முகப்பு

mercredi 30 décembre 2015

2016


2016


2016


soun


nan


இறைவனோடு


      பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
      தேங்காய் பேச ஆரம்பித்தது: ''நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!'' என்றது. அடுத்து வாழைப்பழம், ''நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
      பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.
      பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.
      ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்

oli


samedi 26 décembre 2015

அழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று



அழியா நினைவுகளின் அகவைகள் பதிணொன்று
ஆழிப் பேரலை 26-12-2014

பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), கரையோரங்களைத் தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்து சின்னா பின்னமாக்கிய “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
...
உலக மகா யுத்தங்கள் இருதடவைகள் வந்து போயின, பல்வேறு நாடுகளுக்கிடையில் யுத்தங்கள் தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்படுவதை வரலாறு தெரிவித்தாலும், ஆழிப்பேரலையின் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.

இக்கொடூரம், எமது தாயகத்தின் வடமாநில வன்னி பெருநிலப்பரப்பில், எனது பிறப்பிடமான முல்லைத்தீவில், எமது உறவுகள் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி காலை புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்பத் திருவிழாத் திருப்பலியில் கலந்து கொள்ளும்போது இடம்பெற்றது.

முல்லைத்தீவில் புனித சூசையப்பர் ஆலயம் கடலிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கப்பால் அமைந்துள்ளதால், திருப்பலியில் கலந்து கொண்டோர் உயிர்தப்ப, பல்வேறு காரணங்களால் வீடுகளில் தங்கிய ஆயிரக்கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவில் குழந்தைப் பருவத்தில் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து வாலிப வயது வரை எனது உணர்வுகளோடு இரண்டறக் கலந்த புனித பேதுரு ஆலயம், தூய மரியன்னை ஆலயம், திருக்குடும்பக் கன்னியர் மடம் மற்றும் முல்லைத்தீவு மகாவித்தியாலயம் என்பன முற்றாக அழிக்கப்பட, புனித பேதுரு ஆலயம் சுனாமி நினைவாலயமாக மறுவுரு எடுத்துள்ளது.

பயங்கரக் கொடூரம் நிறைந்த இந்நிகழ்வால், கணவனை இழந்தோர், மணைவியை இழந்தோர், பெற்றோரை இழந்தோர். பிள்ளைகளைப் பறிகொடுத்தோரென ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பதறியழும் சோகக்கதைள் சொல்லிலோ எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப் புக்களோடு மிகப்பெரிய பொருட்சேதமும் ஏற்பட்டது.

கடல் நீர் கழுத்தளவு வருவதனை நாம் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக்கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அழியாத உண்மையாகிவிட்டது.

இப்பேரலையால், ஒருசில மணி நேரங்களுக்குள் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களது உயிர்களைக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறியுள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

ஊரோடு சேர்ந்து, குடியிருந்த வீட்டோடு கூண்டோடு கூண்டாய்ப் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பல திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?

கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்து வாழ்ந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது.

தாயகத்தில் இடம்பெற்ற சோகம் நிறைந்த இப்பயங்கர அனுபவங்களைக் கேள்விப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் வாழும் என்போன்ற பலர் மிகுந்த வேதனைப்பட்டதுண்டு. எனினும் சிலர் அவ்வாறான ஒரு நிகழ்வுகளே எம்மிடையே நடக்கவில்லை என்பது போன்று தம்மை மறந்து, தான்தோன்றித் தனமாக வாழும் நிலையை என்னிக் கவலைப்படுவதனைத் தவிர எம்மால் வேறென்ன செய்ய முடியும்?

எமது உணர்வுகளில் ஒன்றாகி மனதை விட்டகலா நினைவுச் சின்னங்களாக அவை நிறைந் திருப்பதனை எல்லாம் வல்ல இறைவன் நன்கறிவார் என்பது மட்டும் உண்மை. அழிக்க முடியாத நினைவுகளாக, மனதை விட்டகலாத ஆழிப்பேரழிவின் நினைவுச் சின்னங்கள் சிலவற்றை இந்தப் புகைப்படத் தொகுப்பின் வழியாக உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்

happy xmas


lundi 21 décembre 2015

பிறரை வாழ வைத்து வாழ்வோம்



    நாம் எதை ஆதாரமாக வைத்து
    ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ??? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???
    ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ...
    பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையு...ம் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .
    ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம்

பெரிய விஷயங்கள்





    ஒரு முட்டைக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரை முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!

சிக்கனம்



    சிக்கனம் என்பது ஒருவன் பண
    த்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

எங்கே உண்டு..???




    நம்மை மிஞ்சி ஒரு சத்தி உண்டு 
    அவை கண்ணுக்குப் 
    புலப்படுவதும் இல்லை 
    அவை பத்தி என்னும் 
    கோட்பாட்டை போட்டு ...
    மதம் என்னும் பெயரில் 
    மனிதனை பிரிக்கவும் இல்லை ..
    படிப்போருக்கு தேவை 
    கல்வி மேல் பத்தி 
    உழைக்கத் துடிப்போருக்குத் 
    தேவை உழைப்பின் மேல் பத்தி 
    சாதிக்க. நினைப்போருக்கு 
    தேவை நம்பிக்கை மேல் பத்தி 
    எதுவானாலும் தாங்க முடிவு 
    எடுப்போருக்குத் தேவை 
    தன் உடல் மேல் பத்தி ....
    இவைகளை மீறி பத்தி 
    எங்கே உண்டு..???

உயிர் வலி



    சிலர் மேல் பாசம் தோன்றும்
    சிலர் மேல் ஆசை தோன்றும்
    அளவு கடந்த அன்பு வைப்பதும்
    அளவு கடந்த பாசம் காட்டுவதும்
    அளவுகடந்த காதல் கொள்வதும்...
    ஒருவர் மேல் அது பிரிவைக்
    கொடுக்கும் போதுதான் புரியும்
    உயிர் வலி என்பது என்னவென்று.

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்.



    மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்.
    கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
    இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்க...ை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.
    இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.
    அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.
    பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்
    வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .
    மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்.

vendredi 18 décembre 2015

valka


manam


kan


kan


nan


ketavan


unathu


manithan


neegal


unnai


ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் ...



ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் ...................
(1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல்.
(2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே!
(1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன்.
(2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது...

ஒன்றை கடைபிடி


கஸ்டத்திலும் நேர்மையாய் இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே..

இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.....

அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.

பிறரை வாழ வைத்து வாழ்வோம்


நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ??? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???
ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ...
பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .
ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம்

jeudi 10 décembre 2015

இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!



    இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
    இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்.
    இழந்தவை எவை என இறைவன் கேட்டான்!
    பலவும் இழந்திருக்கிறேன்,
    கணக்கில்லை...
    பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
    கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
    கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
    வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
    எதை என்று சொல்வேன் நான்
    இறைவன் கேட்கையில்?
    எதையெல்லாம் இழந்தேனோ
    அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.
    அழகாகச் சிரித்தான் பரமன்
    ”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்
    உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
    நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
    சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
    தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
    திகைத்தேன்!
    இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
    வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
    இணைந்ததை அறிந்தேன்
    இதயம் தெளிந்தேன்
    இறைவன் மறைந்தான்*.......
    படித்தது...

இதுதான் வாழ்க்கை..!



    உண்மையில் இதுதான் வாழ்க்கை..!
    தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்.. மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.. "ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
    அப்பா இருக்கும் தைரியத்தில்.. "எதிரில் வந்தால் உன் முகத்தை பெர்த்துடுவேன்..!" என்று கத்தினான்.. அதே மிரட்டலாக பதில் வந்தது.
    பையன் இந்த முறை மிரண்டான்.. அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான். "என்னை கவனி..!"
    என்றார் அப்பா. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுக...த்தினார்.. "உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன. அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன. மகனிடம் சொன்னார்.
    "இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்கை..! அன்போ.., கோபமோ.., துரோகமோ.., நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ..,அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க கற்றுக்கொள்..!"என்றார்.
    படித்ததில் பிடித்தது

samedi 5 décembre 2015

எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?"


பெருஞ்செல்வர் ஒருவர் ஓர் ஏழை விவசாயியிடம்,

"உன்னால் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?" என்று கேட்டார்.

அதற்கு ஏழை விவசாயி,

"கடன் இருக்கக்கூடாது. சேமிப்பு வேண்டும். தர்மம் செய்ய வேண்டும்" என்றான்.

பெருஞ்செல்வருக்குத் திகைப்பாக இருந்தது. ஓர் ஏழையால் கடனில்லாமல் எப்படி இருக்க முடியும்?

அவன் எதைச் சேமித்துவிடப் போகிறான்?

அவனாவது தர்மம் செய்வதாவது?

என்று யோசித்தார். அதை அவனிடமே கேட்டார்.

அதற்கு அந்த ஏழை சொன்னான்:

"நான் என் பெற்றோருக்குக் கடன்பட்டுள்ளேன்.
அந்தக் கடனை அடைக்க வாழ்நாள் முழுவதும்
அவர்களை என்னுடன் வைத்துக் காப்பாற்றுகிறேன்.

என் மகனை நன்கு படிக்க வைக்கிறேன்.
அவன்தான் என் சேமிப்பு.

வறுமை நிலையில் உள்ள என் தங்கைக்கு
முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.

அதுதான் நான் செய்யும் தர்மம்....

jeudi 3 décembre 2015

un


kulanthai


ஒரு சிறுவன் டீ போட்டுக்கொண்டிருந்தான். வகுப்பறையில் இருக்கவேண்டிய வயதில் அனலில் நின்று வெந்து கொண்டிருந்தான். அவனிடம் அனைவரும் டீ வங்கி அருந்தினோம். இந்த சிறுவயதில் அருமையாக டீ போட்டிருந்தான். எனக்கு இந்த வயதில் வேன்னித்தண்ணி கூட போடத்தெரியாது.
டீ குடுத்துவிட்டு காசை கொடுத்தேன். மீதம் இரண்டு ரூபாய் தந்தான். நீயே வைத்துக்கொள் தம்பி உனது டீ மிக அருமையாக இருந்தது என்றேன்.
ரொம்ப நன்றி அக்கா
நீங்க மொதல்ல கொடுத்த காசு எனக்கு மென் மேலும் உழைப்பை கொடுக்கும் ஆனால் இரண்டாவது முறையாக கொடுத்த காசு என் உழைப்பை கெடுக்கும்.
நான் உங்களுக்கு ஓசில டீ கொடுத்தா வாங்கி அருந்துவீர்களா??
மாட்டேன் தம்பி. ஏன் கேக்குற?
அது போலத்தான் , நீங்க என் “உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் போதும் உழைக்காமல் இருக்க ஊதியம் கொடுத்துவிடாதீர்கள் ” என்றான் அந்த சிறுவன்.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் ஆனால் எது போல் நேர்மையாக உழைக்கும் குழந்தைகளை பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.

இதுதான் வாழ்க்கை

பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்:எதற்காக மன்னிப்பு?
பென்சில்:நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் gpன் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.
இதுதான் வாழ்க்கை ..சிலர் பல பேருக்கும் ரப்பராக இருத்து வருகிறார்கள் ..வெளியே தெரியாமல் ..

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


nஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும் சாப்பிட குட் டே பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.


ஒரு சேரில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு ஒரு சேர் தள்ளி ஒரு வாட்டசாட்டமான நபர் உட்கார்ந்து இருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்,ச்சே பிஸ்கட் திருடி திண்கிறானே இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம் இல்லையா என்று நினைத்து கொண்டே அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறி மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்,சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்த சேரில் வைத்தார்.அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.இப்படியா திருடி திண்பது என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.
அவருக்கு ஒரே ஆச்சரியம் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் அவர் பையில் இருந்தது.அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதாநான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டனாஎன்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.


”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் தகுதியானவரா என்று நினைக்க வேண்டும்”

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?



















    ஒரு மகன் தன் அப்பாவைப்ப
    4 வயதில்-
    என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
    6 வயதில்-
    என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்....
    10 வயதில்-
    என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..
    12 வயதில்-
    ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

    ற்றி என்ன நினைக்கிறான்?
    14 வயதில்-
    என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
    16 வயதில்-
    அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.
    18 வயதில்-
    அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?
    20 வயதில்-
    அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?
    25 வயதில்-
    என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?
    30 வயதில்-
    என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?
    40 வயதில்-
    ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!
    45 வயதில்-
    குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ
    50 வயதில்-
    எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.
    55 வயதில்-
    என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.
    60 வயதில்-
    என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!
    முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.
    நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..

mercredi 2 décembre 2015

உதவிக்கு அழைக்கவும்

.



இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .
2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவ...ும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077
9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
‪#‎இந்த‬ பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க "