முகப்பு

lundi 30 avril 2012

அடிமைகள்


இடர்களை எதிர் கொள்ளத்
துணிந்தவன் மட்டுமே
உண்மையில் சுதந்திர மனிதனாகும்.
இடர்களை எதிர் கொள்ள
தயங்குவோர் விலங்கு
பூட்டிய அடிமைகள்........

அர்த்தம்



வாழ்க்கையில் தோல்வி மட்டும்
தொடர்ந்து வந்தால்
தோற்று கொண்டிருக்கிறோம்
என்று அர்த்தம் இல்லை......
தோல்விய தாண்டி
சென்று கொண்டிருக்கிறோம்
என்று அர்த்தம்....

மனமே



சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு...
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு.....
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு.....
சிந்தையதில் வைத்துக் கொள் மனமே.....

சந்தேகப்பட்டு வாழாதே...


சந்தேகப்பட்டு வாழாதே...
சந்தேகப்படும்படியும்
வாழாதே - ஏனெனில்
அன்பை பெறவோ
கொடுக்கவோ நேரம் இருக்காது..
சந்தேகப்படவே
நேரம் சரியாகிவிடும்...............

vendredi 27 avril 2012

முடியுமா

 
 
தேவையற்ற பகுதிகளை
இழக்கின்ற போதுதான்
கல்லே சிற்பமாகிறது .
வேதனையான வலிகளை
சுமக்கின்ற போதுதான்
வாழ்வே இனிமையாகின்றது .
துரத்தி வரும் தோல்விகளால்
மட்டுமே வெற்றி நம் கைக்கு
சுலபமாய் கிடைக்கிறது.
வாழ்க்கை என்பது வாழ்ந்து
... விட்டு போவதன்று
வரலாறாய் இருப்பதேயாகும்
நத்தை தன் கூட்டைசுமையாய்
நினைத்தால் நகர்ந்திட முடியுமா?
உயிர் வாழ்ந்திட முடியுமா???????


மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்

 
மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!

 ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
 உங்களது அன்றாட
... நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
 எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
 ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
 நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
 நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
 நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
 மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
 மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
 


jeudi 26 avril 2012

இதயம்



உங்கள் நண்பர்கள் இறந்துபோகும்வரை அவர்களுக்கான அன்பையும் கருணையையும் பூட்டி வைக்காதீர்கள். அவர்கள் வாழ்வை இனிமையினால் நிரப்புங்கள். சமாதானமான சந்தோஷமான வார்த்தையை பேசுங்கள். அவர்கள் செவிகள் கேட்கட்டும் இதயம் சந்தோஷிக்கட்டும்.

பிறவி


இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ? 

சந்தோஷத்தை



விரோதியை இன்னமும் மறக்காதவன் வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிப்பதில்லை.

ஆசீர்வதிக்கப்பட்டவன்


உங்கள் கடமையை கண்டறிந்து செய்யுங்கள் என்பதுதான் கடவுளின் அருள் வாக்கு. ஏனென்றால் தன் கடமையை கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் அவனுக்கு வேறெந்த ஆசீர்வாதமும் தேவையில்லை.

நன்றி கூறுங்கள்


இயற்கையின் விதிப்படி உங்கள் குறுகிய வாழ்வை கழியுங்கள். பழுத்த ஆலிவ் இலை தன்னை சுமந்து நின்ற கிளையை வாழ்த்தி, அதற்கு உயிர் கொடுத்த மரத்திற்கு நன்றி கூறிவிட்டு உதிர்வதைப்போல பயணத்தின் முடிவுக்கு சாந்தத்துடன் நன்றி கூறுங்கள்.

நேரத்தை



 வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.

mardi 24 avril 2012

யோசனை கூட செய்யாதே


தண்டனை கொடுப்பதற்குத்
தாமதம் செய்!, ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு
யோசனை கூட செய்யாதே!

குற்றம



நிலவு இரவை எதிர்பார்கிறது
சூரியன் பகலை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
நான் உன்னிடம் காதலை
எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம.!!!

வாழ்க்கை

 
புன்னகைத்துப் பார்...
பூமி வசப்படும்!
முயற்சித்துப் பார்...
வானம் வசப்படும்!
காதலித்துப் பார்...
கவிதை வசப்படும்!
... துணிந்து பார்...
வெற்றி வசப்படும்!
வாழ்ந்து பார்...
வாழ்க்கை வசப்படும்!


கவிதை

 
 
என் இனிய கண்ணே
உன் நினைவலைகள்
என் இதய குடத்தில்
நிரம்பி வழிகிறது
அதன் மிச்சம் தான்
குளத்தில் விழுந்ததால்
... தாமரையாக மலர்கிறது
காற்றுடன் கலந்ததால
தென்றல் ஆகிறது
காகிதத்தில் விழுந்ததால்
கவிதையாகிறது!!!!!!!!!


lundi 23 avril 2012

கண்ணீரை துடைக்க



நீ என் நண்பன்டா
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்.
உன் சிரிப்பை ரசிக்க...
நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
உன் முன்னாள் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க..


அறிமுகம்


ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!
 எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம்.
வாழக் கிடைத்த வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது வசந்தத்தின்
முகவரியை அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

நட்பு என்பது நிழல்



காதல என்பது கண்ணிர் துளி,
இறந்த  சில நிமிடங்கள் வரை வரும்.....
நட்பு என்பது நிழல்,
இறந்த பின்பும் உன்னோடு
கடைசி வரை வரும்..........

அமைதி



அமைதியை தேடித்தேடி 
தினம் ஆளாய்ப்பறக்கிறோம்...... 
அது நம் ஆன்மாக்குள்ளே
இருப்பதை அறிய மறுக்கிறோம்.....................
எதையோ தொலைந்ததாய்
நினைத்து நினைத்து நித்தம் நித்தம் தேடுகிறோம் ...........
ஆனால் எதைத்தொலைத்தோம்
என்றுதான் “விடை தேடுகிறோம்” .........

dimanche 22 avril 2012

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி




சீவரெத்தினம் செல்வராஜா ( செல்வா )
canada
அன்னைமடியில் : 19 . 07 . 1958 மண்ணின்மடியில் : 19 . 04 . 2012    
தமிழ் அன்னையின் தனையனுனைப்பறித்து
இயற்கை அன்னை தூரோகம் இளைத்துவிட்டாள்
தமிழ் அன்னை மீண்டும் உனை அள்ளித்தன்
கருவில்வைக்கத் தவிக்கிறாள் வாராயோ..தனையனுனை இளந்த உன்னினம்
எண்ணிலாத் துயரத்தில் துவழ்கிறது பாராயோ..இயற்கை அன்னை தன் மனம் தனைமாற்ற வேண்டும்
மீண்டுமுன் தாய் கருத்தரிக்க வேண்டும்
தமிழ் அன்னையின் தனையனாக மீண்டும் நீ பிறக்க வேண்டும்
உன்னினத்தின் உணர்வில் நீ திளைக்கவேண்டும்
அதுவரை நம்மை நாமே தேற்றி நிற்போம்
விண்ணில் இருந்தாலும்
காற்றுள்ள வரை கடலுள்ள வரை
நீல வானும் நிலவும் உள்ளவரை
உன் நாமம் எந்நாளும் மறந்தறியோம்
தாயக நினைவுகள் ஆயிரம் வந்தாலும்
சத்தியமாய் அத்தனையிலும் நீங்கள் இருப்பீர்கள்
தமிழ் அன்னையின் தனையனே
போய் வா.. போய் வா..
சர்வதேச தமிழ் வானொலி ( IRT. FRANCE ) அதிபர் விசு செல்வராஜா, அறிவிப்பாளர்கள், நேயர்கள். தகவல்: உங்கள் சவுந்தா ( அறிவிப்பாளர்,,, ITR. FRANCE, sounthyen.blogspot.com)


vendredi 20 avril 2012

தோழனாக இருப்பேன்


*மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது

*உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்

*உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது

*நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்..........

jeudi 19 avril 2012

விதையுங்கள்.


ஒவ்வொரு நாள் காலையில் எழுந்தவுடனும்,
ஒவ்வொரு இரவில் உறங்க முன்னும்,
வளமையான எண்ணங்கள்,
வெற்றி, அமைதி,
செல்வம், செழிப்பு,
 உடல்நலம் போன்ற
எண்ணங்களை மனதில்
விதையுங்கள்.

தீர்மானம்


நீ எதைச் செய்ய வேண்டுமோ முதலில்
அதைத் தீர்மானம் செய்.
நீ எதைத் தீர்மானம் செய்கிறாயோ
அதை செய்துவிடு.

