முகப்பு

mercredi 21 juin 2017

வன்மம் தவிர்ப்போம் !...



ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.
அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத்தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.
அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இர...ுந்தது?'
'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'
'பல் இருந்ததா?'
'இல்லை.'
'அதுதான் வாழ்க்கை..
வன்மையானது அழியும்,
மென்மையானது வாழும்.'.........
ஆம் நண்பர்களே !......வன்மம் தவிர்ப்போம் !...மென்மையான நல்ல குணத்துடன் வாழ்வோம் !.....

மனசு சஞ்சலப்படுகிறதா?



மனசு சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட...்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!


mardi 20 juin 2017

பழகிப் போகும்




இதுவும் கடந்து போகும் என்பதை விட
இதுவும் பழகிப் போகும் என்பதே
வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!

anpu


anpu


சரியான வழி பிறக்கும்!



கற்று கொண்டவை அனைத்தும் சரியானவை என கருதாதே! தவறு என கருதும் வேளையில் கற்று கொண்டதாயினும் நிறுத்தி கொள்
சரியான வழி பிறக்கும்!

vendredi 16 juin 2017

11 பேர்



வாழ்க்கைகால்பந்து விளையாட்டு போல!
நீங்கள் ஒரு கோல் அடிப்பதற்கு 10 பேர் உதவுவார்கள்.
11 பேர் எதிர்ப்பார்கள்

வாழ்வில் நம்பிக்கை கொள் !!



வாழ்வில் நம்பிக்கை கொள் !!
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....
காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.
அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய
சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.
சிறுவன் உடனே..‘
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .
'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது !!
நம்பிக்கை கொள் ! .வாழ்க்கை சிறக்கும் !

jeudi 15 juin 2017

நீ.... நீயாக


மற்றவர்களைப்பார்த்து அவர்களைப்போல் வாழமுடியவில்லையே என்று நீ வருந்துகிறாயா? நீ.... நீயாக வாழத்தான் பிறந்திருக்கிறாய்... மற்றவர்களாக அல்ல.

அழகாக



ஒரு சிலர் அழகான இடங்களைத் தேடிப்போகிறார்கள். மற்றவர்கள் இருக்குமிடத்தை அழகாக  மாற்றுகிறார்கள்..

உறவை



அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்
நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்...

samedi 10 juin 2017

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும்



அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன்
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

*வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

நண்பன்
காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

எப்பொழுதும் மாறாதவர்கள்
மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

உன்னத உறவு
பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள

vendredi 9 juin 2017

வாழ்க்கை



வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

காலம்


காலம் நதியை போன்றது...உற்பத்தியாகும் இடத்திற்கு அது திரும்பவே திரும்பாது....

பிரச்சினைகள்



வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”...
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும்.
அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிட்டு மற்ற வேலைய பாருங்க. படுக்கை செல்லும் முன் உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் மூட்டைகட்டி தூக்கி எறிந்து விட்டு தூங்கச் செல்லுங்கள். அதுவே சரியாயிடும்.

தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?



நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் நாம கடமைய மட்டும் தான் செய்யனும் அடுத்தவங்க விஷயங்கள் தெரியாம, புரியாம மூக்க நுழைக்க கூடாது
காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.
அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.
மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்.
மகரிஷியும் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.
மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உனக்கு உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.
இதைக் கேட்ட மன்னன் நடுநடுங்கி விட்டான்.
தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான்.
அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம் பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பிவைத்தான்.
இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.
இப்படியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தன. ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.
அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான்.
அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான்.
அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரியவரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசிக் கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.
மேலும் அடுத்த பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன். தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.
அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக் கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?

jeudi 8 juin 2017

உழைத்தால் வெற்றி தானே



கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது.
அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக
நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி
ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை
இட்டு அடைகாத்து வந்தது.

ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்த
படி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள்
பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின்
வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம்
பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு
மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது
முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல்
நான் உயிர் வாழ மாட்டேன்.

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது.
நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது.
கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம்
உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை
வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டு
விடலாம்.

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல
நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள்
முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை
எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம்.
மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு
போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல்
செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர்
மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில்
இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில்
இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று
தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து
இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய்
தொலைவில் கக்கின.

