முகப்பு

lundi 29 juillet 2013

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.



இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

mercredi 24 juillet 2013

பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.



ரொட்டித் துண்டுதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், ஒரு ரொட்டித் துண்டு உருவானதற்கு பின்னே எவ்வளவோ உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. ஆகவே உணவை விழுங்காதீர்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

திருப்தி



தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

mardi 23 juillet 2013

கல்லறை



பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, வேலை செய்யாமல் காலம் தள்ள எண்ணினால் வாழ்க்கை வீணாகிப் போகும், சீக்கிரமே கல்லறைப் பயணமும் ஆரம்பித்துவிடும்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.



கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.


பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.
ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.
கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கிய

vendredi 19 juillet 2013

குறைகளை




உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.
ஒருவரிடம் எந்தக் குறையைக் காண்கிறீர்களோ, அந்தக் குறை உங்களிடம் இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் உள்ள குறைகள் என்னவென்பது உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும்.

சுவர்க்கமாகும்.





நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.

ஓய்வு பெறுவீர்கள்.



ஆழ்ந்து சுவாசியுங்கள்… உற்சாகமாக நடக்கப்பழகுங்கள்… எளிமையாக சாப்பிடுங்கள்… அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்… ஆழமாக சிந்தியுங்கள்.. உண்மையாக நடந்து கொள்ளுங்கள் இப்படி செய்தால் உங்கள் உணர்ச்சிகள் இயற்கை நிலையடைந்து நீங்கள் பூரண ஓய்வு பெறுவீர்கள்.