முகப்பு

lundi 29 octobre 2012

காலம் கழிக்கிறார்கள்

 
 
அதிக உழைப்பு மனிதர்களை கொல்வதைவிட அதிக கவலையே அவர்களைக் கொல்கிறது, காரணம் மனிதர்கள் உழைப்பதைவிட அதிகமான நேரம் கவலைப்படுவதிலேயே காலம் கழிக்கிறார்கள். 

கொள்வாருமில்லை.

 
 
உண்மையில் இறையருள் என்பது எமது மனத்தைப் பொறுத்ததே. நெல் விதைத்து முள் கொள்வாருமில்லை முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை. 

சிறக்கட்டும்…

 
 
உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்..
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்..
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்..
கலகங்கள்.. போட்டி, பகை கடந்தாட்சி நடக்கட்டும்..
கல்லாமை, கடன், வறுமை களங்கங்கள் மறையட்டும்..
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞான ஒளி வீசட்டும்..
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்…

jeudi 25 octobre 2012

கவிதை

 
சொல் அழகு
கவிதை
சுவை தரும்
பொருள் அழகு
கவிதை
நெஞ்சைத் தொடும்
கருத்தழகு
கவிதை


பெறுவாய்.....

 
 
உண்மையான அன்பை
மற்றவர்க்கு
கொடுத்து பார்
அதை விட
அதிகமான அன்பை
ஒரு நாள் அவர்களிடம்
இருந்து பெறுவாய்.....


இடையில் வருவது!

 
 
* வாழ்க்கை என்பது
கணவனுக்கும் - மனைவிக்கும்
இடையில் வருவது!

* நம்பிக்கை என்பது
வெற்றிக்கும் - தோல்விக்கும்
இடையில் வருவது!

* காதல் என்பது
ஆணுக்கும் - பெண்ணுக்கும்
இடையில் வருவது!

* காமம் என்பது
மோகத்திற்கும் - தேகத்திற்கும்
இடையில் வருவது!

* கனவு என்பது
கண்ணுக்கும் - இமைக்கும்
இடையில் வருவது!

* நினைவு என்பது
நெஞ்சுக்கும் - இதயத்திற்கும்
இடையில் வருவது!

* வார்த்தை என்பது
உதடுக்கும் - உள்ளத்திற்கும்
இடையில் வருவது!

* கவிதை என்பது
கற்பனைக்கும் - கவிஞனுக்கும்
இடையில் வருவது!

* பயணம் என்பது
தூரத்திற்கும் - நேரத்திற்கும்
இடையில் வருவது!

* மரணம் என்பது
மண்ணுக்கும் - மனிதனுக்கும்
இடையில் வருவது!

 

முடியாமல் இருக்க செய்கின்றார்

 
 
 
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்...

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்

படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

...
அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்

 
 
சிரிப்பு வந்தால் சிரியுங்கள்....
நாளை அழுகை வரும் போது,
அப்போது அழுது கொள்ளலாம்...
கொஞ்சமாக சிரித்து,
கொஞ்சமாக அழுவதை காட்டிலும்,
 நெறைய சிரித்து நெறைய
அழுவது தான் நல்லது..........

நம்நட்பு......

 
 
மரணம் மறுக்கும் வரை ,
மண் மீது இருப்போம் .
 மறுக்கும் மறு கணமே ,
மண்ணில் நம்மை விதைப்போம் .
இடர்கள் இடறும்வரை ,
 இதயம் சுவாசிப்போம் -
இறந்தபின்னும் தொடரும்
நம்நட்பு......


mardi 23 octobre 2012

விஜயதசமி என்பதற்கு

 
Photo : ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூசை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூசை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூசை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
 
 
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண...
்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!


lundi 22 octobre 2012

நட்புத் தமிழ்

 
 
அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்


படித்ததில் பிடித்தது........)

 
 
விரிந்த மலரிடம்
விசாரித்தேன்
... வாழ்க்கை என்றால் என்ன ?
ஒரு நாளில் எல்லோர்க்கும்
ஒளி வீசும் புன்னகை காட்டி
தும்பிக்கு தேன் கொடுத்து
...

துடியிடையாளின் கூந்தலிலோ
தூங்கா இறை சிலையிலோ
தூரிகையாய் தூங்கி முடித்துக் கொள்வது வாழ்க்கை என்றது
வாயடைத்து நின்றேன்
வாய் பேசாத பூ வாழ்க்கை கண்டேன்
எத்தனை இனிமை இதனிடம் ?
மனிதனை மட்டுமல்ல
கடவுளையும் மணக்க வைக்கும்
மலரே உன் வாழ்க்கை எனக்கு வேண்டும் -
வரம் கொடு என்றேன்

(படித்ததில் பிடித்தது........)
 

 

நேசம்

 
 
நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!
பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!
இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!
மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!


நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 
 
கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்த...
மது இயல்பை மாற்றவில்லை.
கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.
 

 

mercredi 17 octobre 2012

எனக்கு

 
 

எனக்குள்
இருக்கும்
உன்
நினைவுகளுக்கு
மத்தியில்.......
வானம் கூட
புள்ளிதான்
எனக்கு.........


♥♥♥

 
 
அன்பே கரும்பை
கடித்தால் தான் இனிக்கும்
உன்னை பார்த்தாலே
இனிக்குதே

jeudi 11 octobre 2012

நட்பு...

 
 
விட்டு விலகுதல்
நட்பல்ல...
விட்டுக்கொடுத்தலே
நட்பு...

mardi 9 octobre 2012

இரு _!!

 
 
பழகும் வரை உண்மையாய்
இரு _!
பழகிய பின்பு உயிர்hய்
இரு _!!


நேரம் சரியாகிவிடும்

 
 
சந்தேகப்பட்டு வாழாதே...
சந்தேகப்படும்படியும் வாழாதே - ஏனெனில்
அன்பை பெறவோ கொடுக்கவோ நேரம் இருக்காது..
சந்தேகப்படவே நேரம் சரியாகிவிடும்...............


samedi 6 octobre 2012

தாலாட்டு

 
 
ஒவ்வொரு
தாயும் பாடகிதான் ....
அவள் ஈன்று எடுத்த
பிள்ளைக்கு தாலாட்டு
பாடும்போது...


ஆழம்

 
 
அம்மாவின் பாசம்
இருக்கும் வரை
அப்பாவின் அன்பு
வளரும் வரை
காதலில் வெற்றி
கல்யாணம் வரை
ஆனால் நட்பின்
ஆழம்
இறக்கும்வரை!

 

jeudi 4 octobre 2012

உலகில் இல்லை

 
 
 
இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .
அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .
 


துடிப்பு

 
 
நட்பு என்பது நடிப்பு அல்ல
நம் நாடி
துடிப்பு 

mardi 2 octobre 2012

மனித நேயத்தை

 
 
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
...
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை!