முகப்பு

mercredi 28 novembre 2012

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்

 
 
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்

"வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

 
 
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

"வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 
 
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானையின் பதில் :

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

 தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.


பயம் பாதி கொல்லும்

 
 
ஒரு காட்டில் முனிவர் தவம் இருந்தான், அப்போது அந்த வழியக் ஒரு நோய் போய்க்கொண்டிருந்தது அதன் பெயர் காலரா...!

முனிவர் நோயை கூப்பிட்டு எங்கே போகிறாய் என கேட்டார்,

பக்கத்து ஊரில் திருவிழா நான் அங்கு சென்று எல்லாருக்கும் காலராவை
பரப்பி விட்டு காலராவினால் கொல்லபோகிறேன் என்றது.

இது பாவம் இல்லையா என முனிவர் கேட்க, அப்புறம் ஏன் என்னை இறைவன் படிக்கவேண்டும் என நோய் கேட்டது

சரி என்று கூறிவிட்டு வெறும் 100 பேரை மட்டும் கொல், அதற்க்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால் ஏன் சாபத்திற்கு ஆள்வாய் என முனிவர் கூறி அனுப்பினார்

ஆனால் காலராவினால் உயிர் பலி 2000 ஆக உயர்ந்துவிட்டது.

முனிவருக்கு கோபம், நோயை அழைத்து ஏன் இப்படி செய்தாய் ஏன் கேட்டார்!

நான் கொன்றது 100 பேர் தான் மற்றவர்கள் அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள்!! நான் என்ன செய்யமுடியும் முனிவரே!...!

பயம் பாதி கொல்லும்! 

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல்

 
 
இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல்.
நிறைய பே‌ர் உலக‌ம் இ‌ப்படி இரு‌க்‌கிறதே, ம‌னித‌ர்க‌ள் இ‌ப்படி இரு‌க்‌கிறா‌ர்களே எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் எ‌ப்போதுதா‌ன் மாறுவா‌ர்களோ, இவ‌ர்க‌ள் எ‌ப்படி‌த்தா‌ன் ‌திரு‌ந்துவா‌ர்களோ எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் உல‌க‌த்தை மா‌ற்ற முய‌ற்‌சி‌ப்பதை ‌விட, ந‌ம்மை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள மு‌ய‌‌ற்‌சி‌ப்பதுதா‌ன் ‌சிற‌ந்தது.
இத‌ற்கு உதாரணமாக ஒரு கதை:

ஒரு கால‌த்‌தி‌ல் ம‌ங்கலாபு‌ரி எ‌ன்ற நகர‌த்தை ஒரு ம‌ன்ன‌ன் ஆ‌ண்டு வ‌ந்தா‌ன். அவ‌ன், ஒரு நா‌ள் வெகு தொலை‌வி‌ல் உ‌ள்ள பகு‌திகளு‌க்கு சு‌ற்றுலா செ‌ன்றா‌ன். அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வாகன‌ங்க‌ள் ஏது‌ம் இ‌ல்லாததா‌ல் பல இட‌ங்களு‌க்கு நட‌ந்தே செ‌ல்ல வே‌ண்டியதா‌‌யி‌ற்று.

தனது பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு அர‌ண்மனை‌க்கு வ‌ந்த ‌ம‌ன்ன‌ன், த‌ன் கா‌ல்க‌ளி‌ல் கடுமையான வ‌லியை உண‌ர்‌ந்தா‌ன். இதுதா‌ன் அவ‌ன் அ‌திகமான தூர‌ம் நட‌ந்து செ‌ன்ற முத‌ல் பயணம் எ‌ன்பதாலு‌ம், அவ‌ன் செ‌ன்று வ‌ந்த பகு‌‌திக‌ள் பல கரடுமுரடாக இரு‌ந்ததா‌லு‌ம் கா‌ல்வ‌லியை அவனா‌ல் தா‌ங்கவே முடிய‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ம‌ன்ன‌ன் ஒரு ஆணை‌யி‌ட்டா‌ன். அதாவது, "இ‌ந்த நகர‌ம் முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து சாலைகளையு‌ம் ‌வில‌ங்‌கி‌ன் தோலை‌ கொ‌ண்டு பர‌ப்‌பி ‌விட வே‌ண்டு‌ம்" எ‌ன்பதாகு‌ம்.

