முகப்பு

mercredi 30 mars 2011

நேர்மை



நேர்மையான வழியில் நேர்மறையாக சிந்தித்த காரணத்தால் மகாத்மா காந்தி என்ற தனி மனிதனால் இங்கிலாந்து சாம்ராஜ்யத்தையே வெல்ல முடிந்ததுஆனால் மகாத்மாவை விட பெரு வலிகொண்ட படைகளை வைத்திருந்த ஹிட்லரால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டதுகாந்தியிடமிருந்தளவு நேர்மை ஹிட்லரிடம் இருக்கவில்லை.


* தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.

dimanche 27 mars 2011

முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

வாழ்க்கை முறையாகும்


இப்படித்தான் வாழவேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதைவிட அதை நீங்களே வாழ்ந்து காட்டுவதுதான் பெற்றோருக்கான சிறந்த வாழ்க்கை முறையாகும்.

vendredi 25 mars 2011

மனிதன்.



அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, 
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், 
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, 
தன்னையறியாமல் தவறு செய்து, 
தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

jeudi 24 mars 2011

நட்பு



நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே...

அம்மா - நீ



அம்மா - நீ
காலையில் பூத்து
மாலையில் சருகாகும்
வாசமலர் அல்ல.
கணவனின் இல்லறத்தின்

இன்ப துன்பங்களை சுமந்து
அன்பு பண்புகளை அளித்த-எந்தன்
பாசமலர் நீ!

வாழ்க்கை


“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.

மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

dimanche 20 mars 2011

என் சுவாசம்



மலரோடு 
மரங்கள் 
அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது 
விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் 
எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி 
என் சுவாசம் நிறைந்திருக்கும்

நிலவு ரசிக்குமே



காற்றும் இங்கே 
கவிதை சொல்லுமே
கற்கள் கூட
கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே
பூக்கள் மலருமே
காதலின் ஊடலை
நிலவு ரசிக்குமே

vendredi 18 mars 2011

அம்மா



அம்மா
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்.......

பாசமலர் நீ!



அம்மா - நீ
காலையில் பூத்து
மாலையில் சருகாகும்
வாசமலர் அல்ல.
கணவனின் இல்லறத்தின்
இன்ப துன்பங்களை சுமந்து
அன்பு பண்புகளை அளித்த-எந்தன்
பாசமலர் நீ!

முதியோர் இல்லம்



ஆயுள் முடியும் காலத்தில்...



ஆயுள் முடியும் வரை........



ருசி பார்க்க பற்களில்லை


தோள் கொடுக்க தோழர்கள் இல்லை


ஆதரவாய் பேச பிள்ளைகள் இல்லை

முதியோர்களுக்கு கிடைத்தது

முதியோர் இல்லம் என்னும்

திறந்த வேலி சிறைவாசம் !

mardi 15 mars 2011

அமைதியின் சின்னம்


மயிலைப் போல அழகிய தோகை வேண்டும் என்று புறா இறைவனிடம் கேட்டது. அப்போது இறைவன் சொன்னார், ஏற்கெனவே உனக்கு அமைதியின் சின்னம் என்ற பெயர் இருக்கிறது. அதைவிட பெரிய அழகு உலகில் இருப்பதாக கருதுகிறாயா என்று கேட்டார். புறா அப்போதுதான் தன் அழகைக் கண்டு கொண்டது. மற்றவர் புகழுக்கு ஆசைப்படாது தனக்கு இறைவன் தந்த அழகைக் கண்டு கொண்டால் ஆலயம் போக வேண்டியதில்லை, ஆண்டவனையும் தேட வேண்டியதில்லை.

நேரத்தை



ஒவ்வொரு விநாடியும், மணித்துளியும், நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக பலனின்றிக் கழிந்த பிறகுதான் வீணாகிப்போன நேரத்தை உணருகிறோம். நேரங்கள் வீணாகும் முன்னரே அதைப்பற்றி சிந்தியுங்கள்.

பொருள்.



பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

dimanche 13 mars 2011

அம்மா


உனக்குள் என்னை உருவாக்கி ..எனை உலகத்துக்கு அறிமுக படுத்திய உன்னை ...உதாசீனம் செய்தபோது கூட சுமைகளை சுகமாய் ஏற்று ...உன் இறுதிவரை என்னை உன் மனசெனும் கருவில் மறுபடியும் என்னை சுமந்தவள் நீ ....அம்மா

அம்மா


♥ எனக்கு இதுவரை நீ

தாயாக இருந்து விட்டாய் ...

அம்மா இது போதும்

இந்த ஜென்மத்தில் ..

இரக்கமில்லா முதுமை முழுமையாய்

ஆட்கொண்டு விட்டதே உன்னை...

இன்று என் கண்ணிற்கு நீ குழந்தையாய் தெரிகிறாய் ...

வேறுவழியில்லை பெற்றவளே....

இனி நான் உனக்கு தாயாக போகிறேன்

samedi 12 mars 2011

வாக்கை


உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள்,

வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்

சிந்தனை


தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது

வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

vendredi 11 mars 2011

அன்றே சொன்னார் கவியரசர்.


அன்றே சொன்னார் கவியரசர்.


கருணாநிதி பற்றி கண்ணதாசன் கவிதை

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்மென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து



தன்சாதி

தன்குடும்பம்

தான்வாழ‌ தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌



பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்குவைத்து

தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள்முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாமாய‌ கதையுரைத்து



வகுத்துண‌ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கனவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

நட்பின் அருமை


நாட்கள் இருந்தபொழுது
 நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை 

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்


தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -???!!!!!

jeudi 10 mars 2011

கல்வி


குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.




சிறந்தது


கண்டிப்பிற்குப் பின்னால் இனிமையாக இருக்கும் தந்தை, இனிமைக்குப் பின்னால் கண்டிப்பாக இருக்கும் ஒரு தாய் இவர்களின் சேர்க்கையே சிறந்தது

மன அமைதி


சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.




தன்னம்பிக்கை


தோற்கடிக்கப்பட்டு,

கீழே தள்ளப்பட்டு அழிவில்

சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..!

காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..!

தன்னம்பிக்கையுடன் நின்றால்

மீண்டும் வென்றுவிடலாம்.

...உலகில் உள்ள மிக வலிமை உள்ள ஆயுதம்

தன்னம்பிக்கை தான்

அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.

mercredi 9 mars 2011

காட்சி..........


உலகின் கண்கள்

ஊனமானதால்

ஊர் பிரிந்த உறவுகள்

உடைமைகள் உறவிழந்து

உண்ணத்தானும் ஏதுமின்றி

இவர்கள் நடைபிணமாய்

நடக்கும் அந்தக் காட்சி..........

நெஞ்சை .........

எழுதமுடியவில்லையே............

காதல் வித்தை


உன்னைக் காணும் முன்

என் இதழ்கள கூட

பேசியதில்லை

உன்னைக் கண்ட பின்

என் இமைகளும் பேசுகிறதே

இது தான் காதல் வித்தையா

lundi 7 mars 2011

வாழ......


கற்றுக் கொடுத்தாய்

மலர்களுக்கு மணம் வீச

பறவைகளுக்கு

சிறகை விரிக்க

மேகங்களுக்கு

வான் மழை பொழிய

மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே

மனித நேயத்துடன் வாழ......

dimanche 6 mars 2011

நிலவு



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் 
மிதக்கவிட்டான்...!!


வசந்ததின் 
வாசல்வரை 
வழிகாட்டி சென்றவளே!
வழியில் நான் காத்திருக்க 
வழித்துனையோடு 
சென்றதேனோ.????

தேன்



செந்தமிழ் 
தேன் 
சொட்ட சொட்ட
பேசும் 
உன் நாவில்... 
என் பெயர் 
சொல்லி... 
பேசக்கூடாதா......?