முகப்பு

mercredi 29 février 2012

யாரைப்போய் கேட்பது...???

இலச்ச கணக்கான தமிழர்களை
ஈழ மண்ணில்
பறிகொடுத்தோம் - இந்திய
ஆயுதத்திற்கு இரையானோம்...

... போரை நிறுத்த வலியுறுத்தி
போராடி பார்த்தோம்
கத்தி கதறினோம்
காலில்கூட விழுந்தோம்
ஒரு பயனும் இல்லை
ஒழிக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்...

நம்மீது நடத்தப்படும்
இனவெறி படுகொலைக்கு
இதுவரை தீர்வு இல்லை
என்னவென்று சொல்வது
யாரைப்போய் கேட்பது...???


mardi 28 février 2012

நம்பிக்கை


பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.
 

lundi 27 février 2012

அழுதாலும் கூட


உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்,
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட...





'மனிதர்கள்'


கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்.
நெற்றியில் பட்டை... இட்டால் ஹிந்து.
தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.
ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.
கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.
... இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!
எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால்
நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் .....???


தீபம்


ஆசை என்னும் தீபம் அழிந்தாலும்...
அன்பு என்னும் தீபம் அழிவதில்லை...!

என் இனிய நட்பிற்க்கு


காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடும் ரோஜா மலராக நான் இருக்க விரும்பவில்லை ,என்றும் உங்கள் இதயத்தில் மலர்ந்து நிலையான அன்பினில் விளைந்த வாடா மலராக மனம் வீச விரும்புகின்றேன் என் இனிய நட்பிற்க்கு 

துணைக்கு வரும்



நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...

பயன்படுத்தாதீர்கள்....


புன்னகை செய்வதற்கு
மட்டுமே உங்கள் இதழ்களை
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம்
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்....

dimanche 26 février 2012

இதய துடி அல்லவா ஓசை

 
குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
  சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
  எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
  கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடி அல்லவா ஓசை!!!
(peratheepan)


புனிதமானது


காதலியோட முதல் முத்தம்
பூவைவிட மென்மையானது
அம்மாவோட முதல் முத்தம்
கடவளைவிட புனிதமானது...!!!


jeudi 23 février 2012

தைரியமும் விடா முயற்சியும்



தைரியமும் விடா முயற்சியும் இருந்தால் நீ உன் இலட்சியத்தை அடைவாய். எனவே உன் பாதையைத் தீர்மானித்து, அதில் தொடர்ந்து செல் ! என்ன நடந்தாலும் சரி கைவிடாதே.. ! தொடர்ந்து செல் விரைவில் நீ உன் இலட்சியத்தை அடைவாய். இதுதான் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புவோர்க்கு கொலம்பஸ் சொன்ன நற்செய்தி.

வெறும் கனவு



நிலவை போலவே ..,
 இரவும் சுகமானது ..!
 நிஜத்தை போலவே
 உன் நினைவுகளும்
 என்னுள் சுகமானது !!
 என்னுடன் நீ
 அருகில் இல்லாவிட்டாலும்
 உன் நினைவுகளுடன்
 வாழ்கிறது என் நிஜம் ...!!
 என் உண்மை காதல்
 நீ அங்கு தனியே உறங்கும் போது,
 இங்கு நான் உன்னோடு
 கனவு காண்கிறேன்
 என் கவிதை வரிகளோடு!!!!
 "போடி பைத்தியம்"
 ஆமாம் உண்மைதான் ..,
 நீ சொன்னாலும்
 சொல்லா விட்டாலும்..,
 அதிகம் பேசாமல்
 ஊமையாய் என் உதடுகள்
 உன் பெயரை மட்டும்மே
 வீணையாய் வாசிக்கிறேன்!!
 கொஞ்சம் பொருத்து கொள்
 விடிந்ததும் தெரிந்து விடும்
 நான் காண்பது
 வெறும் கனவு என்று !!!!!
(fadi anthony)

mercredi 22 février 2012

மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.


ஒருவன் தின்னாமல் குடியாமல் பணத்தைச் சேர்த்து குவித்தான். அவன் எதிர்பார்த்த பணம் சேர்ந்ததும் இனி செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கப்போவதாக துள்ளிக் குதித்தான். அப்போது அவன் முன் தோன்றிய கடவுள் முட்டாளே நீ இறப்பதற்கு மேலும் ஒரு மணி நேரமே இருக்கிறது என்றார்.
வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் கழித்தால் மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.

இறைவன்


மயிலைப் போல அழகிய தோகை வேண்டும் என்று புறா இறைவனிடம் கேட்டது. அப்போது இறைவன் சொன்னார், ஏற்கெனவே உனக்கு அமைதியின் சின்னம் என்ற பெயர் இருக்கிறது. அதைவிட பெரிய அழகு உலகில் இருப்பதாக கருதுகிறாயா என்று கேட்டார். புறா அப்போதுதான் தன் அழகைக் கண்டு கொண்டது. மற்றவர் புகழுக்கு ஆசைப்படாது தனக்கு இறைவன் தந்த அழகைக் கண்டு கொண்டால் ஆலயம் போக வேண்டியதில்லை, 

மற்றவர் பணிகளில் குறுக்கிடுவது தவறு

ஒவ்வொருவருக்கும் கடவுள் தனித்தனியான பொறுப்புக்களை வழங்கியிருக்கிறார். உங்களுக்கென்று அளித்த பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து உங்கள் பணியை செய்ய வேண்டும். அதை மறந்து மற்றவர் பணிகளில் குறுக்கிடுவது தவறு.

பயம்

ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. அவையாவன.
01.ஏழ்மை பற்றிய பயம்
02. குறை சொல்வார்களோ என்ற பயம்
03. உடல் நலம், வலி பற்றிய பயம்
04. அன்பின் இழப்பு பற்றிய பயம்
05. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம்
06. முதுமை பற்றிய பயம்
07. சாவு பற்றிய பயம்.
ஆறு பயங்களையும் வென்று,
கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே
உலகில் அதிகம்.

நம்பிக்கையும்


வாடுகின்ற இதயமும்..........
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
    வாடுகின்ற இதயமும்..........
வடிக்கின்ற கண்ணீரும்.......
நிச்சயம் ஒருநாள் மாறும்
உண்மையான அன்பும்......-
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் ...

உன் தாய்

 

ஆயிரம் சொந்தங்கள்
நம்மை சுற்றி
இருந்தாலும் -
சோகத்தின்
போது கண்ணீர் விடவும்
சாதிக்கும் போது
சந்தோஷம் படவும்
கடவுள் படைத்த
ஒரே ஜீவன்
உன் தாய்
மட்டும் தான்


இறைவன் வகுத்தது

எந்தப் பூ எந்தமாலையில்
சேரும் என்பதும்.
எந்த பூ இறைவன்
காலடி சேரும் என்பதும்
பூக்களின் விருப்பம் அல்ல
அது பூக்கும் முன்பே
இறைவன் வகுத்தது.


mardi 21 février 2012

குழந்தையின் கிறுக்கல்


மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.

இறைவனைக் காண்கிறோம்

மலர்களின் சிரிப்பில் மகிழ்ச்சியைக் காண்கிறோம்
மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்.


lundi 20 février 2012

துடிப்பதை அவன் செய்தான்

 
கோடி மனவருடகள் இருந்தாலும்
இநாடியில் ஆறுதல் தரும் நட்பே
காதலியிடம் சென்றேன்
அவள் கண்ணீரை கேட்டாள்
இறைவனிடம் சென்றேன்
அவன் காணிக்கை கேட்டேன்
குருவிடம் சென்றேன்
அவர் தட்சனை கேட்டான்
நண்பனிடம் சென்றேன்
அவன் கேட்கவில்லை
தன்னைத் தன்தான்
ஆம் ...இதயத்தை எனக்கு
தந்துவிட்டு
துடிப்பதை அவன் செய்தான்


பூக்கள் பூத்ததா?

 
 
தென்றல் வீசும் தெருவில்
பூக்கள் பூத்ததா?
இல்லை பூக்கள்
பூத்ததைக் கண்டு
தென்றல் வீசியதா?
... இசையைக் கண்டு பாடல் பிறந்ததா?
இல்லை பாடல் கண்டு இசை தான் பிறந்ததா?
வீணை கண்டு
விரல்கள் மீட்டியதா?
இல்லை விரல்களைக் கண்டு
வீணை பேசியதா?
கனவுகள் காணத் கண்கள்
பிறந்ததா இல்லை
கண்களைப் பார்த்ததும்
கனவுகள் வந்ததா?
இதழ்களைக் கண்டு
சிரிப்பு பிறந்ததா இல்லை
சிரிப்பைக் கண்டதும்
இதழ்கள் பிறந்ததா?(rose spellman)


பரிசு!!!

 
புல்தரையை மிதிக்காதே
அது பூமியின் பூரிப்பு,
பூக்களைப் பறிக்காதே
அது செடிகளின் புன்சிரிப்பு.
பெண்களின்
புன்னகையைப் பழிக்காதே
அது இறைவன் பெண்களுக்குக்
கொடுத்த பரிசு!!! (rose spellman)


dimanche 19 février 2012

உள்ளத்தால்


கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும்
மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு
உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......"

வைக்குது....!

ஒரு பெண்ணின் அழகு
பல ஆண்களை திரும்பி பார்க்க
வைக்குது...!
  ஓர் ஆணின் அறிவு பல
பெண்களை திரும்பி பார்க்க
வைக்குது....! 

மறக்காமல் இருக்கவேண்டுகிறேன்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
 நடந்த நினைவுகள் இல்லாமல் போகலாம்
நடந்ததை மட்டும் நினைத்திருந்தால்
 மனம் நிறைவில்லாமல் போகலாம்..
நடந்த வந்த தூரம் மறந்து போகலாம்
கடந்த வந்த துயரத்தை
 மறக்காமல் இருக்கவேண்டுகிறேன்

samedi 18 février 2012

அன்னையாய்.


மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.


கல்லறை

வெளியே வந்த பிறகு ,
உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ...
உள்ளே சென்ற பிறகு ,
வெளியே வர "முடியாதது , "கல்லறை.........
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

சொந்தம்

 தாகம் கொண்ட
பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும்
சொந்தம் .
மோகம் கொண்ட
பெண்ணுக்கு ,
காமம் மட்டும்
சொந்தம் .


யாவும் பேரழகு..!

திருமணம் அழகு -
மனமிரண்டும்
ஒன்றாயின்
இல்லறம் அழகு
துன்பம்நீக்கும்
துறவறம் அழகு
மானம்காக்கும்
மறம் அழகு
மகுடம்கொண்ட
சிரம் அழகு
வாரிவழங்கும்
கரம் அழகு
மனம் அழகு -
எனின்,
யாவும் பேரழகு..! 

அப்பா

   

அன்று உன் மூலம் எனக்கு உயிர் கொடுத்த இறைவன்

இன்று என் உயர்வை காண உன்னை உயிரோடு விட்டு வைக்கவில்லையே !!!
   

vendredi 17 février 2012

இத‌ய‌ம்

நான்
இருக்கும் வ‌ரை
என் இத‌ய‌ம்
துடித்துக்கொண்டிருக்கும்!
நான் இற‌க்கும்வ‌ரை
அவ‌ள் நினைவுக‌ளும்
துடித்துக்கொண்டிருக்கும்!



jeudi 16 février 2012

தலைவணங்குகிறேன்


அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா...!


mercredi 15 février 2012

வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்

அன்பான வார்த்தைகள்
தன்னம்பிக்கையை கொடுக்கும்,
அறுதலான வார்த்தைகளால்
தற்கொலையையும் தவிர்க்கலாம்.
 இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்,
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்.
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்.
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்.
காலமறிந்து சொன்ன வார்த்தைகள்
கஷ்டத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்
மனச்சோர்வை விரட்டும்.
தன்மையான வார்த்தைகள்
மனச்சலிப்பை நீக்கும்.
 நகைச்சுவையான வார்த்தைகள்
இறுக்கத்தை; தளர்த்தும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால்
தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால்
சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.

வார்த்தைகள்

 
இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்,
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்.
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்.
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்.

lundi 13 février 2012

என் காதலர் தின வாழ்த்துக்கள் ....

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது,
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்...
கலங்கமில்லா காதலர்களுக்கு என் காதலர் தின
வாழ்த்துக்கள் ....

நீதானம்மா

என் வலிக்கு
என் சோகத்திற்கு
என் சோர்வுக்கு
நீதானம்மா
மருந்தாய் இருந்தாய்!!!


dimanche 12 février 2012

என் அம்மா

என்னையும் ரசிக்க வைத்த முதல் கண்கள்
என்னையும் நேசிக்க வைத்த முதல் இதயம்
என்னையும் கவிதை எழுத வைத்த முதல் பெண் நீ தான்
என் அம்மா.