இப்படியே நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து
கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து
வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர்.
ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும்
அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது
கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல்
பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி
பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும்
எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே
என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார்.
உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா
நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது.
முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற
வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன்
துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை
உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது.
அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன.
குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன.
ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய்
வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா?
நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை
மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள்
முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை.
முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர்
என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது
பற்றியோ, எதுவுமே தெரியாது.
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று
ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே
போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின்
உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது,
குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல்
அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின்
உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
இனிய இளைஞனே! எல்லையில்லா ஆற்றல் பெற்றவனே!
இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை
சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள்.
வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான்
ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள்.
உழைத்து உருகும் மேகமே மழையாய்ப் பொழியும். உருகா மேகம்
புகையாய்ப் படியும்.
“மின்மினிப் பூச்சிகள் பறக்கும் போதுதான் சுடர் விடுகின்றன.
அதுபோல் மனிதனும் உழைக்கின்ற போதுதான் வெற்றியின்
விலாசத்தை அடைகின்றான்” என்பார் அறிஞர் பெய்லி.
வெற்றியைப் பெற உழைப்பைச் செய்யுங்கள். பத்து விரல்களையும்
மொத்தமாய்ச் சேர்த்து உவகையுடன் உழைத்தால் வெற்றி தானே
தேடிவரும்.
வேர்கள் மண்ணிற்குள் புதைந்திருப்பதற்காக வருந்துவதில்லை.
வேர்களின் சந்தோசம் கிளைகளின் சலசலப்பு. இனியும்
தாமதிக்காமல் எங்கெங்கே நீர் உள்ளதோ அங்கெல்லாம் உங்கள்
வேர்கள் நீளட்டும். தேடலே உங்கள் வேர்கள். உங்களின் தாகமே
வேர்களுக்கு வழிகாட்டும். பாறைகளையும் பிளந்து செல்லும்
சக்தி வேர்களுக்கு உண்டு.
“வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்பார் வள்ளுவப் பெருந்தகை.
ஆழத்தில் இறங்குங்கள், நீங்கள் எவ்வளவு ஆழங்களில்
இறங்குகின்றீர்களோ, அவ்வளவு உயரமாய் வளருவீர்கள்.

எல்லாம் அவன் செயல்



எல்லாம் அவன் செயல்.
அவன் இன்றி அணுவும் அசையாது என்று வாதிடும்
பலரை நாம் சந்தித்திரு க்கின்றோம்.
நடப்பதுதான் நடக்கும் என்று வாழ்நாளில் எதுவித
முயற்ச்சியும் செய்யாமல் சும்மா இருப்பது தவறான
செயல். இது கடவுளை சோதிக்கும் செயலுக்கு ஒப்பாகும்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கின்றது
கீதை!
நமக்குரிய கடமைகளை நாம் செய்யவேண்டும்
அதன் பாலபலன்களை நமக்கு தருவது இறைவன்
ஒருவனே!
நமது முயற்சி இன்மைக்கு கடவுளை காரனமாக காட்ட
முடியாது. பாலைவனத்தில் ஞானி ஒருவர் இருந்தார்.
அவர் பெரும் புகழ் பெற்றவர். தூர இடங்களில் இருந்து
அந்த ஞானியை தேடி மக்கள் வருவதுண்டு.
ஒருமுறை. அந்த ஞானியை பார்க்க ஒருவன் தன்
ஒட்டகத்தில் அவர் இருக்கும் இடத்திற்கு வந்தார்.
எப்படி வந்தீர் என்று அவரிடம் ஞானி கேட் டார் அவர்
ஒட்டகத்தின் மீது வந்தேன் என்றார்.
ஒட்டகம் எங்கே என்றார். கூடா ரத்திற்கு வெளியே
நிற்கின்றது என்றார். அதனை கட்டிப்போட்டிரா? என்று
ஞானி கேட்டார். இல்லை என்று பதில் வந்தது.
உடனே ஞானி கோபம் கொண்டு, முட்டாளே முதலில் உன்
ஒட்டகத்தை கட்டிப்போடு என்றார் ஞானி. அதற்கு வந்தவர்
எனக்கு இறைவன் மீது நம்பிக்கை உண்டு அவர் பாதுகாத்துக்
கொள்வார் என்றான்.
ஞானியோ முதலில் நீ ஒட்டகத்தை கட்டிவை,
இறைவனுக்கு நிறைய வேலை உண்டு உன் ஒட்டகத்தை
பாதுகாக்க அவருக்கு நேரம் கிடையாது என்று கூறினார்.
நம்மால் முடிந்தவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும்
முடியாத செயலை அவரிடம் விட்டுவிடலாம், தப்பே கிடையாது.
ஆண்ட‌வனிடம் நம்பிக்கை வையுங்கள் ஆனால் ஒட்டகத்தை
கட்டிவையுங்கள்

பெண்ணின்



பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி

பெண்ணின் முகம் எனது புத்தகம்

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்


பெண் மனம் பெறும் அறிவுக்கு ஏற்பவே மனிதனின்
அறிவும் வளர்ச்சியுடையதாயிருக்கும்

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப்
போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்


பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு
சுபீட்சம் அடையாது _

உலகின் பெரும் புதிர்களுள் ஒன்று பெண்-

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது


பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள்
பெரிதும் வெறுப்பவை _.

