முகப்பு

vendredi 27 juillet 2018

முற்றுப்புள்ளி



தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கா விட்டால்!
வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்.

சொர்க்கமாகும்



தொலைபேசியிலும்
தொலைகாட்சியிலும்
தொலைந்து போகும்
நேரத்தை
குடும்பத்தோடு செலவிட்டால்
ஒவ்வொரு வீடும்
சொர்க்கமாகும்

வாழ்வில்



வாழ்வில்
எந்நேரமும் அடுத்தவனின் வளர்ச்சியையும்,
வீழ்ச்சியையும் விமர்சித்துக்கொண்டிருந்தால்.
நீ உன் நிலை மறந்து
தன்னிலை தவறிவிடுவாய்...

சோகம்



எத்தனை பெரிய சோகம் இருந்தாலும், அதன் சுவடே தெரியாமல் சிரித்து மறைப்பதில், ஆண்களை விட பெண்கள் கைதேர்ந்தவர்கள்..

காலங்கள்



காலங்கள்
கண்டிப்பாக
மாற வேண்டும்...
இல்லையேல்
சில காயங்கள்
மனதில்
மாறாமல்
போய் விடும்....!

வயதாகிவிட்டதா??


இப்பொழுது எல்லாம் யார்
நம்மை எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும்
ஒரு வெற்று புன்னகையுடன்
கடந்து விட முடிகிறது.
வயதாகிவிட்டதா??

mardi 24 juillet 2018

பிடி சாம்பல் வாழ்வு.


பிடி சாம்பல் வாழ்வு.
ஊர்வன நிற்பன நடப்பன பறப்பன
எல்லாம் பிடித்து உணவாக்கி
உலகாரோடு தன் கர்வம் காட்டி
உயிரான உறவில் வன்முறை செய்து
தானே பெரியவனென மகுடம் சூடி
வாழும் நாளில்
அருவருப்பாய்
அடுத்தவரை நோகடித்து
தான் மகிழ்ந்து -
இறந்த பின் தீயிட்டு
தருவார்கள்
பிடிச் சாம்பல்....

குறையும்..



கண்களைப் போல்
இதயமும் வெளியே
தெரிந்திருந்தால்...
பல ஏமாற்றங்கள்
குறையும்..

யாருக்காக



நீ யாருக்காக
அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ,
அவர்கள் வேறு யாருக்காகவோ
சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!

மனிதர்கள்



அடுக்களை நெருப்பில்
அன்னை எனும் தெய்வம்
அல்லாடிக் கொண்டிருக்க...
கற்பூர ,திரி,நெருப்பில்
கடவுளைத் தேடும் ..மனிதர்கள்

சிறந்த மனிதன்...


மற்றவரை அடக்கி
ஆழ்வதை விட
தன் மனதை அடக்கி
ஆள்பவனே
சிறந்த மனிதன்.....