தன்னம்பிக்கை



தளர்ந்துவிட்ட தன்னம்பிக்கையை
தூக்கி நிமிர்த்துங்கள்,
தாழ்ந்துவிட்ட சுய மரியாதைக்கு
உயிர் கொடுங்கள்.
மூட்டமிடும் மூட நம்பிக்கையை
முறியடியுங்கள்,
 எதிர்ப்படும் தடைகளை தகருங்கள்.
  மறந்துவிடாதீர்கள்
விதிக்கு இன்னொரு பெயர் எண்ணம்,
ஆகவே உங்கள் எதிர்காலத்தை
எண்ணங்களால் கட்டுங்கள்,
உங்கள் விதியை நீங்களே தீர்மானிப்பீர்கள்.


mercredi 18 avril 2012

ஒரு சொல்


ஒரு சொல் ஒருவருடைய
வாழ்க்கையை பிரதிபலிக்கும்.
உதாரணம் உண்மை : அரிச்சந்திரன்,
பொறாமை : துரியோதனன்,
தானம் : கர்ணன்,
அறம் : தர்மன்,
பக்தி : பிரகலாதன்.
இந்த சொற்களை நினைத்தால்
 இவர்கள் நினைவுக்கு வருவார்கள்.
வாழ்வே சொற்கள்தான்
என்பதற்கு இதுவே உதாரணம்

ஏன் முடியாது





எதுதான் முடியாது..? ஏன் முடியாது..? வளமுடைய வாழ்வும் நலமுடைய சூழலும், வானளாவிய சாதனையும் எனது பிறப்புரிமை..! என்ற தீர்மானம் நம்மிடம் வரவேண்டும்.
நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்.

அறுவடை



உள்ளத்தில் ஒரு வார்த்தையை விதை
 ஓர் எண்ணத்தை அறுவடை செய்வாய்.
ஓர் எண்ணத்தை விதை
ஒரு சொல்லை அறுவடை செய்வாய்.
ஒரு சொல்லை விதை
ஒரு பழக்கத்தை அறுவடை செய்வாய்.
ஒரு பழக்கத்தை விதை
ஒரு பண்பை அறுவடை செய்வாய்.
ஒரு பண்பை விதை
வாழ்வின் விதியையே நீ அறுவடை செய்வாய்.

lundi 16 avril 2012

உன் அழகில்

 
உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
... மொத்த உன் அழகில்…..
நான் தொலைந்து போனேன்.
 


இடையில் வருவது

 
 
 
* வாழ்க்கை என்பது
கணவனுக்கும் - மனைவிக்கும்
இடையில் வருவது!

* நம்பிக்கை என்பது
வெற்றிக்கும் - தோல்விக்கும்
... இடையில் வருவது!

* காதல் என்பது
ஆணுக்கும் - பெண்ணுக்கும்
இடையில் வருவது!

* காமம் என்பது
மோகத்திற்கும் - தேகத்திற்கும்
இடையில் வருவது!

* கனவு என்பது
கண்ணுக்கும் - இமைக்கும்
இடையில் வருவது!

* நினைவு என்பது
நெஞ்சுக்கும் - இதயத்திற்கும்
இடையில் வருவது!

* வார்த்தை என்பது
உதடுக்கும் - உள்ளத்திற்கும்
இடையில் வருவது!

* கவிதை என்பது
கற்பனைக்கும் - கவிஞனுக்கும்
இடையில் வருவது!

* பயணம் என்பது
தூரத்திற்கும் - நேரத்திற்கும்
இடையில் வருவது!

* மரணம் என்பது
மண்ணுக்கும் - மனிதனுக்கும்
இடையில் வருவது!


dimanche 15 avril 2012

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே நண்பா!



தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே நண்பா!

விழித்தெழு நண்பா!
கதிரவனைப் பார்!
மாலையில் மங்கலாய் மறைந்தாலும்
மறுநாள் காலையில் மலராமலா இருக்கிறது?

மீன்குஞ்சு நீந்துவதற்கு துணையையா தேடுகிறது?
கடலலை சிறிஎழ காலத்தையா எதிர்பார்க்கிறது?
மின்மினிப் பூச்சி மின்னுவதற்கு மின்சாரமா கேட்கிறது?
விழித்தெழு நண்பா!

காத்திருக்கும்.


இரவின் மடியில்
சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து
நடைப்பயணம்-செய்த்து பார்
விடியல்
உனக்காக வரவேற்பு
கம்பளம் விரித்து
காத்திருக்கும்.