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு
பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத்
தெய்வங்களாக்குகிறது .

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்தலே குடும்ப இன்பத்தின்
அடிப்படை 

நல்ல பண்பு



பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு
பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத்
தெய்வங்களாக்குகிறது

இறந்த பிறகு என்ன நடக்கும்



வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
அது நடந்து முடிந்து விட்டது. அதைப்போல் வாழ்வைக் கண்டும்
அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.
அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.
ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. அது எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச
வேண்டும்?

”நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும்
சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை
சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.
அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.
அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன்,”
என்று எண்ணுங்கள்.
மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம்,
‘இறந்த பிறகு என்ன நடக்கும்?’ என்று கேட்டான். அதற்கு அவர்,
”இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில்
படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.
இப்போது ஏன் நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?”
என்றார்.

– ஓஷோ

சிலை



வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !

மதிப்பு



பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !

கஷ்டத்தை



சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

நிலைத்து விட்டால்


நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

lundi 5 juin 2017

வாழப்போவது



உன்னை நேசிப்பவர்களை வெறுக்க காரணம் தேடாதே ,அவர்களை இன்னும் நேசிக்க வாய்ப்புகளை தேடு.ஏனெனில் வாழப்போவது ஒரே ஒரு முறைதான்

வெறுப்பு



பிடித்த வாழ்க்கையை கற்பனையிலும். .விருப்பமில்லா வாழ்க்கையை நிஜத்திலும் வாழ்வது வாழ்க்கை மீதான வெறுப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது..!

“சொல் மகனே”



ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தான்.
"பாதர்... நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் மன்னிப்பு கிடைக்குமா?"
”சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்”
“பாதர், இரண்டாம் உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக் கொள்ள இடம் தந்து விட்டேன்”
“இதொன்றும் பாவமில்லை, நீ போகலாம்”...
“பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாங்கி விட்டேனே? “
“இது பாவம் தானென்றாலும், அவனைக் காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது”
“இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது பாதர்,,, ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி”
“சொல் மகனே”
“போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?”
“ ??????? !!!!!!!!!!!!!!!! ??????????????”

dimanche 4 juin 2017

உறவுகள்




வாழ்க்கையில் எது கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட சில உறவுகள் மட்டும் கிடைத்தால் போதும்..!!

'தனிமை'



வாழ்க்கையில் யாரும் கற்றுத்தராத சில பாடத்தை 'தனிமை' புரியவைத்து விடுகிறது... வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று...!

தவறு



நம்ம கண்ணீரை துடைக்க அடுத்த கைய எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் தவறு
உன்னைக் காயப்படுத்துவதும் உன் மனம்தான் உன்னைக் குணமாக்குவதும் உன் மனம்தான்

சிலரை தவிர..!!



நாம் சிரிக்கும் போது நம்முடன் இருபவர்கள் நாம் அழும் போது நம்முடன் இருப்பதில்லை.. ஒரு சிலரை தவிர..!!

அமைதி



உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.


கண்ணீரை ஏற்படுத்தும்.



பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

பிரித்திடும்...



அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்
நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்...

நடக்கும்.



ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை.
அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக
அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால்
நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

vendredi 2 juin 2017

ஒரு சிலரை தவிர..!!



நாம் சிரிக்கும் போது நம்முடன் இருபவர்கள் நாம் அழும் போது நம்முடன் இருப்பதில்லை.. ஒரு சிலரை தவிர..!!

பிறருக்கு



என்னை காயபடுத்திய எந்தவொரு வலியையும் பிறருக்கு நான் தந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன்

பிரிவும்



பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது

கால்



கை இல்லாதவனும் உழைக்கிறான் கால் இல்லாதவனும் உழைக்கிறான் இரண்டும் உள்ளவனே திருடுகிறான்.

சக்தி



உண்மையான அன்பு வைத்திருப்பவர் தவறுசெய்தால் மன்னிக்க முடியாவிட்டாலும் வெறுத்துவிடாதீர்கள்,வெறுப்பைதாங்கும் சக்திநிச்சயம் அவருக்குஇருக்காது

கல்வியும் செல்வமும்


கடுகளவும் குறையாமல் உன்னை காப்பாற்றும் இரண்டு விஷயங்கள்... நீ படித்து பெற்ற கல்வியும் நீ உழைத்து பெற்ற செல்வமும்...!

jeudi 1 juin 2017

kaka



மற்றவங்க பார்க்கிறமாதிரி பளபளப்பா வாழுறதை விட நமக்கு பிடிச்ச மாதிரி கலகலப்பா வாழனும் ...

இதுதான் வாழ்க்கை !!



சிக்கல்கள் என்பவை, 
ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் 
மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். 
இதுதான் வாழ்க்கை !!

மனிதன்



மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!