முகப்பு

vendredi 2 août 2013

நமது பொறுப்பாகும்.



வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.




நம்புங்கள், ஒருவர் உங்களை நம்பலாம் அல்லது உங்களிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
எப்படிப்பட்ட நண்பர் உங்களுக்கு அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிப்பட்ட நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.