உன்

 
 
ஒவ்வொரு நொடியும்
பிறக்கிறேன்
உன் சிரிப்பினால்...
ஒவ்வொரு நொடியும்
இறக்கிறேன்
உன் கோபத்தினால்...
... ஒவ்வொரு நொடியும்
துடிக்கிறேன்
உன் மௌனத்தினால்...
ஒவ்வொரு நொடியும்
வாழ்கிறேன்
உன் இறுக்கத்தினால்...



நட்பே


நட்பே!!!
தினம் ஒரு முறையாவது பூக்கட்டும்
உன் இதய தோட்டத்தில்
என் நினைவு பூக்கள்..

vendredi 13 avril 2012

‎'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!


'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!


   கர வருடம் மறைந்து இன்று நந்தன புத்தாண்டு மாலை 5.46 மணிக்கு மலர்கின்றது.

பழையன கழிந்து புதியன புகுதல் என்பது போல், கடந்த கால கசப்பான அனுபவங்கள் மறைந்து இனிய ஆண்டாக மலர வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாக இருக்கின்றது.

நம் நாட்டின் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த அவா இரட்டிப்பாகின்றது. ஆம், அடி மேல் அடி என்பதாகத்தானே எம்மவரின் வாழ்க்கை அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன? எம் வாழ்விலும் புது வசந்தம் வீசாதா என்று ஏங்கும் உள்ளங்கள் தாம் எத்தனை எத்தனை?

இவ்வேளை, பிறக்கும் புத்தாண்டு எமது வாழ்வில் சுபிட்சத்தை அள்ளித்தரும், அள்ளித்தர இறைவன் அருள்பாலிக்க வேண்டும்.

இது தவிர, புதிதாகப் பிறக்கும் நந்தன ஆண்டு நல்ல மழை பெய்யும், அமோக விளைச்சல் இருக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறையும் என்றெல்லாம் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றாலே பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். வரப்போகும் புத்தாண்டு எப்படி இருக்குமோ? இந்த வருடமாவது வளமான எதிர்காலம் அமையுமா? விலைவாசி குறையுமா போன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது நியாயம்தானே?

நம் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பதாகவே, பிறக்கப்போகும் தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பஞ்சாங்கமும் எடுத்தியம்புகிறது.

பஞ்சாங்கத்தில்

நல்ல மழை

"தமிழ் வருடங்கள் 60இல் நந்தன வருடம் 26ஆவது ஆண்டு. ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை புதுவருடம் பிறக்கிறது.

சித்திரை முதல் நாள் எந்த கிழமையில் பிறக்கிறதோ அதைப் பொறுத்துப் பலன் ஏற்படும். வெள்ளிக்கிழமை வருடப்பிறப்பு என்பதால் பஞ்சாங்கப் பலன் படி பெருமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பலத்த மழையினால் மலைவாழ் மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்படலாம்.

இந்த ஆண்டு வர்த்தக மேகம் உற்பத்தி ஆவதால் நல்ல மழை பொழிந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு 9 புயல்கள் வீசும். அதில் நான்கு பலவீனமடைந்ததாகக் காணப்படும். ஏனைய 5 புயல்களினால் எல்லாப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். ஆறுஇ குளம் நீர் நிரம்பி வழியும்.

இந்த ஆண்டு ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பு, சீற்றம் ஏற்படலாம். சூறாவளிக் காற்றால் கடலோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆண்டு தான்யாதிபதியாக சூரியன் வருவதால் நெல், அரிசி, நவதானியங்கள் விலை கொஞ்சம் குறையலாம்.

பொதுவாகவே இந்த ஆண்டு சுக்கிர பகவான் மந்திரியாக வருவதால் வேலை இல்லாத் திண்டாட்டம் வெகுவாகக் குறையும்.

நம் நாட்டு அரசியல் நிலையிலும் சிறு மாற்றங்கள் நிகழலாம்" எனக் கூறப்படுகிறது


jeudi 12 avril 2012

காணாமல் போகிறது விவசாயம்

 
வயலோடும் வரப்போடும்
சேறோடும் சகதியோடும் புரண்டு
மண்வாசனை நுகர்ந்தான் பாட்டன்.....

வரப்பிலிருந்து மண்சாலைக்கு மாறி
களத்து மேட்டில் அமர்ந்து நெல்மணிகளை
... அளந்தான் தந்தை ……

தார்ச்சாலை வழியே வந்து நெல்விற்ற
பணத்தை பெற்றுச் சென்றான் மகன்.....

