முகப்பு

dimanche 22 septembre 2013

வெளிப்படும்

 
Photo : நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
 தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்.
 
நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்


ஆயுள் நீண்டதல்ல

 
Photo : எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.
 
எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.


இருப்பது மேலானது

 
Photo : ரோஜா பூ 
காதலிக்க தெரியாத 
பெண்ணின் கூந்தலில் 
இருப்பதை விட, 
காதலிக்க தெரிந்த 
ஆணின் கல்லறையில் 
இருப்பது மேலானது…
 
 
ரோஜா பூ
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த
ஆணின் கல்லறையில்
இருப்பது மேலானது…


அம்மா அம்மா தான் !"

 
Photo : "உள்ள சொந்தம் எல்லாமே 
சும்மா சும்மா தான்! 
"உண்மையான சொந்தம் -உன் 
அம்மா அம்மா தான் !"
 
"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!
"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !"


தலைக்கனம்

 
Photo : ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.
 
தகுதி இல்லாதவர்களைப் புகழ்ந்தால் அவர்களுக்கு தலைக்கனம் ஏறிவிடுகிறது, அவர்களை பகட்டுக்காரர் ஆக்கிவிடுகிறது. இப்படியான பகட்டு முட்டாள்தனம் என்ற காற்று நுழைவதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகிறது

சேரும்

 
நம்மில் எவரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறை நிறைகளை பரஸ்பரம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் திசைமாறிப் போனால் அவரை திருத்த முயலவேண்டும், இல்லையேல் அந்த உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நல்ல பண்புடன் வளர்த்தால் அந்தப் பழக்கம் உங்கள் பேரக்குழந்தைகளிடமும் போய்ச் சேரும்


lundi 2 septembre 2013

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.





நாம் நமது நோக்கங்களை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுகிறோம் ஆனால் உலகமோ நமது செயற்பாடுகளை வைத்தே நம்மை மதிப்பிடுகிறது. – சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

காட்டும்.



சரியென்று உறுதி செய்யாமல் எந்தப் படிவத்திலும் கையெழுத்து வைக்கக்கூடாது. ஆனால் சரியென்று தெரிந்தும் அதை செய்யாமல் இருப்பது உறுதியின்மையைத்தான் காட்டும்.

பெயரெடுக்கக் கூடாது.



இன்று ஒன்றைப் பேசுவோர் நாளை இன்னொன்றைப் பேசுவார்கள் இதை ஊசலாட்ட நடத்தை என்பார்கள். இத்தகைய தெளிவில்லாதவர்களால் மாண்புகளை பேணி வாழ முடியாது. ஊஞ்சல் இந்தப்பக்கமும் போகும் அந்தப்பக்கமும் போகும் அதற்கு எங்குபோவதெனத் தெரியாது. உலகில் 90 வீதமானவர்கள் ஊசலாட்டக்காரரே, அவர்களில் நாமும் ஒருவர் என்ற பெயரெடுக்கக் கூடாது.

நன்மை – தீமை




நன்மை – தீமை இரண்டும் நம் வாழ்வில் மோதிக்கொண்டே இருக்கின்றன. அதில் எதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு நமது கையிலேயே இருக்கிறது. தீமையை வெற்றிபெறச் செய்வது இலகு, அதனால்தான் உலகம் தீயவர்களால் நிறைந்து கிடக்கிறது. ஆகவே நன்மையை வெற்றிபெறச் செய்யவே போராட வேண்டும்.

தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.



நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.




வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.
வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய் 
நான்வர வேண்டும் 
உன்முகம் தொட்ட சுகத்தில் 
நான் கவியெழுத வேண்டும் 
உன்னிரு கைகளுக்குள் 
உயிர் வாழவேண்டும்

நாட்கள்



  நாட்கள் இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை