முகப்பு

samedi 31 décembre 2011

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!

 
தித்திக்கும் இந்நாளில் இன்புறுவோம் நட்போடு.!!

சுயநலம் இல்லாத பொதுநலம் கொண்டிடுவோம்.!!

சுற்றம் போற்ற சுகமாய் வாழ்ந்திடுவோம்>!!

நட்புக்கடலில் ஒன்றாக முக்குளிப்போம்.!!

எல்லோரும் புத்தாண்டில் வளம்பெற வாழ்த்திடுவோம்!!

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!

jeudi 29 décembre 2011

அவள் அழகு


கல்லில் சிலை அழகு

சொல்லில் தமிழ் அழகு

மானில் விழி அழகு

தேனில் சுவை அழகு

வானில் நிலவு அழகு

இளவேனிலில் தென்றல் அழகு

இதயத்தில் காதல் அழகு

காதலில் மாலை அழகு

மாலையில் மலர் அழகு

மலரில் மது அழகு

மதுவில் அருந்தும் வண்டு அழகு

புருவத்தில் வில் அழகு

புன்னகையில் முத்து அழகு

கண்களில் கயல் அழகு

கற்பனையில் கவிதை அழகு

கவிதையில் பொய் அழகு

பொய்யில் புதுமை அழகு

புதுமையில் அவள் அழகு
 
(Peratheepan Theepan)



mercredi 28 décembre 2011

மாறுமா இந்த நிலை....???


பட்டுடுத்தி
வரும் பெண்ணை
ஸ்ரீதேவி
என்றும்...
அதே
பெண்
வெள்ளை உடுத்தி வந்தால்
மூதேவி
என்கிறதே இவ்வுலகம்....
ஏன் இந்த நிலை.....
மாறுமா இந்த நிலை....???

"கல்லறைக்கு

என்
காதலி
கல்லறைக்கு
வருவாள் என்று....
சிந்தித்திருந்தால்
வந்திருக்க
மாட்டேன் "கல்லறைக்கு".......

mardi 27 décembre 2011

எழு தோழா


எறும்பு போல் வேகம் பெறுவோம்,
மனதில் நிலவை போல் காட்சி தருவோம் 
 உலகில் கதிரவனாய் இருப்போம் 
பகைவருக்கு சந்திரனாய் இருப்போம் 
நல்லவர்க்கு அமைதியாய் இருப்போம் 
நன்மைக்கு வேகமாய் நடப்போம்
கடமைக்கு துணிச்சலாய் இருப்போம் 
பூமிக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிவோடு எதையும் வென்றுவிடுவோம்
நாட்டிற்கு நம் தேசத்திற்கு 
எழு தோழா ,எழு தோழா, எழு தோழா 

வெற்றி


நீ பெரிசா நான் பெரிசாங்கறது
இல்லம்மா வெற்றி. நீங்க
ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற
வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும்
அவரும் புரிஞ்சுக்கணும்.
அதுதாம்மா வெற்றி.

lundi 26 décembre 2011

அழகு?


வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
வானிற்க்கு அழகு நிலவு தான்
அது போல புவியில் ஆயிரம் பெண்கள் இருந்தாலும்
என் வாழ்க்கைக்கு அழகு நீ தான்

அம்மா


அம்மா 
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்
“அம்மா ” என்று

இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

வாசகர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

vendredi 23 décembre 2011

தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு


தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு


ஆழ்ந்த தூக்கம் தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம்.
படுத்ததும் தூங்கிப் போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்.
சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும் போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும்.
சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரியவந்தது.
ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.
அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரியவந்தது. அதாவது சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.
சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப் போகிறார்களாம்.
இவை தவிர கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தமும் இங்கிலாந்து நாட்டவர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விடயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.



வாழ்வின் இறுதிதான்


ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.

lundi 19 décembre 2011

மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும்


மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.
திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே வளர்தெடுக்கப்படாவிட்டால் பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அவை நம்மை மகிழ்விக்காது. திருப்திப்படத் தெரியாதவனுக்கு தீர்வு என்னவென்று தெரியாது. சந்தோமான வாழ்வுக்கு ஒரு சிலதுதான் தேவை. அவை உங்களிடமே இருக்கின்றன, உங்கள் சிந்தனா முறையில் இருக்கின்றன.

கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.

ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுதான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.



வாழ்க்கை



வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது

மூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!


வாழையடி வாழையாக விழுந்த மனக்கோலங்களை நிமிர்த்த வேண்டும்…!

சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும்..!

குழப்பமுள்ள எண்ணங்களை திருத்த வேண்டும்..!

தளர்ந்துவிட்ட நம்பிக்கைகளை தூக்கி நிமிர்த்த வேண்டும்..!

தாழ்ந்துவிட்ட சுய மரியாதைக்கு உயிரூட்ட வேண்டும்..!

மூட்டமிடும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!

எதிர்ப்படுகிற தடைகளை தகர்க்க வேண்டும்..!



lundi 12 décembre 2011

ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

வேண்டும்!



நமக்குத்தான்

துயில் எழுப்புவதற்கு

சேவல்

கடிகாரம் எல்லாம்......

அந்த சூரியனுக்கேது?

கண்களில் முயற்சி

கைகளில்

நம்பிக்கை

மனதில்

இலட்சியம்

வேண்டும்!

dimanche 11 décembre 2011

தடையில்லை!



மரங்களின் வேர்கள் மண்ணோடு
மலர்களின் வாசனை காற்றோடு
உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு
உணர்வுகள் கலக்கட்டும் வானோடு


இப்படி பூமியில் பிறக்கும்வரை
இருந்தோம் கருவில் கண்மூடி
தொப்புள்கொடியை வெட்டியபின்
தானாய் வளர்ந்தோம் உறவாடி


உனக்கென உறவுகள் அவசியம்தான்
உயர்வுக்கு அலையும் உடனிருக்கும்
தனக்கென மட்டும் வாழாதே
திசைகள் எட்டும் திறந்திருக்கும்


வீடு மட்டும் நீயில்லை
வரவும் செலவும் நீயில்லை
கூடு பறவையின் இடமில்லை
குதித்துக் கிளம்பு! தடையில்லை!

mardi 6 décembre 2011

வேரில் இருந்துதான் பூ வருகிறது.


பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது.

மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.

சந்தோஷம்


நம்மிடம் என்ன இருக்கிறதோ அது போதுமான திருப்திகரமான அளவு இருப்பதாக திருப்தியடைவதுதான் உண்மையான சந்தோஷம். ஏனெனில் அப்படிப்பட்டவனுக்கு எதுவுமே தேவையில்லை. செல்வத்தாலோ புகழாலோ மேன்மைப்படுத்தவும், தாழ்வுபடுத்தவும் முடியாத மனத்தின் சமநிலைதான் சந்தோஷம். சந்தோஷமான மனிதனை ஆரோக்கியமான மனம்தான் உருவாக்கும்.




சந்தோஷம்


மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்

வாழ்க்கை


வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது.