முகப்பு

dimanche 31 octobre 2010

பூக்களே...

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய்
பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து
நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று
நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.


12 உயர்ந்த செல்வங்கள்


உலகத்தில் 12 உயர்ந்த செல்வங்கள் இருக்கின்றன,
அவற்றில் 11 பணமே அல்ல. அவையாவன
01. நேர்மறையான மனோபாவம்
02. உடல் ஆரோக்கியம்
03. மனித உறவுகளில் சமாதானம்
04. பயத்தில் இருந்து விடுதலை.
05. எதிர்கால சாதனை குறித்த நம்பிக்கை
06. விசுவாசத்திற்கான ஆற்றல்
07. தனது ஆசீர்வாதங்களை பகிர தயாராக இருப்பது
08. அன்போடு செய்யும் வேலை
09. எல்லாவற்றிலும் திறந்த மனம்
10. சுய கட்டுப்பாடு
11. மக்களை புரிந்து கொள்ளும் திறன்
12. பணம்.

யாழ். சித்தர் யோகர் சுவாமி



யாழ். சித்தர் யோகர் சுவாமிகளை பார்க்கவும், தனது எதிர்காலம் பற்றிக் கேட்கவும் ஒருவர் போயிருந்தார். அவருக்கு பதில் சொன்ன சுவாமிகள் – எல்லாம் முடிந்துவிட்டது போ ! – என்று கூறி அனுப்பிவிட்டார். ஆம் ! எல்லாமே எழுதி முடிக்கப்பட்ட கணக்குகள்தான் அவை சாஸ்திரமும், சோதிடமும் பார்த்தாற் போல மாறப்போவதில்லை. சகல கணக்குகளும் முடிந்துவிட்டது, விடை வரும் பார்த்துக்கொள் என்பது சுவாமிகளின் கருத்து. எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியாமல் கூத்தடிக்கும் மனிதர்களை பார்த்து சித்தர்கள் சிரித்தார்கள்.

என் மனசு


ஆகாயப் பட்டுடுத்தி


அசத்தலாய் நட்சத்திர

ஆபரணம் அணிந்து

சந்திரனை முழுமதியாய் கொண்ட

பட்டொளி வீசி நீ

நடந்து வருகையில்

வேகமாய் கரைந்து போனதடி

என் மனசு

மலர்


அன்பே நிலவை நேசிக்கிறேன்


நீ நிலவோடு வாழ்வதால்

நான் மலர்களை முத்தமிடுகிறேன்

நீ நித்தம் சூடிக்கொள்வதால்

நான் தென்றலை சுவாசிக்கிறேன்

தினம் உன்னை தீண்டிச் செல்வதால்

நான் பனித்துளிகளை ஆதரிக்கிறேன்

உன் கண்களில்

பிரசவம் செய்வதால்.

முத்தம்......

முத்தம்......


பத்துமாத பந்தம் அதைப் பக்குவமாய் காத்து

மொத்தமாகச் சேர்த்து முத்து முத்தாய் கோர்த்து

பெத்த நேரம் அணைத்து சொத்தையோரம் பார்த்து

கொத்து கொத்தாய் அன்னை நித்தம் தருவாள் முத்தம்

vendredi 29 octobre 2010

முழுமை

உள்ளத்தால் உண்மையாக இருந்தால் அது உண்மை !


உடம்பால் உண்மையாக இருந்தால் அது மெய்ம்மை !

வாயால் உண்மையாக இருந்தால் அது வாய்மை !

இந்த மூன்றுமே சேர்ந்தால் அதுவே முழுமை !

அம்மா

கருவினில் தாங்கி


உருவாகி உயிர் பெற

உழைத்தவள் அம்மா.

உயிர் எழுத்தின்

உண்மைப் பொருள் அம்மா

அம்மா

அருவரி குழந்தை கூட ..அழகாய் சொல்லும் ஒரு வரி கவிதை .. அம்மா

jeudi 28 octobre 2010

நட்பு

நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே.....

சிறப்பு

நண்பா


நீ தூங்குவது தவறில்லை

எப்போது எழுந்திருக்கிறாய்

என்பதே முக்கியம்

என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்

என்பதல்ல உயர்வு

எப்படி வாழ்ந்தாய்

என்பதே சிறப்பு

இதயம்


அன்பே
எறும்பு ஊர்ந்து
கல் தேய்ந்து விடும் என்றாய்
உன் நினைவுகள் ஊர்ந்து
என் இதயம்
தேய்ந்ததை
நீ அறிவாயா...???

இருட்டறை

முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:- மகனே! நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்....... நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்........

கருவறை !

பிஞ்சுப் பாதங்கள் கொஞ்சி விளையாடும் சுகமான சிறை - கருவறை !

mercredi 27 octobre 2010

உள்ள்வரை

கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்ணீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

அழகு !

நிலவால் இரவுக்கு அழகு !

இரவால் நிலவுக்கு அழகு !

இரண்டும் சேர்ந்து வானத்திற்கு அழகு !
...

தாமரையால் தண்ணீருக்கு அழகு !

தண்ணீரால் தாமரைக்கு அழகு !
...
இரண்டும் சோந்து தடாகத்திற்கு அழகு !

அதுபோல நல் மாணவரால் ஆசிரியருக்கு அழகு !
நல்லாசிரியரால் மாணவருக்கு அழகு !

இருவராலும் பாடசாலைக்கு அழகு !

நீ

பிரியமுடன் காதலித்தேன்,

பிரிந்து நீ செல்வதற்கா..?

அனல்

என்னை
அலையவிட்டு சென்றவளே...!
அலையடிக்கும் மனசிக்குள்ளே
உன் நினைவால்
அனல் வந்து வீசுதடி .....

மறு ஜென்மம்

மணம் முடித்து சென்றிருந்தால்

மறைந்திருந்து பார்த்திருப்பேன்
மரணித்து சென்று விட்டாய்
மறு ஜென்மம் காத்திருப்பேன்......

mardi 26 octobre 2010

அம்மா ..

கருவில் உயிர் கொடுத்து ...
உயிருக்கு உருவம் கொடுத்து ..
உருவத்துக்குஉன் உதிரும் கொடுத்து ...
என்னை உருவாகியவள் நீ ..
படைத்ததும் நீயே
என்னை காத்தவளும் நீயே ..
இல்லாத கடவுளை நான் எதற்கு வழிபட போகிறேன் ...
அம்மா ..
உன்னை என் கண்முன் வைத்து கொண்டு
 .......

ஒரே உலக அதிசயம்

அம்மா என்பது ஒரு அற்புதமான வார்த்தை
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அன்பையும் கருணையையும்
நமக்கு கற்றுத்தருபவள் தோல்வியில் துவளும் போதும்
வெறுமையில் வாடும் போதும்
எம்மை அணைத்துக்கொள்பவள் செல்லும் வழியும் தெரியாமல்
அடையும் இலக்கையும் அறியாமல்
தடுமாறும் எமக்கு கலங்கரை
விளக்காய் துணை நிற்பவள் எந்த பெருமையும் இல்லாமல்
எந்த விளம்பரமும் இல்லாமல்
நடமாடிக்கொண்டிருக்கும்
ஒரே உலக அதிசயம் அவள், அம்மா

கருவறை !

பிஞ்சுப் பாதங்கள் கொஞ்சி விளையாடும் சுகமான சிறை - கருவறை !

அம்மா...

அம்மாவின் மடியில் அலுப்பில்லாமல்
உறங்கும் குழந்தைக்கு
தெரியாது அம்மாவின் அலுப்பு....சோகத்தையும் சுகமாகத் தாங்குபவள் தான்
தாய்.....அம்மா...அம்மா....அம்மா...

lundi 25 octobre 2010

வாழ்க்கை

அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.
ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்
.

நல் நட்பு !

