முகப்பு

vendredi 31 décembre 2010


ஆண்டு 2010

எத்தனையோ இளவல்களையும்

புன்னகைப் பூவையும் தன்னுள்

இழுத்துக்கொண்ட ஆண்டு!

கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன

ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம்

நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!.

நம்பிக்கை !

நம்பிக்கை !!

நம்பிக்கை !!!

2011...........

mardi 28 décembre 2010

நட்பு


நீயில்லை என்றால்

நானில்லை என்பதல்ல நட்பு

யாருமில்லை என்றாலும்

நானிருக்கிறேன் உனக்காக என்பதுவே நட்பு...

மதிப்பு


உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது

lundi 27 décembre 2010

வாழ......

கற்றுக் கொடுத்தாய்

மலர்களுக்கு மணம் வீச

பறவைகளுக்கு

சிறகை விரிக்க

மேகங்களுக்கு

வான் மழை பொழிய

மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே

மனித நேயத்துடன் வாழ......

நம்பிக்கை


கண்ணீர் வரலாம்

கண்கள் உள்ள்வரை

கவலைகள் வரலாம்

காலங்கள் உள்ளவரை

கண்ணீரானாலும்

கவலைகளானாலும்

நிச்சயம்ஓர் நாள்

மறையலாம்.

நம்பிக்கையாய்

நடைபோட்டால்.....! 

dimanche 26 décembre 2010

காலம் கடந்தே


வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.

வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.

நூல்கள்



நல்ல நூல்களை வாசிக்காத வாழ்வு செத்த வாழ்வே..

வாசிக்க நூல்கள் இல்லாத வீடு வீடல்ல சுடுகாடே..

(புலம் பெயர் தமிழா நீ எத்தனை நூல்களை வாசித்தாய் மனச்சாட்சியை தொட்டு சொல்லு..)






நிகழ்காலம்


எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.

ஏணி


ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.






படிக்கட்டு


சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.




முடியாது.


பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

samedi 25 décembre 2010

நத்தார் தின வாழ்த்துக்கள்...


உங்கள் அனைவருக்கும் குழந்தை ஜேசுவின் இனியதும் இன்பமும் சந்தோசமும் சமாதானமும் அமைதியும் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்கள்...

jeudi 23 décembre 2010

கருவறை


முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-

மகனே!

நீ இருக்க

ஒரு கருவறை இருந்தது

என் வயிற்றில்.......

நான் இருக்க ஒரு

இருட்டறை கூடவா இல்லை

உன் வீட்டில்........

மகஜர்


மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மாபரனுக்கு

யான் எழுதும் மகஜர்

மகஜர் எழுதவெனப் பேனாவை எடுத்தேன்

எதை எழுதுவேன் எனும் சிந்தையில் ஆழ்ந்தேன்

காதைப் பிளக்கும் குண்டு மழையைப் பற்றியா?

கோரத் தாண்டவமாடும் இயற்கை அனர்த்தம் பற்றியா?

தொடர்ந்துகொண்டே செல்லும் படுகொலைகளையா?

நீண்டு செல்லும் காணாமலாக்கப்பட்டோர் பட்டியலையா?

எதைப்பற்றித் தான் எழுதுவேன்?



உறவுகளைப் பிரிந்து அவ தைப்படும் உள்ளங்களையா?

பொருளாதாரத் தடைபற்றியா?

பொருட்களின் விலையேற்றம் பற்றியா?

அலரி விதைக்குப் பலியாகிய கொடுமையையா?

அழிவுப் பாதையில் செல்லும் கல்வி நிலை பற்றியா?

முடக்கப்படும் உரிமைக்குரல்கள் பற்றியா?

மறைமுகமான அச்சுறுத்தல் பற்றியா?

மொத்தத்தில் தொலைந்து போகும் மனிதத்தையா?

எதை எழுதுவேன் என் மாபரனுக்கு




மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே

மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே

மன்னவன் பிறந்திட்டான்

மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்

மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட

மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே

மண்ணுலகில் ஒளி பிறந்திடவே

மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்

மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்

மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்

மாமரி மடியில் பிறந்திட்டான்

இல்லத்தரசி


என்னவளே

உன்னை நான் பார்க்க நினைக்கையில்

பகலாய்...

