முகப்பு

samedi 30 décembre 2017

மகிழ்ச்சி



மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

மகிழ்வான வாழ்வை



மகிழ்வான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், நாம் செய்ய வேண்டியது ஒன்றே.., நமது குறைகளை ஏற்றுக் கொள்ளவதும், உணர்ந்து கொள்வதுமே..

"மனுஷங்க"



பணத்துக்காக மட்டுமே
மதிக்கிற பல உறவுகள்
வேண்டாம் எனக்கு,
என் மனசுக்காக மட்டுமே
என்னை மதிக்கிற நாலு...
"மனுஷங்க" இருந்தாலே
போதும்!

அன்பு



அன்பு காட்டுவது என்றால் உண்மையாய் அன்பு காட்டுங்கள் வெறுப்பது என்றால் வெறுத்து விடுங்கள் இரண்டையும் கலந்து செய்யாதீர்கள்

lundi 25 décembre 2017

கிருஸ்துமஸ் நல்வாழ்த்து



வானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் அனைவரின் மனங்களை வென்றார் பரமபிதா இயேசு பெருமான் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

mardi 5 décembre 2017

sontham


nee


sila


unmai


nallavar


paravai


யோசித்து பார் புரியும் .....



யோசித்து பார் புரியும் .....
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே.....
நீ இறந்தபிறகு உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்.. தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான்

மகிழ்ச்சியை



கடந்து போன நினைவுகளை
நினைத்து நினைத்து
நிகழ்கால மகிழ்ச்சியை
இழக்கின்றோம் !!!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்



நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்....
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.
பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.
2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
ஆனால்,
உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,
👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

jeudi 23 novembre 2017

sathanai


கோபம்



கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே! பிறகு பாசம் எனும் பகல் கண்ணுக்கு தெரியாது!!.

idyam


dimanche 19 novembre 2017

ஈடிணையற்றதெய்வம்



என்னைப்பெற்றதாய் தெய்வம் எனும்போது என்னையும் என்தாயையும்தாங்கிய என்தாய்நாடு எனக்கு ஈடிணையற்றதெய்வம்

தாய்.....



கடவுள் தந்த உறவு கணவன்/மனைவி அந்த உறவில் வந்த இந்த தெய்வத்திற்கு முத்தம் இடுவது என் மனைவி அல்ல என் இன்னொரு தாய்.....

நட்பு



சில நொடி மௌனம் சில நிமிட சிரிப்பு பல நிமிட அரட்டை சிறு சிறு சண்டைகள் இவை அனைத்தும் இருப்பது நட்பு எனும் உறவில் மட்டுமே

உணர்வுகள்.



சிலரிடம் மட்டும் எதோ அடிக்கடி பேசிக்கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றும் என்ன பேசுவது என்று மட்டும்தான் தோன்றாது பெயரிடப்படாத உணர்வுகள்.

vanakkam


சிறு அன்பு



எதிர்பாரா நேரத்தில், எதிர்பாராத மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் ஒரு சிறு அன்பு, வாழ்க்கையின் மீதான பிடிப்பை அதிகப்படுத்தி செல்கிறது.

jeudi 16 novembre 2017

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?



பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?

பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…

பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??

பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.

கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.

ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.

ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.

இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.

சகோதரிகளே தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் .

நம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில் பெண்களுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்… இதற்கு எம் புதிய வாழ்க்கைமுறையே காரணம்.

வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்… புதிய வாழ்க்கை முறையில்..

பருவம் அடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார் பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது.

துன்பத்தை



வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதிர்கள் வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுகொடுங்கள்
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் போது, நினைவில் கொள். உனக்கான நாளைய, துன்பத்தை இன்றே விதைத்துக் கொண்டிருக்கிறாய்...

தட்டிப் பறிக்க



எட்டிப் பறிக்கும் தூரத்தில் உள்ள வெற்றியை! எட்டிப் பறிக்கவே முயலுங்கள்!!தட்டிப் பறிக்க முயலாதீர்கள்!!!

அன்பு



உண்மையான அன்பு வைத்திருப்பவர் தவறுசெய்தால் மன்னிக்க முடியாவிட்டாலும் வெறுத்துவிடாதீர்கள்,வெறுப்பைதாங்கும் சக்திநிச்சயம் அவருக்குஇருக்காது

உன்னை காப்பாற்றும்



கடுகளவும் குறையாமல் உன்னை காப்பாற்றும் இரண்டு விஷயங்கள்... நீ படித்து பெற்ற கல்வியும் நீ உழைத்து பெற்ற செல்வமும்...!

பாசம்



தந்தையின் பாசம் வளரும் வரை...
தாயின் பாசம் திருமணம் வரை...
நண்பர்கள், சகோதரர்களின் பாசம்
அவர்களுக்கென்று தனியான
வாழ்க்கை வரும் வரை......
பிள்ளைகளின் பாசம் அவர்கள்
உலகை அறியும் வரை...!
ஆனால் கணவன் மனைவியின்
பாசமோ...
நீங்க இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன்
நான் கண் மூடிட வேண்டும்,
என கூறும் மனைவியின் பாசமும்,
நான் இறந்த அடுத்த நொடி நீயும்
என்னுடன் வந்துவிடு,
என கூறும் கணவனின் பாசமும் வேறு எந்த
பாசத்திற்கும் ஈடாகாது..
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும்
மனைவியின் சிறந்த தோழனாக கணவனும்
இருக்கும் போது,
அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்....(மிள் பதிவு)

இரட்டை வழிப் பாதைகள்




பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம்



தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு...
5. மாலை
6. யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.
அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்...!

மனிதன் என்பவன் யார்?



மனிதன் என்பவன் யார்?
விலங்கினத்தின் அடுத்த பரிணாமம் மனிதன்
அடுத்த பரிணாமம் எது?
...
விலங்கிற்கு ஐயறிவு.
அடுத்த பரிமாணம் என்பது ஆறாவது அறிவு அதாவது மனம் என்பது ஆறாவது அறிவு.
ஐயறிவு நிலைகள் யாது?
| .தொடு உணர்வு - (அறிவு)
2. சுவை உணர்வு _ (அறிவு)
3. நுகர் உணர்வு – (அறிவு)
4. ஒளி உணர்வு – (அறிவு)
5. ஒலி உணர்வு _ (அறிவு)
ஒவ்வொரு உணர்வும் ஒரு அறிவு என்று பேசப்படுகிறது
6. ஆறாவது அறிவு மனம்
ஆதாரம் என்ன?
ஆதாரம்:
தொல்காப்பியம்
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு
நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு
நுகர்வே
நான்கறிவதுவே அவற்றொடு
கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு
காதே
ஆறறிவதுவே அவற்றொடு
மனனே
ஐயறிவிற்கும் கருவிகள் உண்டு
1. தோல் - தொடு உணர்வு
2. நாக்கு-சுவை உணர்வு
3. மூக்கு- வாசனை உணர்வு
4. கண் - ஒளி உணர்வு
5. காது – ஒலி உணர்வு
மனத்திற்கு கருவி எது?
மனம் என்ற ஒரு கருவி தனியாக கிடையாது.
ஐந்து புலன்களையும் கருவியாகக் கொண்டு அவற்றின்
வழியே செயல்படும் ஒரு ஆற்றலே மனம் .
ஐந்து புலன்களையும் கண்களால் பார்க்கலாம்.
ஆனால் மனதை கண்களால் பார்க்க முடியாது.
ஐம்புலன்களும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பொது வானது..
ஆனால்
மனம் மனிதனுக்கு
மட்டும் சிறப்பானது

dimanche 22 octobre 2017

நமது அறியாமையா....???



எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா...? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா....???


வாழும் வரை


உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே....


தெரிவதில்லை



ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள்
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை....

அனுபவ பாடம்.....


அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....

dimanche 10 septembre 2017

mm


பிறர் நலம் நாடும்



பணத்தை வைத்து வெற்றியை எடை போடாதீர்கள். பிறர் நலம் நாடும் குணம், சந்தோஷம், செழிப்பு போன்றவையும் வெற்றிக்கு அவசியமாகும். ஆனாலும் பணத்திற்கும் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் மறுக்க இயலாது.
ஆனால் இந்த உலகம் பணத்தையே பெரிதாக எண்ணுகிறது. பணம் இல்லாத மனிதனை குப்பையாக தூக்கி வீசிவிடுகிறது. அறிவாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் இதுவாகும்.--சொளந்தா

வாய்ப்பு



இந்த உலகில் எந்த உத்தரவாதமும் கிடையாது, வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பழக்கம்



எல்லாவற்றையும் தொடங்குவது பலரது பழக்கம் ஒன்றை தொடங்கி ஒழுங்காக முடிக்கத் தெரியாதவனே பலதை புதிதுபுதிதாக தொடங்கி எதையும் சரிவர செய்ய முடியாது இறுதியில் தோல்வியடைவார்கள். செய்து முடிக்கத் தெரியாதவன் தலைவன் இல்லை. முடிவில்லாத நாடகத்தை யாரும் பார்க்கமாட்டார்கள்... சொளந்தா