முகப்பு

vendredi 23 septembre 2011

உன்னதமானவை.


எல்லா உறவுகளிலும் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ள உறவுதான் அதிக முக்கியமானவை. காதலும், கல்யாணமும், பெற்றோராக இருக்கும் குடும்ப உறவுகளில் உள்ள சந்தோஷங்கள்தான் வாழ்வின் சிறந்தவற்றுக்கெல்லாம் அடிப்படையானவை, உன்னதமானவை.




ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


அ. அடுத்தவனிடம் எவ்வளவு செல்வங்கள் அதிகாரங்கள் இருந்தாலும் அதில் எனக்கு ஆர்வமில்லை.

ஆ. என் குடும்பத்திற்கும் எனக்கும் தேவையான பாதுகாப்பும், கௌரவமும் சம்பாதித்தால் போதுமானது.

இ. காற்றைத் துரத்தி கஷ்டப்பட்டு என் அமைதியை குலைக்கமாட்டேன்.

ஈ. மற்றவரிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிடும் மாயச் சூழலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்.



பூ பூக்க


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.



mercredi 21 septembre 2011

இதயம் இருக்குமிடம்


அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.

 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

நன்றி


நல்ல குடும்பங்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு நன்றி கூறுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளின் பாசம் இவைகள்தான் துன்பத்தில் இருந்து முக்கிய பாதுகாப்பாக அமையும்.
 குடும்பத்தை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான் அவள் அதன் விதியை தன் முந்தானை முடிச்சில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.



மனித குலம்


மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்

samedi 17 septembre 2011

குறுக்கிடாதவரை.......


இரண்டு நண்பர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அழகான ஒரு பெண் அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை.......


நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது; ஆனால் ஒரு நெடியில் அவர்களை இழந்து விடமுடியும்

mardi 13 septembre 2011

திருமண வாழ்வில்


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.


திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.

இருவரும் பரஸ்பர முயற்சி செய்யாவிட்டால் ஒரு நாள் நம்பிக்கையோடு ஆரம்பித்த திருமணம் திடீரென உதிர்ந்து போய்விடும்.

உலகின் உயர்ந்த சந்தோஷம் திருமணத்தில்தான் இருக்கிறது. வேறு எதில் தோற்றாலும் சந்தோஷமான திருமண வாழ்வில் இருப்பவன் ஒரு வெற்றிகரமான மனிதனே.



lundi 12 septembre 2011

சூரியன்


நேற்றின்மேலே ஒளி அடிப்பதற்காகவும் நாளையின் மேலே ஒளி வீசுவதற்காகவும் இன்று சூரியன் உதிப்பதில்லை. நேற்றையையும், நாளையையும் இன்றோடு சேர்த்து ஒளிபடுத்த சூரியனாலும் முடியாது. அது ஒவ்வொரு நாளையும் தனித்தனியாகவே கணித்து செயல்படுகிறது, தனது கடமைகளை எளிதாக செய்கிறது, அதனால் நெடுங்காலம் வாழ்கிறது

அழகான வாழ்வை


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்