வெற்றி

வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.
 வெற்றி என்பது கொடுப்பது பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.
 வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.
வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.
பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.


samedi 11 février 2012

கல்வியின் அடிப்படை

குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.

vendredi 10 février 2012

வரம் கொடு

விரிந்த மலரிடம்
  விசாரித்தேன்
 ... வாழ்க்கை என்றால் என்ன ?
  ஒரு நாளில் எல்லோர்க்கும்
  ஒளி வீசும் புன்னகை காட்டி
  தும்பிக்கு தேன் கொடுத்து
  துடியிடையாளின் கூந்தலிலோ
  தூங்கா இறை சிலையிலோ
  தூரிகையாய் தூங்கி முடித்துக் கொள்வது வாழ்க்கை என்றது
  வாயடைத்து நின்றேன்
  வாய் பேசாத பூ வாழ்க்கை கண்டேன்
  எத்தனை இனிமை இதனிடம் ?
  மனிதனை மட்டுமல்ல
  கடவுளையும் மணக்க வைக்கும்
  மலரே உன் வாழ்க்கை எனக்கு வேண்டும் -
வரம் கொடு என்றேன்
 
(படித்ததில் பிடித்தது........)
 
 


காணப்போகிறோம்.

.
 1890 ம் ஆண்டு விஞ்ஞானிகள் பௌதிகத்தில் இனி புதிதாக வர எதுவும் இல்லை என்றார்கள். ஆனால் 1895 ல் எக்ஸ்ரே கண்டு பிடிக்கப்பட்டது. 1897 ல் எலக்ரான் கண்டு பிடிக்கப்பட்டது. அதுபோல 1940 ல் விஞ்ஞானிகள் புதியது எதுவும் வர இனி இடமில்லை என்றனர் ஆனால் அவர்கள் கூறியபோதே அணுப்பிளவு கண்டறியப்பட்டு அணு யுகம் தோன்றிவிட்டது.

இன்றிலிருந்து பத்து அல்லது இருபது வருடங்களின் பின் இன்று நாம் காணாத அதிசயங்களை எல்லாம் காணப்போகிறோம்.

அணு

அணு குண்டை ஒரு காலத்தில் எல்லோரும் அழிவு சக்தியாகவே பார்த்தார்கள். அது ஜப்பானில் விழுந்தபோது நாகரிகம் அழிந்துவிட்டதா என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால் அணுவை போர்க்கருவியாக பார்க்காமல் ஆக்க சக்தியாக பார்த்திருந்தால், பயன்படுத்தியிருந்தால் இரண்டாம் உலகப்போரே தேவையில்லாமல் போயிருக்கும். ஏழைகள் இல்லாத உலகத்தை என்றோ அணுசக்தியால் படைத்திருக்கலாம்.

நினைவு கொள்ளுங்கள்..!

 
நினைவு கொள்ளுங்கள்..! வாழ்வில் எல்லாமே சுமுகமாக இருந்துவிடாது. சில சமயம் நாம் உயரமாக உயர்வோம், பிறகு எல்லாமே தலைகீழாகி, கீழ்நோக்கி செல்வோம். நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் நாகரிகத்தின் இயல்பே எப்போதும் மேல்நோக்கி இருப்பதுதான். நூற்றாண்டுகளின் சிகரங்கள், பள்ளத்தாக்கின் வழியே வரையப்பட்ட கோடுகள் எப்போதும் மேல் நோக்கியே செல்கின்றது. 

இளைஞராக இருக்கிறீர்கள்

உங்கள் நம்பிக்கையைப் போலவே
இளையவராக இருக்கிறீர்கள்,
சந்தேகத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
தன்னம்பிக்கையைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்,
பயத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
விசுவாசத்தைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்

உங்களுக்கு வயதாவதில்லை

வயது என்பது மனதின் தன்மை
உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்
நம்பிக்கை இழந்து விட்டால்
எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்
உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்
நீங்கள் வயதானவர்தான்.
ஆனால் வாழ்வில் இருந்து சிநந்ததை நீங்கள் எடுத்து
விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்
அன்பாக இருந்தால்
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்
எத்தனை பிறந்த நாள் போனாலும்
உங்களுக்கு வயதாவதில்லை.

jeudi 9 février 2012

காலம் குறுகியது

வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

வாழ்க்கை குறுகியது


மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.

சந்தோசம்

 
பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.
சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.