முகப்பு

vendredi 30 novembre 2018

புத்திசாலித்தனம்.



புத்திசாலித்தனம்.
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.
அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேiy செய்ய ஆரம்பித்துவிட்டது.
கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்
1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்
என்று எழுதி இருந்தது.
மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…

வாழ்க்கை..



உண்மையில் இதுதான் வாழ்க்கை......
தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னை கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று கத்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.

நல்ல மனசு



வளைவுகளும் ,
நிறமும் ,
தோளில் சுருக்கம்
விழும் வரை
மட்டுமே ரசிக்கப்படும் ...
நல்ல மனசு
தான் கடைசி வரை
மதிக்கப்படும் ......….

சிறு பிழையிலும்



சிறு பிழையிலும்
உன்னை தட்டிக்கொடுக்ககூட ஒருவன் இல்லாவிட்டாலும்
உன்னை காட்டிக்கொடுக்க
பல பேர் உண்டு இவ்வுலகில்….

வலியை


வலியை தாங்கும்
சக்தி வலிமையானவர்க்கு
இருக்கலாம்
ஆனால் ஒருபோதும்
வலிக்காமல் இருக்காது