முகப்பு

samedi 31 décembre 2016

new year2017


new year


vendredi 23 décembre 2016

ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்



ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.

lundi 19 décembre 2016

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?



  1. நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
    ***********
    நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
    ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
    மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்....
    மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
    அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
    பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
    அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
    இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
    மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
    நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
    இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
    நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......



  1. எரிவதில் தீபம் அழகானது.....
    சுடுவதில் *சூரியன்*அழகானது.....
    சுற்றுவதில் புவி அழகானது.....
    வளர்வதில் பிறை அழகானது......
    மின்னுவதில் விண்மீன் அழகானது........
    தவழ்வதில் குழந்தை அழகானது......
    குதிப்பதில் கடல் நீர் அழகானது.....
    விழுவதில் அருவி அழகானது.........
    உறைவதில் பனி அழகானது......
    விளைவதில் பயிர்கள் அழகானது.....
    தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது.....
    குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது......
    உழைப்பதில் வியர்வை அழகானது......
    பாடுவதில் குயில் அழகானது......
    பறப்பதில் புறா அழகானது.......
    கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......
    உறவினில் நட்பு அழகானது.....
    மொழிகளில் மழலை மொழி அழகானது...
    மலர்களில் ரோஜா அழகானது......
    மலர் வாசனையில் மல்லிகை அழகானது....
    நிறங்களில் கறுப்பே
    அழகானது.....
    கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
    இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
    எப்போதும் தாய்மை அழகானது.......
    இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது....
    இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
    *குறை ஒன்றும்*இல்லையே......
    அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......

கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்…… (ஓரு மனிதக் கண்ணோட்டம்)



கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்……
(ஓரு மனிதக் கண்ணோட்டம்)

அன்று 2016 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசு வின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கி றோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதி யில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி. நாமும் அத்திருத்தலத்திற்கு யாத்திரையும் சென்றிருக்கலாம். ஆயினும், ஆண்டவர் இயேசு எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திட நாம் இடம் ஒதுக்காவிட்டால், எமது யாத்திரை மட்டுமல்ல, நாங்களும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே என்பதனை உனருகிறோமா?

இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது. இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம் பெயர்ந்தும் அகதியாக அலைவது வரலாறாகப் பதிவாகவில்லையா?

மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தை தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். கடைசி இரா உணவில், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டி யின் ஆன்மீக உணவில் தகுதியோடு பங்கெடுக்கி றோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா?, அல்லது, நற்கருனைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து, வணங்குகிறோமா?

அன்றைய மனிதன் பயங்கர விலங்குகளிலிருந்து பாதுகாக்க ஆயுதங்களை உருவாக்கினான். இன்றைய மனிதன் கொடிய மிருகங்களை செல்லப் பிராணி களாக்கி, தனது சொந்தச் சகோதரங்களையே கொண்றொழிக்கப் பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிப், பாவம் வந்து வீட்டு வாசலில் பாய்விரித்துப் படுத்திருக்க இடமளிக்கவில்லையா?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்துக் குழிபறிக்கும் முயற்சிகள், சாதிய முரண்பாடுகள் எம்மிடையே எதற்காக?

மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழவில்லையா? கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும் அபயம் தேடும் ஏழைகளின் உருவில் வரும் மரி அன்னை களுக்காக இதயக் கதவைத் திறப்போர் எத்தனை பேர்?

புனித நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை முன்னும் பின்னு மாகப் பிரித்த இறைமகன் இயேசு எமது வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவு களையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை,பரிவு, பாசம் என்ற “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திர வதைப்படுவோர் மத்தியிலும் இன்றும் பிறப்ப தாகப் போதித்ததனை நாமுணருகிறோமா?

குழந்தை இயேசு பிறந்ததும் கொல்லத் தேடிய ஏரோது, இரு வயதிற்குட்பட்ட அப்பாவிக் குழந்தைகளைக் கொலை செய்தான். வேண்டாக் கர்ப்பத்தால் உருவாகும் பச்சிளம் சிசுக்களைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் ஏரோதுக்கள் எம்மிடையே இல்லை யென்போமா?

தனக்கு நிகரான அரசன் பிறந்ததாக ஏரோது கேள்விப்பட, முழு எருசலேமுமே அவனோடு கலங்கியது. இன்றும் பல நாடுகளில் அதிகாரம் செலுத்தும் ஆளும் இனம், தமது சிறுபாண்மை இனத்தவரைப் படுகொலை செய்வதைக் கேள்விப்பட்டு ஐக்கிய நாடுகளே கலங்கவில்லையா?

குழந்தை இயேசுவைத் தரிசிக்க ஞானிகள் வழிதேடி ஏரோதுவிடம் சென்றபோது, உதவி செய்வதாக ஏமாற்றி னான். இன்றும் எம்மிடையே நல்ல செயல்களைத் தடுக்க வெனப் பல ஏரோதுக்கள் இணைந்து, நல்ல முயற்சி களைத் திசை திருப்பிக் குழப்புவதில்லையா?

பாலகன் இயேசுவின் பிறப்பு மிக எளிமையானதாகும். இன்றைய உலக மயக் களியாட்டங்கள், ஒருபால் திரு மணம், விவாகரத்து, திருமணம் செய்யாது கூடிவாழுதல் என்று கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை இழந்த எம்மி டையே கிறிஸ்து ” அர்த்தமுள்ளதாகப் பிறப்பது“ எப்போது?

ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு விடுதலையும், சமாதானமும் மட்டுமல்ல, பாவத்தின் அடிமையில் வாழ்வோர் விடுதலை பெறவும், ஏழைகள், புறந்தள்ள ப்பட்டு ஒதுக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற்று அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதாகும். நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் “நான், என்னுடையது“ என்பது தவிர இவ்வாறான விழுமியங்கள் வாழப்படுகின்றதா?

ஆண்டுகள் பல கடந்தும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இன்று உலகம் முழுவதும் அர்த்தமின்றிக் குடியும் கும்மாளமும், விநோதமுமாகி, கிறிஸ்மஸ் தாத்தாவே பணம் வசூலிப்பவராக மாற்ற மடைந்து, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் எமது உள்ளங்கள் மாற்றமடைந்துள்ளதா?

வானளாவக் கிறிஸ்மஸ் மரங்கள் உயர்ந்தாலும், எமது உள்ளங்கள் மனித மான்பை உயர்த்தும் எண்ணக் கருத்துக்களால் உயர்ந்துள்ளதா? ஏழைகள் ஏழைகளாகத் தொடர்ந்து வாழ, செல்வந்தர் செல்வம் பெருக்கும் நோக்கத்தில் முன்னேற, ஒரு நேர உணவுக்காக ஏங்கு வோர் எம்மிடையே இல்லை என்போமா? அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவைக் காண, எமது வெளிவேடக் கிறிஸ்தவ வாழ்விலிருந்து புதுப்பிறப்பெடுப்போம்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்“ – (மத்தேயு 25:41)

dimanche 4 décembre 2016

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!



ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
வந்தாலும்

கருவறையை விடப் பாதுகாப்பான
அறையை

குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
போகிறது

பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் -

ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்

எல்லாவற்றையும் விட
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!