முகப்பு

samedi 30 avril 2011

எனக்காக....



எனக்காக....
ஒரு பதிலை...
எழுத மறுக்கிறது.....
முகம் தெரியாமலே.....
முகவுரை எழுதிவிட்டேன்...
முடிவுரையை நீ எழுது....
உன் பதிலில் நான் இருந்தால்.....
உன்னை என்மனதில்.....
காலம் முழுதும் சுமப்பேன்...
இல்லையேல்...
உன் நினைவுகளை....
வலிகளாய் சுமந்தபடி.... 
விடைபெறுவேன்....
உனக்காக .....

அழகு



எங்கும் அழகு



எதிலும் அழகு


பொங்கும் அழகு


பொழியும் அழகு


பார்க்கும் விழியும்

நினைக்கும் மனதும்

தூய்மையாய் இருப்பின் 

யாவும் அழகு..

vendredi 29 avril 2011

பிரச்சனை



பிரச்சனை

பிரச்சனையில் இருந்து தப்பித்து போவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனையை புரிந்துகொண்டு வெற்றி கொள்ளுவதற்கும் தேவையாக இருக்கிறது”. பிரச்சனையில் இருந்து தப்பித்துப்போக முயன்றால் அது உங்களை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும். பிரச்சனையை புரிந்து கொண்டு நீங்கள் தீர்க்க முயலும் போதுஇ அது உங்களை விட்டு முற்றிலுமாக நீங்கி விடும்.

பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாதலால் அவற்றை அவ்வப்போதே தீர்த்து விடுவது அவசியம். இல்லாவிட்டால் அவை ஒன்று சேர்ந்து சுமையாகி உங்களை அழுத்தத் தொடங்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும் பெண்களும் மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று முறிந்து போகிறார்கள்.
எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சனையி்ன் யதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்கு பிரச்சனையில் இருந்து தப்பி ஓட முயல்கிறானோ அந்த அளவுக்கு வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். பிரச்சனையை நேரடியாகச் சந்தித்து அதன் மையப்பகுதியில் நுழைந்து அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது நீங்கள் பலம் பெறுவதோடு அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள்.
மதியுண்டு கற்புடைய மனைவியுண்ட
வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!
எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!

பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறத

mardi 26 avril 2011

நிழலை தேடுகிறார்கள் !



ருசி பார்க்க பற்களில்லை
தோள் கொடுக்க தோழர்கள் இல்லை
ஆதரவாய் பேச பிள்ளைகள் இல்லை
முதியோர்களுக்கு கிடைத்தது
முதியோர் இல்லம் என்னும்
திறந்த வேலி சிறைவாசம் !
ஆயுள் முடியும் காலத்தில்...
ஆயுள் முடியும் வரை
இங்கு இவர்களுக்கு விடுதலையில்லை !
பிள்ளைக்களின் குடை
நிழல் கொடுக்க மறுக்க...
திறந்த இடத்தில்
நிழலை தேடுகிறார்கள் !

தாயை வணங்கு



பேசாத கல்லை வணங்குவது மூடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு

dimanche 24 avril 2011

உத்தான பெரு விழா வாழ்த்துக்கள்



சாவுக்கு சாவுமணி அடித்து
கல்லறைக்கு கல்லறைகட்டி
மரணத்தை மண்டியிடச் செய்து
வெற்றி வீரனாய் உயிர்த்தெழுந்த
கீறிஸ்துவின் உத்தான பெரு விழா வாழ்த்துக்கள்
உங்கள்  அனைவருக்கும் உரித்தாகட்டும்
sounthyen.blogspot.com

vendredi 22 avril 2011

"அம்மா"



ஓராயிரம் மைல்கள் தள்ளி இருந்து,
தொலைபேசியில்
"அம்மா
என்று உச்சரித்த ஒரு நொடியில்,
உச்சரிப்பின் வித்தியாசம் புரிந்து,
"உடம்புக்கு என்னடா செய்யுது? " 
என்று,
பதறியபடி கேட்டாள்........
மருத்துவம் படிக்காத
அம்மா

jeudi 21 avril 2011

வழிநடத்தும்.

நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.

'கடன்காரன்'


                   நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
                    நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

mardi 19 avril 2011

பொதுநலமாக சிந்தி,


  
எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.

மனிதன்.



அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, 
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், 
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, 
தன்னையறியாமல் தவறு செய்து, 
தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

lundi 18 avril 2011


நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரங்கள்



இருபத்தி நான்கு மணி நேரங்கள் என்பது கூடியதோ குறைந்ததோ அல்ல ஆனால் அதை ஒருவர் பயன்படுத்தும் விதத்திலேயே அதன் அளவு வேறுபடும். வரவு செலவுத் திட்டத்தில் பணத்தை செலவிடுவதுபோல திட்டமிட்டு நேரத்தை பாவிக்க வேண்டும்.

ஆச்சரியம்


காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள், அட என்ன ஆச்சரியம்! உங்கள் பணப்பையில் மந்திரம் போட்டதுபோல் உங்கள் வாழ்க்கைப் பிரபஞ்சத்தின் தசையான 24 மணி நேரம் நிரம்பி இருக்கிறது. அது உங்களுடையது, அதுதான் உங்கள் செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம். யாராலும் அதை உங்களிடமிருந்து எடுத்துவிட முடியாது. அதைக் களவாட முடியாது. உங்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகவோ குறைவாகவோ யாருக்கும் கிடைக்காது.

நேரங்கள்.


சூரிய உதயத்திற்கும் அத்தமனத்துக்கும் நடுவே இரண்டு தங்க மயமான மணி நேரங்கள். ஒவ்வொன்றிலும் அறுபது வைர நிமிடங்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்டு பிடிப்புக்களுக்கு பரிசு எதுவும் கிடையாது. ஏனெனில் அவற்றை மீட்க முடியாது.

dimanche 17 avril 2011

நினைக்கும்போது


  ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.

அன்பால் பூப்பதே கா...த...ல்



கண் அசைவில்
வருவதல்ல காதல்
காலம் முழுவதும்
வருவது தான் காதல்
உறக்கம் இழப்பதல்ல காதல்
உறுதியாய் இருப்பதே காதல்
அழகில் மலர்வதல்ல காதல்
அன்பால் பூப்பதே கா...த...ல் 

ஆயுள் கலம் வரை



அன்பு விலை கொடுத்து வாங்கும்
பொருள் கிடையாது மனசும் மனசும்
பேசும் வார்த்தைகள் கிடையாது
not like a sex இரு உடல்கல்கள் சேர்ந்தால்
sex இருமனம் சேர்ந்தால் அன்பு கல்யாணம்
ஆயுள் கலம் வரை »

கவிதை



கவிதை எழுத நினைக்கவில்லை
காகிதம் கண்டவுடன் எழுதுவது எல்லாம்
கவிதையாகி போனது இன்று


உன்னைக் காணும் முன்
என் இதழ்கள கூட
பேசியதில்லை
உன்னைக் கண்ட பின்
என் இமைகளும் பேசுகிறதே
இது தான் காதல் வித்தையா??????