உன்னுடன் பேச நினைக்கையில்

நிலவாய்...

உன்னுடன் உறங்க நினைக்கையில்

கனவாய்.....

உன்னை நான் தொட நினைக்கையில்

தென்றலாக மாறுகிறாய்

என் காலமெல்லாம் நீ

வருவாயா?

 

காதல்



காற்று வந்தால் தலை சாயும் நாணல்

காதல் வந்தால் தலை சாயும் நாணம்

ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்

இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்

மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்

காதல் வந்து மனத்தை மூடும் மோகம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்

அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்

உயிரே


உயிரே

உன்னோடு நானில்லை

உன் நினைவோடு நானுண்டு

உன் கண்களில் நானில்லை

என் கனவுகளில் நீயுண்டு

நீ உயிர் வாழும் வரை

உன் உறவு வேரொருவனோடு

நான் உயிர் வாழும் வரை

என் உறவு உன்னோடு

lundi 20 décembre 2010

தெரியாது


ஒருவனுடைய செருப்பு அறுந்துவிட்டது. அவன் அதை மறைக்க ஓர் உயாயம் செய்தான். அறுந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டே, டே..! உன்னை விடமாட்டேன்டா ! என்றபடி வேகமாக ஓடினான். அவன் யாரை விரட்டுகிறான் என்பதைப் பார்க்க சிலர் அவன் பின்னால் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ஓடாவிட்டால் நம்மைக் குறை நினைப்பார்களே என்று எஞ்சியவரும் ஓடினார்கள். கடைசியில் செருப்பு அறுந்தவனுக்குப் பின்னால் ஊரே ஓடியது. இப்படி ஏன் ஓடுகிறோமெனத் தெரியாது செருப்பறுந்தவனுக்கு பின்னால் ஓடும் கூட்டமே நம்மில் அதிகம்.






கல்வியின் அடிப்படை


குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.

நிகழ்ந்தது என்ன என்னுள்?

மின்னலாய் வந்தவள் நீதானே..

மீளாமல் தவிக்கிறேன் உன்னாலே.

மறந்தேன்..என்னை

 உன் நினைவில் மிதந்தேன்.





உயிரை


என் உள்ளத்து உணர்வுகளை

தொலைத்தேன் .....உருவம்

தெரிந்த போது என் உயிரையே

தொலைக்க துடிக்கிறேன் ..

jeudi 16 décembre 2010

பிறப்பாயோ இயேசு பாலா


பிறப்பாயோ இயேசு பாலா

வார்த்தையுமே மனுவுருவாய் - வாழ்வின்
இருளகற்றும் ஒளிப்பிளம்பாய்
அருள் மழை பொழியும் இறைமகனாய் - மானிடர்
இடர் நீக்கும் அருட்பொழிவாய்
பொங்கும் மனம் அமைதிபெற
கொதிக்கும் உள்ளம் குளிரடைய
கதிரவனாய் கார்முகிலாய்
அருள்பொழியும் அருளூற்றாய்
அவதரித்தார் இவ்வுலகில் கிறிஸ்து என்னும் யேசுபாலன்

போரினாலே புலம் பெயர்ந்து - வாழ்வில்
போற்றிச் சேர்த்த பொருழிழந்து
அசைந்தாடிய அங்கமிழந்து
அங்கவீனராய் அவலமுற்று
அகதிகளாய் அநாதைகளாய் - எம்மண்ணில்
அவலத்தோடு அமைதியிழந்து
வரட்சியுற்ற உள்ளங்களில் பிறப்பாயோ இயேசு பாலா?

உடலிழந்து உறவிழந்து
உண்மையிலே உயிர் இழந்து
உலகமயமாக்கலிலே உண்மை வாழ்வின் பொருளிழந்து
நாகரீகமென்னும் நாமத்திலே நாளுக்கு நாள்
நன்மை தரும் உண்மைகளை பொய்மையினால் அலங்கரித்து
நடைப்பிணமாய் நலமிழந்து வாழுகின்ற எம் மண்ணில்
நலமிகவே பொழிந்து நீயும் பிறப்பாயோ இயேசு பாலா?