சேறும் சகதியும் தூர் நாற்றமெடுக்கிறது
மண்வாசனை புரியாத பேரனுக்கு…..

நம் கண்முன்னே
காணாமல் போகிறது விவசாயம்.....


புத்தாண்டு வாழ்த்துக்கள்


நல்ல வருஷமாக திகழ்ந்து
நல்ல பல மாற்றங்கள் நிகழட்டும்.
எங்கும் அமைதியும் அன்பும் பரவட்டும்.
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் 
அனைவர்க்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மூலதனம்



முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!

நீயும் நானும் ஒன்று!



அடுத்த வேலை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
தமிழனாய் இருந்துக்கொண்டு
தாய்மொழியை மதிக்காதவர்களையும்
இன உணர்வு இல்லாதவர்களையும் கண்டு
உன் உள்ளம் கொந்தளித்தால்...
நீயும் நானும் ஒன்று!

mercredi 11 avril 2012

மனிதர்களின் கணிப்பு.


காலில் போடும் செருப்பை கண்ணாடி கேசில் வைத்து விற்கிறார்கள், ஆனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை உண்ணும் பழங்களை தெருவில் போட்டு விற்கிறார்கள். இதுதான் மனிதர்களின் கணிப்பு.

முதியோர் இல்லத்தில் ஒரு அகதியாய்

 
 
 
ஆசை ஆசையாய் பெயர் சூட்டி....
மெல்ல மெல்ல நடை பழக வைத்து ....
சிந்திய சோற்றுப் பர...ுக்கைகளை
சிரித்தவாறு அள்ளி எடுத்ததும் ...
“பீ” யை மிதிக்காதே என்று அருவருப்பின்றி
அதை கையினால் எடுத்து போட்டதையும் ...
பல முறை தூக்கத்தை கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்....
பள்ளியில் சேர்பதற்கு பல மணி நேரம் வரிசையில் நின்றதும் ....
மானத்தை விற்று கடன் வாங்கி் இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்தும் .....
தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும் .....
இருந்த நிலத்தை விற்று கல்லூரிக்கு அனுப்பியதும்
இல்லாத பரிட்சைக்கு பணம் கொடுத்ததும் ....
வேலைக்கு சேர்வதற்காக வீட்டை விற்று பணம் கொடுத்ததும்.....
தலைக்கு மேல் கடன் வாங்கி கல்யாணம் செய்து வைத்ததும்.....

இன்று
முதியோர் இல்லத்தில் ஒரு அகதியாய்


நட்பு அழகானது

 
 
நட்பு அழகானது அது
நட்பாக இருக்கும் வரை
நட்பில் காதலோ, காமமோ
ஆசை வார்த்தைகளோ,
ஆபாச வார்த்தைகளோ
... இருத்தல் கூடாது
நட்பை நட்பாக மட்டும்
பாருங்கள், நலமாக வளரும்
நட்பு கண்ணாடி போன்றது
அதை உடைத்து விடாமல்
பார்த்துக்கொள்வது மிக
அவசியம்..... நட்பு அழகானது


dimanche 8 avril 2012

அம்மா



அன்பு என்ற வார்த்தைக்கு
அகராதியில்
அர்த்தம் தேடினேன்
அம்மா
என்றிருந்தது
எப்பொழுதும்......

மீட்புக்கான மரணம்



அன்பை விதைத்தவர் தன் உயிரைக் கொடுத்தவர்
உன்னைப் போல் பிறரை நேசி என்றவர்
பாவிகளின் பாவங்களுக்காக மரித்தவர்
தனது மரணத்தால் உண்மையை உணரவைத்தவர்
யேசு மரித்து, உயிர்த்து 19 நூற்றாண்டுகள் கழிந்து சென்றாலும்,
இன்று வரை அவரின் தியாகம் அன்பு, மக்களால் மறக்கமுடியவில்லை!
அற்பணிப்புள்ள மரணம்! மீட்புக்கான மரணம்!

mercredi 4 avril 2012

மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த

 
 
மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த
1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்
2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.
4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.
5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.
9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்
11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.
12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.
13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.
14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.
16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.
17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.
19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.
20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.
22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.
23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.
24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
25) அச்சம் தவிருங்கள்.
26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.
27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.
28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.
29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருட்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.
30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

வாழ்ந்து காட்டுவோம்

 
 
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலே துளி
என்கிறது
நட்பு
 
அன்பு… காதல்… நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.
இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – என்றார் வள்ளுவப் பெருந்தகை.
சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.
எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்!