முகப்பு

lundi 29 novembre 2010

நிலவே


தேய்ந்து விடுவோம் என்று
தெரிந்தும்
தேயும் வரை
மின்னுகிறாயே நிலவே
நீ
பெண்களின் பிரதிபலிப்பு

samedi 27 novembre 2010

வீரமறவர்களே


பிறந்த மண்ணை பாதுகாத்த

வீரமறவர்களே.. புனிதர்களே

இத்தினத்தில்

உங்களை நினைத்து

பாமாலையாக புகழ்ந்து

போற்றித் துதித்து

பணிகிறேன் உங்கள்

பாத சுவடுகளை...

கலங்கிய விழிகளுடன்

இரு கை குவித்து

வணங்குகிறேன்

vendredi 26 novembre 2010

மாவீரர்களுக்கு


தேசிய எழுச்சி…

வானத்தில் இருந்து வான்படை மலர்மாரி பொழிய

ஆகாயத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பு..

ஆலயங்களில் மணியோசை…

தீபங்களின் ஊர்கோலம்..

மரணித்தவனை மரியாதைப்படுத்திய இனம்

இதுபோல உலகில் எங்காவது உண்டா..

என்று மனம் கேட்கும்..

இன்று…

நாம் பிறந்த மண்ணில் நமது மாவீரர்களுக்கு

ஒரு விளக்கு வைக்கத் தடையா… ?????

mardi 23 novembre 2010


காதல் ஒரு காற்று

ஆம்!

காற்றிலே தென்றல் உண்டு

காதல் ஒரு காவியம்

ஆம்!

காவியத்திலே தியாகங்கள் உண்டு

காதல் ஒரு கற்பு

ஆம்!

கற்பிலே ஒழுக்கங்கள் உண்டு

dimanche 21 novembre 2010

முத்து


கிளைகள் எங்கு வேண்டுமானாலும் விரிந்து பரந்து நீண்டு செல்லலாம் ஆனால் வேர் புறப்பட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும்.

சாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது.
விடிந்தால் பட்டியை திறந்துவிட்டும் இருண்டால் பட்டிக்குள் போட்டு மூடும் ஆடு, மாடுகள் போல பெண்களை நடாத்தினால் அந்தக் குடும்பம் தோல்வியடையும்.
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

vendredi 19 novembre 2010

முன்னோர்


நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தார்கள், ஆனால் நமக்கு கௌரவத்தைத் தருவது நமது நற்பண்புகள் மட்டும்தான். பண்பற்ற ஒருவன் முன்னோர் தேடிய பெருமையால் எதையும் செய்ய முடியாது.
சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.

mercredi 17 novembre 2010

வரவே வராது.


நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.
நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

நம்பிக்கை

வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.
எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.
திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


dimanche 14 novembre 2010

நட்பினை


"கற்பனைகளினால் நமது கனவுகள் மாறுகின்றது"

"நான் மாறலாம், ஏன் நீயும் மாறலாம்"

"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !

"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"

"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!

நீதி



சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.
நல்ல மனிதர்கள் பொதுவாக தீமைகளுக்கு துதி பாடும் சமுதாயத்தை நம்பி வாழ்வதில்லை அதேபோல தீயவரைப் போற்றும் சமுதாயம் இரகசியமாக நல்லவர்களையே நம்பியிருப்பது தீயவருக்குத் தெரிவதுமில்லை.
உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்கு அநீதி நிகழும்போது உறங்கிக் கொண்டிருந்தால் சந்தேகமில்லை அடுத்து வரப்போவது உங்களுக்குத்தான்.



vendredi 12 novembre 2010

நன்றி மறந்த ......


ஒருவர் தனக்கு என்ன உரிமை வேண்டுமென போராடுகிறாரோ அதே உரிமையை மற்றவர்களுக்கும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும், அதுவே சுதந்திரத்திற்கான நாகரிகமாகும்.
ஒரு மரத்தில் தங்குவதும் பின் அதன் கிளையை உடைப்பதும் நன்றி மறந்த செலாகும்

நீ


உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.
ஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.

