முகப்பு

mardi 27 septembre 2016

கடவுள்




    நினைத்தது நடக்கும்வரை
    அறிவே பெரிதாகத் தெரியும் !
    நினைத்தது நடக்காதவரை
    நம்பிக்கையே பெரிதாகத்
    தெரியும்!...
    எதிர்பாராதது நடந்துவிட்டால் 
    தெய்வம் பெரிதாகத் 
    தெரியும் !
    எதிர்பார்த்தது இடறப்பட்டால் 
    ஞானம் பெரிதாகத் தெரியும் !
    திறமை எப்போது செயல்இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
    பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும் !
    உன்னை உனக்குள் தெரியும்போது கடவுள் உன்னிடம் 
    பெரிதாகத் தெரிவார்!

மதிப்பு



    ஒரு முட்டைக்கு வெளியி
    லிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரை முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!

      சுடப்பட்ட தங்கம் நகையாகிறது.அடிக்கப்பட்ட செம்பு பாத்திரமாகிறது.உடைக்கப்பட்ட கல் சிலையாகிறது.அதுபோல் வாழ்வில் நீங்கள் பெறும் வலிகள் உங்களை மேலும் மதிப்பு வாய்ந்தவர்களாக்கும்.

பாயசம்



    'புதிதாக திருமணமான கணவன் மனைவியிடம்
    "Darling ஏதவது ஒரு Sweet செய்யேன்".
    "ஐயய்யோ, எனக்கு சமைக்கவே தெரியாது,இப்போதான் சமையல் புத்தகத்தை பார்த்து ஏதோ பன்றேன், வேணாங்க".
    "பரவாயில்லை கண்ணே,நீ என்ன பன்னாலும் எனக்கு ok தான்".
    சமையலரைக்குள் சென்றாள் புது மனப்பெண்....
    5 நிமிடம் ஆனது, 10 நிமிடம் ஆனது, 15 நிமிடமானது, திடீரென்று உள்ளிருந்து சப்தம் கேட்டது.
    பாயசம் ஒரு தரம், பாயசம் ரெண்டு தரம், பாயசம் மூனு தரம்...........
    .
    .
    கனவன் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தான்,
    கையில் சமையல் குறிப்பு புத்தகத்துடன் மனைவி!!!,
    .
    .
    "என்னம்மா சத்தம் போடுற",
    .
    .
    புத்தகத்தை நீட்டினாள்,
    .
    .
    .
    அதில் போட்டிருந்தது, 'பாயசம் கொதித்து முடித்தவுடன் ஏலம்போட்டு இறக்கவும், ...======

உன்னை வாழ விடாது..



    இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது....

மனம் தளராதே..



    நீ செய்யும் காரியம் தவறாகும் 
    நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,
    உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
    உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
    அவசியமானால் ஓய்வெடுத்து கொள்....
    ஆனால் ஒருபோது மனம் தளராதே..

    போது,

jeudi 22 septembre 2016

பெண்ணின் திருமணம்..!!



எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!
அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!
உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!
திருமண நாள் நெருங்க... நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!
நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!!
வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!
அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!!
விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!
அங்கே.. தங்கை தனது புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!
"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!
"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??
அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!
"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!
எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!
எங்கிருந்தோ குரல்..
"அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!
எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!
எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!
உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!
அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!
தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள்.
"அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!
அன்று இரவு...
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!
ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!
அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

jeudi 8 septembre 2016



    இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமானது இல்லை.....
    இன்று நமதாக இருப்பது நாளை வேறு ஒருவருடையதாகிவிடுகிறது...
    இது தான் இறைவன் நமக்களித்த உலகநியதியுமாகும்.....
    நான்.......எனது...... என்ற அகங்காரத்தை விடுவோம்!!

      எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

        பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது. 

          வாழ்க்கையில் யாரும் கற்றுத்தராத சில பாடத்தை 'தனிமை' புரியவைத்து விடுகிறது... வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று...!

            தனக்கு உதவி செய்யும் வரை நல்லவரென்றும், உதவி செய்யவில்லை என்றால் கெட்டவரெனும் நினைப்பது மனிதனின் சுபாவம்
            பூத்த மலரெல்லாம் ஆண்டவனின் சன்னதிக்கு வருவதில்லை.!