உண்மையை கலப்படமின்றி உரைக்க
ஓர் உறவு நட்பு !
உள்ளதை உள்ளதாய் கொள்ள
உன்னத உறவு நல் நட்பு !

தூய்மை

எண்ணம் தூய்மையாக இல்லாவிட்டால் எதைப் பார்த்தாலும் உங்கள் மனதிற்கு அது அழுக்காகவே தெரியும்.
உண்மையான இன்பம் மனதைக் கடந்த நிலையில்தான் இருக்கிறது.
மனிதனின் உடல் மாறுவதைப் போலவே அவனுடைய மனமும் மாறிக் கொண்டிருக்கிறது.
நிறையப்பேர் தமது உடல் மாற்றத்தை உணர்கிறார்கள் ஆனால் மன மாற்றத்தை உணர்வதில்லை

தாய்....

தாய்....வாழ்க்கையில் ஊன்று கோளாய்
வயலினில் வரம்பாய்
வாழும் வரை உழைப்பவளே
வருந்தி தன்னை மாய்ப்பவளே...தாய்
வளர்ந்து விட்ட பின் கூட
தாய்க்கு நீ குழந்தையே
சிறகு முளைத்த கிளி போல
பறந்திடாதே கூட்டைவிட்டு.....

கற்றுக்கொடுக்கவில்லையே

கற்றுக் கொடுத்தாய்
மலர்களுக்கு மணம் வீச
பறவைகளுக்கு
சிறகை விரிக்க
மேகங்களுக்கு
வான் மழை பொழிய
மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே
மனித நேயத்துடன் வாழ......

dimanche 24 octobre 2010

பகை...

அறிவுக்கு கர்வம் பகை...உழைப்புக்கு சேம்பல் பகை...உறவுக்கு கோபம் பகை...உண்மைக்கு பொய் பகை...நிலவுக்கு மேகம் பகை...அன்புக்கு அகந்தை பகை...பெண்ணுக்கு அடக்கமின்மை பகை...காதலுக்கு காசு பணம் பகை...எனக்கு நானே பகை......ஆம்
எனக்கு நானே பகை...

கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்நிலை
உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனிதவடிவில் தெய்வம்!!

வாழ்க்கை

"வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது". இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!உழைத்துக் கொண்டிருங்கள்!!!நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

vendredi 22 octobre 2010

fiye;j caph; vOj;Jf;fs;


,jpy; 144 rpwpa ngl;bfs; cs;sd> ,e;jg;ngl;bfs; 12 rpwpa ngl;bfisf; nfhz;l 12 gphpTfshf gphpf;fg;gl;Ls;sd. ,e;j ngl;bfis m Kjy; xs tiuahd 12 capnuOj;Jf;fisf; nfhz;L epug;g Ntz;Lk;.Xt;nthU gphpTfSf;Fk; m njhlf;fk; xs tiuahd 12 capnuOj;Jf;fSk; ,Uj;jy; Ntz;Lk;. mNj Ntis NkypUe;J fPohfNth my;yJ ,lkpUe;J tykhfNth ghh;f;Fk; NghJ 12 vOj;Jf;fSk; ,Uj;jy; Ntz;Lk;. xU vOj;J xU jlit khj;jpuk; tu Ntz;Lk;. (12 vOj;Jf;fSk; Fok;gpa epiyapy; ,Uf;Fk;) 


CVmMXxxsv[
xcXm<xs
c,xsx[MC<X
Mm<xscv[xC,
<CxsXMv,c
XmCv<xsM[
xsM<m,XvC
vx[,mcX<xs
VM[xsCcv
,M<xsVvm[X
v[XcxVC<
xCcv<XMVm

மணி மொழிகள் (சவுந்தா) சில மணி மொழிகள் வாசித்தவற்றில் பிடித்தவை

கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்

நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்

தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!
எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி
விதை எப்படியோ, பழமும் அப்படியே!
பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!
பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்
நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.
கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது