முகப்பு

vendredi 7 février 2014

அது தான் வாழ்க்கை...!



நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!

.பலர்...



நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடிப்பவர்கள்...பலர்...!

உலகம்



உலகத்தில் உனக்கென யாருமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீ தான் உலகம்

அம்மா..



தூக்கத்தில் உன்னை பற்றி
நினைப்பவள் காதலி...
தூங்காமல் உன்னை
பற்றி நினைப்பவள்.
அம்மா..

தெளிந்து சொல்ல வேண்டும்.



சொல்வதல்ல முக்கியம் சொல்லப்படுகிற விடயத்தின் சாராம்சத்தை கேட்பவர் புரிந்து கொண்டாரா என்று அறிவது மிக முக்கியம். சொல்ல முன் எதையும் தெளிந்து சொல்ல வேண்டும்.

மதிக்கமாட்டார்கள்.



ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு பின் அதற்கு எதிர்மாறாக வாழ முற்பட்டால் மக்கள் அத்தகைய தலைவர்களை மதிக்கமாட்டார்கள்.

நினைப்பது மிக முக்கியமாகும்.



நீங்கள் நினைப்பது, சொல்வது, செய்வது எல்லாமே சரியென்று கருத வேண்டாம், மற்றவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்பதை உணர வேண்டும்.
உங்கள் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட மற்றவர் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மிக முக்கியமாகும்.

எதுவும் இல்லை.




மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் நீ உன் செவியை அடைத்துக்கொள்.

நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.

ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கை என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. தீய ஆசைகளை அடக்கியாளவில்லை என்றால் வாழ்வில் நின்மதியே இருக்காது.

குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

தண்ணீருக்குள் விழுவதால் நீங்கள் மூழ்குவதில்லை நீந்த முயற்சிக்காமல் இருக்கும்போதுதான் மூழ்குகிறீர்கள்

ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.