யாவருமே சோதரராய் -மண்ணில்
யார் குலமும் ஓர் குலமாய்
ஓர் உலகம் ஓர் குடும்பம் ஆகிடவே
ஒற்றுமையின் கூரையின் கீழ் வாழ்ந்திடவே
வேற்றுமைகள் இல்லை எம்மில் -இனியும்
வேதனையின் நாமம் இல்லை
ஒருமித்து மகிழ்வுறவே, ஒன்றித்து வாழ்ந்திடவே
ஒற்றுமையின் ஒன்றிப்பால் - உலகில்
இறையாட்சி மலர்ந்திடவே
வந்துநீயும் பிறப்பாயோ இயேசு பாலா

நன்றி.....

கவிதை


கவிதை என்பது
எந்த எழுத்து
போனாலும்
கரு இருப்பதே
கவிதை
க போனால் விதை
வி போனால் கதை
தை போனால் கவி

துயற்கொள்ள ஆளுன்டோ


இனிமையாக முடிந்துவிட்டால்

இனைந்து மகிழ ஆள் உண்டு

துன்பமென்று மாறி

துக்கமென்று முடிந்துவிட்டால்

துயற்கொள்ள ஆளுன்டோ ???

mardi 14 décembre 2010

பொருள்.


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

சும்மா இருப்பவன்


பிணங்கள் நீரில் தாழ்ந்துவிடும், ஆனால் உயிருடன் இருப்பவன் நீந்திக் கரைசேருவான். போராடுபவனே கரை சேர முடியும் என்பது இதன் அர்த்தமாகும், பிணம்போல சும்மா இருப்பவன் பிணம்போல தாழ்ந்து போக வேண்டியதுதான்.

lundi 13 décembre 2010

வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.


மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டுமாயின் அன்பு உன் அன்னை, அறிவு உன் தந்தை, அறம் உன் சகோதரன், பொறுமை உன் மனைவி, பண்பு உன் மகள், ஆண்மை உன் மகன் என்று கருதி, இவைகளை ஒரு குடும்பமாக உருவமைத்து, இந்தக் குடும்பத்துடன் ஒன்றுபட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

vendredi 10 décembre 2010

ராசி


முழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.
நேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.

முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

தரம்


அரசியலுக்குப் பின்னால் கொள்கை இருக்கணும்,

கடமைக்குப் பின்னால் நேர்மை இருக்கணும்,

பணத்துக்குப் பின்னால் உழைப்பு இருக்கணும்,

அப்போதுதான் எதிலுமே தரம் இருக்கும்.

jeudi 9 décembre 2010

ஒரு நாள்


வளரும்போது அழுத்தங்கள்
வருவதைத் தவிர்க்க முடியாது,
ஆனால் முயற்சியில் தொடர்ந்து
திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள்
அழுத்தங்கள் தோற்றுப்போகும்.

mercredi 8 décembre 2010

அவள்


காதலின் சின்னம் என்ன என

கேட்டேன் அவளிடம்

கல்லறை என்றள் அவள்

கல்லறைக்கு வழி என்ன எனக்

கேட்டேன் அவளிடம்

என்னை காதலித்துபார்

என்றள் அவள்

அன்பே


என்னுள் நீ

வந்தவுடன் உணர்ந்துவிட்டேன்....

இத்தனை அழகு மிகுந்ததாக

இயற்கை இருந்தாலும்

என்றாவது ஒருநாள்

இயற்கையின் அழகு கூட மாறலாம்....

உலகத்தில் மட்டுமல்ல....

உள்ளத்திலும் என்றும்

மாறாத அழகி

அன்பே    நீ! 
 
மட்டும்தான்.......

போராடு


வளரும்போது அழுத்தங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் முயற்சியில் தொடர்ந்து திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள் அழுத்தங்கள் தோற்றுப்போகும்.
பலத்தை வைத்து பலவீனமானவர்களை தாக்கினால் அதற்க்குப்பேர் வெற்றி இல்லை பொறுக்கித்தனம். பலவீனமான மக்களுக்காகப் போராடுவதுதான் உண்மையான பலம்.

mardi 7 décembre 2010

சிந்திக்க தெரிந்த மனிதன்


சிந்திக்க தெரிந்த மனிதன்... என்றும் சிறந்தவழிஇலேயே நடப்பான்!!!!!!!