முகப்பு

vendredi 14 mars 2014

நம்பிக்கை




மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. 
மிகவும் துயரமானது மரணம்.. 
மிகவும் அழகானது அன்புணர்வு.. 
மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்.. 
மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது…
 மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு.. 
மிகவும் ரம்மியமானது நம்பிக்கை

ஆணவம், சுயநலம்



மேலான நிலைக்கு ஒருவன் உயர வேண்டுமானால் அகந்தையையும், சுயநலத்தையும் விட்டொழித்தாக வேண்டும். மனிதன் வண்ணத்துபூச்சி போல இருக்க வேண்டும், அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை யாருக்கும் சுமையாக இருப்பதும் இல்லை பஞ்சுபோல இலேசாகப் பறக்கும் அதுபோல பறக்க வேண்டுமானால் ஆணவம், சுயநலம் போன்ற பாரங்கள் இருத்தலாகாது.

பெருமை



உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.

முயற்சி செய்யாமல் நாம் கடவுளிடம் உதவி கேட்க முடியாது. நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தாமல் பலத்தைக் கொடு என்று கேட்க முடியாது.


இருக்கின்ற வழிகளை சரியாக உணராமல் வழி காட்டும்படி கடவுளிடம் கேட்க முடியாது. இருப்பதை ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு கடவுளிடம் கேட்க முடியாது.

எப்போதெல்லாம் நாம் நெறி பிறழ்ந்து வாழ்கிறோமோ அப்போதெல்லாம் நம் மனச்சாட்சியின் கனம் அதிகரிக்கும்.

பெருமை கிடைக்கும் என்பதற்காக கண்ணியத்தை இழத்தல் கூடாது.

பெருமைப்படுத்தப்படுவதைக் காட்டிலும் பெருமையோடு வாழ்வதே மேலானது.


என் மீது நம்பிக்கை வை..



உன்னையே நீயறிவாய் என்று கிரேக்கர் சொன்னார்கள்..
உன்னையே நீ ஆள்வாய் என்றார்கள் ரோமானியர்கள்..
உன்னை நீ சிறப்பாக்கிக் கொள் என்றார்கள் சீனர்கள்..
நான் என்பதை அழித்துக் கொள் என்றது பௌத்தம்..
பிரபஞ்சத்தோடு உன்னை ஐக்கியப்படுத்து என்றது இந்து மதம்..
சேவைக்கு உன்னை அர்ப்பணி என்றது இஸ்லாம்..
சமாதானத்தையே கொள்கையாக கொள் என்கிறது நவீன உலகு..
ஆனால் கடவுள் சொல்கிறார்..
என் மீது நம்பிக்கை வை..
என்னை விட்டு நீ எதையும் செய்ய முடியாது..

அழிந்து போகும்



அழிந்து போகும் செல்வத்தையே பலர் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். வெறியோடு பணத்தைச் சேர்த்து வரியைக்கட்டி, அந்தக் கவலையால் நோய்க்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

மோசமான விடயம்



எவ்வளவுக்கு எவ்வளவு துன்பங்களில் இருந்து தப்ப முயல்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு துன்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள். துயரம் என்பது மோசமான விடயம் அல்ல அது இருக்கிறது என்று எண்ணுவதே மோசமான விடயம்

தீமை



தீமையை தீமையால் வெல்ல முயலக்கூடாது. தீமைகளுக்கு மத்தியிலும் நன்மையில் நம்பிக்கை வைக்கக்கூடிய துணிச்சல் நமக்கு வரவேண்டும். எதையுமே உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும், அழிப்பது நோக்கமாக இருக்கக் கூடாது.

கடவுள்



கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவைத் திறப்பார். இலட்சியத்திற்காக உழைக்கும் ஒருவனை யாரும் வென்றுவிட முடியாது. தட்டாமல் கதவு திறப்பதில்லை தட்டிக்கொண்டே இருக்கும் பிடிவாதம்தான் நமக்கு வேண்டும்.

வளரும் குழந்தைகளுக்கு



உங்கள் அன்றாட வாழ்வில் அழகுக்கும் ஓரிடம் கொடுங்கள். சூரிய உதயம், அஸ்தமனம், பசுமையான புல்வெளி, சிறகடித்துப் பறக்கும் பறவை இப்படி எத்தனையோ விஷயங்களை இரசிப்பதற்கு நீங்கள் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
எதைச் செய்தாலும் அழகுணர்ச்சியுடன் செய்யுங்கள், வீட்டை அழகுபடுத்துங்கள், நீங்கள் குடியிருக்கும் கோயில் அது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே ஓர் அழகுதான்.
எளிமையிலும் அழகு இருக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அழகாக வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் வளரும் குழந்தைகளுக்கு அதுவே கல்வியாகிவிடுகிறது.

ஆயுளின் நீளம் குறைந்து செல்லும்.



கடவுள் இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் படைத்திருப்பது குறைவாகப் பேசி அதிகமாக கேட்க வேண்டும் என்பதற்குத்தான்.


உனது நாக்கின் நீளம் கூடக்கூட ஆயுளின் நீளம் குறைந்து செல்லும்.


இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.




மற்றவர்களின் துன்பங்களை பார்த்தும் பார்க்காதது போல செல்வதுதான் இன்று பெரிய சோகமாகும். வெறுப்பைவிட அலட்சியமே இன்று பெரியளவில் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. வெறுப்பைவிட அலட்சியம் மிகவும் மோசமானது ஏனென்றால் அலட்சியத்தில் இருந்துதான் வெறுப்பு தோன்றுகிறது.
நாம் கஷ்டப்படும்போது மற்றவர் உதவி செய்யவில்லையே என்று எண்ணுகிறோம் ஆனால் மற்றவர்கள் கஷ்டப்படும்போது அப்படி நாம் எண்ணுகிறோமா என்று இதயத்தைக் கேட்க வேண்டும். உலகத்திலேயே மோசமான பட்டப் பெயர் இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.