக்கும்.
அதற்கடுத்தது, நீதி கிடைப்பது என்பது கடினம். நீதியின் கரங்கள் வளைக்கப்படும். நீதிக்கும், அதிகாரத்திற்கும் இடையே யுத்தம் நடக்கும். நீதிபதிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடக்கும். நீதிபதிகள் கடுமையாகப் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். பல அச்சுறுத்தல்களையும் தாண்டி அவர்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். இது எல்லோராலும் முடியாது. வலுவான கிரக அமைப்பு உள்ள நீதிபதிகளால்தான் அதிகாரத்தில் இருப்பவர்களில் அத்துமீறல்களையும் தாண்டி நீதியை நிலைநாட்ட முடியும். இதுபோன்று, இந்த வருடத்தில் பிறக்கக்கூடிய யுத்த நட்சத்திரமான விசாக நட்சத்திரம் கொடுக்கும்.
முருகப் பெருமான் கார்த்திகை, உத்திரம், விசாகம் என்று மூன்று அவதாரங்கள் உண்டு. அதில் சூரனை சம்காரம் செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த நட்சத்திரம் விசாக நட்சத்திரம். சம்கார நட்சத்திரம். என்னதான் அதிகார பலம், பண பலம் வந்து ஒரு பக்கம் மோதினாலும் இறுதியில் நீதி ஜெயிக்கும். அதனை இந்த 2011ல் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அது கொஞ்சம் காலம் கடந்து நடக்கும், ஆனால் நடக்கும்.
அதற்கடுத்ததாக மழை போன்றதெல்லாம் வழக்கம் போல இருக்கும். பருவம் தவறிய மழைதான் இருக்கும். மகசூல் ஒரு பக்கம் அதிகரித்தல், இன்னொரு பக்கத்தில் இயற்கை சீற்றங்களால் மகசூல் அழிவது போன்றதெல்லாம் இருக்கும். கார்த்திகை போனால் கடும் மழை இல்லை என்றெல்லாம் சொல்வார்களே, அதெல்லாம் போய், மார்கழியிலும் கடும் மழை பொழியும்.
இதுபோன்ற பழமொழிகள் ஏன் பொய்த்துப் போகிறது?
காலப் போக்கில் கிரகங்களுடைய அமைப்புகள், சுழற்சிகள் எல்லாமே மாறி வருகின்றன. அது மாற மாற இயல்பாகவே இதுபோன்ற மாற்றங்கள் வரும். இது இல்லாமல், மக்கள், ஆள்பவர்கள், உலகெங்கிலும் நாட்டை ஆள்பவர்கள் ஆகிய காரணிகள், தனி மனித ஒழுக்கம் இதையெல்லாம் சார்ந்து ஒவ்வொரு மழை தவறும் என்று சொல்வார்கள். மன்னன் அதவறினால் ஒரு மழை தவறும் என்று சொல்வார்கள். மழை பொய்க்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மழை அதிகம் பொழிந்து கெடுக்கும். காய்ந்து கெடுத்தது, பேய்ந்து கெடுக்கிறது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும்.
மனசாட்சிக்கு குறைவான சம்பவங்கள், பதவியில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தவறாக பயன்படுத்துவது – யாராக இருந்தாலும் – அதனால்தான் சில விஷயங்களை நாம் பார்த்து செய்ய வேண்டும். நீதித்துறை என்று சொன்னேனே அதற்காகச் சொல்கிறேன். இதுபோன்று இந்த வருடம் முன்னும் பின்னுமாக இருக்கும்.
மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி இருக்கும். உலகெங்கிலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி இருக்கும். கெட்டப் பழக்கங்களில் இருந்து தாண்டி வெளிவருவார்கள். அதற்கடுத்து, போராட்டங்கள் வெடிக்கும். ஏனென்றால், விசாகத்தில் வருடம் பிறப்பதால் எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றெல்லாம் இருக்கும்.
அதன்பிறகு, ஒடுக்கப்பட்டாகிவிட்டது என்று கூறப்படும் இயக்கங்களெல்லாம் மீண்டும் உயிர்த்தெழும். சில விஷயங்கள் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் விசாகம் இதுபோன்று மாற்றி மாற்றி அமைக்கும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!

 
தித்திக்கும் இந்நாளில் இன்புறுவோம் நட்போடு.!!
சுயநலம் இல்லாத பொதுநலம் கொண்டிடுவோம்.!!
சுற்றம் போற்ற சுகமாய் வாழ்ந்திடுவோம்>!!
நட்புக்கடலில் ஒன்றாக முக்குளிப்போம்.!!
எல்லோரும் புத்தாண்டில் வளம்பெற வாழ்த்திடுவோம்!!
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!