தேனீ

தேனீயைப் பாராட்டுகிறோம் அதன் சுறுசுறுப்பிற்காக மட்டுமல்ல அதன் சுறுசுறுப்பு பிறருக்கும் பயன்படுவதால்தான்.

நீ சாகும்போது பணக்காரனாக இருப்பதற்காக இப்போது வறுமையில் இருப்பது பைத்தியக்காரத்தனம்.
துன்பம் என்ற பறவைகள் உங்கள் தலைக்குமேல் பறப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் அது உங்கள் தலையில் கூடுகட்டுவதை தடுக்க முடியும்.

இறந்தவர்களுக்காக படும் துயரம் பைத்தியக்காரத்தனமானது. அது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுமை, இறந்தவர்களுக்கு அது தெரியாது.

lundi 8 novembre 2010

புவி

இப்போது நாம் இங்கே ( இப்புவியில் ) இருப்பதே ஒரு பாக்கியம்தான், இதைப் புரியாமல் ஏழரைச்சனி, அட்டமத்துசனி என்று அபாக்கியவான்களாகி அழவேண்டாம். பூமியில் வாழாதவனுக்கு ஏது ஏழரைச்சனி, அட்டமத்துச் சனி.

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது எண்ணங்கள் எதிர்மறையானால் பயன்களும் எதிர்மறையாகும்.
உன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொறிக்குள் சிக்குப்படாதே, மற்றவர் ஒப்பிட்டால் அதற்குள் சிக்குப்படாதே.

vendredi 5 novembre 2010

தீபமேற்று..

தீயவனை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது தீபாவளி என்கிறாயே.. தீபாவளி கொண்டாடப்படும் நாடுகளின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நரகாசுரனைவிட நல்லவர்களா இருக்கிறார்கள் என்று என்றாவது உன் நெஞ்சைத் தொட்டு கேட்டிருப்பாயா.. நரகாசுரனை கொன்ற கடவுளுக்கு நன்றி சொல்ல ஆலயம் ஓடுகிறாயா .. ஓடு.. அதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கடவுள் மக்களை காப்பாற்றவா நரகாசுரனை கொன்றார் ? இல்லை.. தேவர்களைக் காக்கவே கொன்றார்… அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்காக போராடிய கடவுள்.. என்றாவது மக்கள் பக்கம் நின்றதாக அறிந்திருந்தால் ஓடிப்போ தீபமேற்று..

தண்ணீர்

தண்ணீருக்கு ஒரு தன்மை உண்டு, அது யாருடன் சேருகிறதோ அதுவாக மாறும். சந்தனத்துடன் சேர்ந்தால் திலகமாகும், மண்ணுடன் கலந்தால் சேறாகும். இதுபோலவே பிள்ளைகளின் நடத்தையும் அவர்கள் யாருடன் சேர்ந்துள்ளனர் என்பதே தீர்மானமாகும்


mercredi 3 novembre 2010

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்


1) பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்.

2)காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

3)பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்

அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

4)பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு.

5)பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.

6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.


7)பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _ ஷேக்ஸ்பியர்.

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

9)எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம்

10) தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்


11)பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் _ தேசிக விநாயகம் பிள்ளை.

12)ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங்

mardi 2 novembre 2010

பொருள்


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

எப்போது அவளுக்காக.....???


பிறந்தது முதல்


பெற்றோருக்காக

திருமணம் முதல்

கணவருக்காக

தாய்மை முதல்

பிள்ளைகளுக்காக

எப்போது அவளுக்காக.....???

மழை


மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன் 'குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே' என்றான் ஆண்ணன் 'எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே' என்றாள் அக்கா 'சளி பிடிச்சிக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு' என்றார் அப்பா தன் முந்தானையால் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்லா மழையை !

அனுபவியுங்கள்.

 
 
அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

காலத்தின் அரும

     
     காலத்தின் அரும


    01 வருடம் – தோல்வியடைந்த மாணவனுக்குத் தெரியும்.

    01 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.

    01 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.

    01 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு

       பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

   01 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.

  01 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.

  01 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப்     போனவனுக்குத் தெரியும்.

lundi 1 novembre 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது". இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.


மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உ...ழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.