இ‌தனை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கு ஏராளமான ‌வில‌ங்குகளை கொ‌ல்ல வே‌ண்டி வரு‌ம், மேலு‌ம் இத‌ற்கு ஏராளமான பண‌ம் செலவாகு‌‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம்.

இதனை உண‌ர்‌ந்த ம‌ன்ன‌னி‌ன் ப‌ணியாள‌ர் ஒருவ‌ர், ‌மிகு‌ந்த ப‌ணிவுட‌ன் ம‌ன்ன‌னிட‌ம் செ‌ன்று, ‌நீ‌ங்க‌ள் கூ‌றியபடி, நகர‌ம் முழுவதையு‌ம் தோலா‌ல் பர‌ப்‌பினா‌ல் ஏராளமான பொரு‌ட்செலவாகு‌ம். உ‌ங்க‌ள் ஒருவரு‌க்காக இ‌ப்படி நகர‌த்தையே மா‌ற்றுவது தேவை‌யி‌ல்லாத செல‌வின‌ம். அத‌ற்கு ப‌திலாக ‌நீ‌ங்க‌ள் ‌‌மிகவும ‌‌மிருதுவான ஒரு தோலை‌க் கொ‌ண்டு கால‌ணி செ‌ய்து கொ‌ள்ளலாமே எ‌ன்று ஆலோசனை‌க் கூ‌றினா‌ன்.

ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் மூ‌ழ்‌‌கிய ம‌ன்ன‌ன், இறு‌தியாக தனது ப‌ணியாள‌ரி‌ன் ஆலோசனையை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு தன‌க்காக ஒரு கால‌ணியை தயா‌ரி‌க்க சொ‌ன்னா‌ன்.

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல். அதாவது, இ‌ந்த பூ‌மியை ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியான உலகமாக நா‌ம் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம், அத‌ற்காக நா‌ம் ந‌‌ம்மை‌த்தா‌ன் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமே‌த் த‌விர, இ‌ந்த உலக‌த்தை அ‌ல்ல எ‌ன்பதுதா‌ன் அது. 

நினைக்கிறேன்

 
 
ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.
உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.
அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.
சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான். 

dimanche 25 novembre 2012

இறுதிக் காலம் வரை

 
 
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.


நட்பே சிறந்தது

 
 
வாழ வைப்பவன் இறைவன்,
வாழத் தெரிந்தவன் மனிதன்,
விழ வைப்பவன் துரோகி,
தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும்
உறவை விட, உறவைக்
கொண்டாடும் நட்பே சிறந்தது. 

vendredi 23 novembre 2012

"அம்மா "

 
 
அம்மா என்று அழைப்பதற்கு காரணம்
இருக்கிறது….
"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள
சிறப்பு......
அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும்
இணைத்துகொடுப்பவர்
"அம்மா " ♥

 

கைமாத்து..ஏமாத்து....சுத்துமாத்து. .

 
 
வாங்கியதை வாங்கிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுப்பது தான் – கைமாத்து.

வாங்கியதை வாங்கி வேண்டிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் விட்டால் அது – ஏமாத்து.

வாங்கியதை வாங்கிவிட்டு, கொடுத்தவன் கேட்டபோது எடுத்ததைஇல்லை என்றால் அது – சுத்துமாத்து.


நண்பன்

 
 
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.


mardi 20 novembre 2012

நீ நீயாக இரு!

 
 
எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது நீ தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு! அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக உண்மையாக இருக்க முடியும்!         


வெறுப்பு, பொறாமை

 
 
துரியோதனனுக்கு உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தீயவர்களாக தெரிந்தார்கள், தர்மனுக்கோ நல்லவர்களாக தெரிந்தார்கள். இருவரும் எண்ணப்பாங்கின்படியே பலன்களை பெற்றார்கள். ஆகவேதான் ஒரு காலமும் வெறுப்பு, பொறாமை, பழிவாங்கல், பகிஷ்கரிப்பு போன்றவற்றை வளர்க்க வேண்டாம். 

இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்

 
 
தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன் சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம். ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில் வைத்து இருந்தார்கள். அது சரியும் நிலையில் இருந்ததை . ஈக்கள் பார்த்து விட்டன . காத்திருந்து, அது சரிந்ததும் மாற்...
றி மாற்றிக் குடிக்கலாம் என்று நினைத்தது.

அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில் சரிந்து தரையெல்லாம் தேன். ஈக்கள் உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம் சின்ன நாக்குகளால் பருகின, திருப்தியாகத் தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் தேனிலேயே மாட்டி இறந்துவிட்டன.

நீதி : இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.

 

அன்பை விதை

 
எங்கெல்லாம் பகைமை
உள்ளதோ அங்கெல்லாம்
அன்பை விதை
எங்கெல்லாம் தீங்கு
இழைக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் மன்னிப்பை அளி
...

 

lundi 19 novembre 2012

அன்பு



 
 
அன்பு என்பது ஒரு ஜீவனின் மணி முடி,
இதயத்தின் ஊற்று,
உலகின் ஜீவ சக்தி,
அன்பிலா உடம்பு என்பு தோல் போர்த்த வெற்றுடம்பு.
அன்பிலா மனம் பாலைவனம்,
மன வறட்சிக்கு மாற்று மருந்து அன்பு.
வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம்
வாடும் அன்பு உயரிய தெய்வீகப் பண்பாகும். 

அன்பைக் கொடுத்தவர்கள்

 
 
அன்பைக் கொடுத்தவர்கள் தோற்றதில்லை,
ஆறுதலைக் கொடுத்தவர்கள் இழந்ததில்லை,
மன்னிப்பைக் கொடுத்தவர்கள் துன்புற்றதில்லை,
 புரிந்து கொண்டவர்கள் சண்டையிட்டதில்லை,
நேசித்தவர்கள் நஷ்டப்பட்டதில்லை.

அன்பு இல்லையெனில்

 
 
 எல்லோரையும் மனம் கனிந்து
 வாழ்த்த வேண்டும்.
 மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும்.
அன்பு இல்லையெனில்
வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

lundi 12 novembre 2012

தீபத்திருநாளில் வாழ்த்துகிறேன்

தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த
நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை
கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர்
வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி
எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா?

*தீபாவளி என்றால் என்ன?*

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில்
விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும்
வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில்
இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும்
என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.

*தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?*

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

* இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால்,
அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி
வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான்
இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்
கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன்
இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு,
தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள்
அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த
நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில்
சொல்லப்படுகிறது.

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று
சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக
உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம். உங்களுக்கு வேறு
ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
எனது அன்பான உறவுகள் அனைவருக்கும்.
தீபத்தின் திருநாளாம் இன்று.
உங்கள் இல்லங்களும்,
உள்ளங்களும் ஓளியால் நிரம்பி.
உங்கள் வாழ்வு என்றும் அன்புடனும் ஓற்றுமையுடனும்
சிறந்தோங்க தீபத்திருநாளில் வாழ்த்துகிறேன்.      
 
 
தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த
நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை
கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர்
...
வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி
எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா?

*தீபாவளி என்றால் என்ன?*

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில்
விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும்
வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில்
இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும்
என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.

*தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?*

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

* இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால்,
அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி
வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான்
இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்
கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன்
இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு,
தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள்
அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த
நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில்
சொல்லப்படுகிறது.

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று
சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக
உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம்.
தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த
நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை
கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர்
வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி
எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா?

*தீபாவளி என்றால் என்ன?*

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில்
விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும்
வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில்
இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும்
என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.

*தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?*

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

* இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால்,
அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி
வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான்
இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்
கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன்
இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு,
தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள்
அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த
நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில்
சொல்லப்படுகிறது.

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று
சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக
உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம். உங்களுக்கு வேறு
ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

samedi 10 novembre 2012

மனம்

 
 
 
ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!

 
 
 
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.

ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.

“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.

ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்! 

jeudi 8 novembre 2012

தன் பலம்

 
 
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானையின் பதில் :

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

திருந்த சொல்லுங்கள்

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.


மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்”பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன். “”என்னடா?”கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்


இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள் 

mercredi 7 novembre 2012

அன்பு

 
 
அன்பு இருக்கும்
இடத்தில் நீங்கள் இருப்பதைவிட.........
நீங்கள் இருக்குமிடத்தை அன்பாக வைத்துகொள்ளுங்கள்........
உங்கள் இதய ஏட்டில்.
சோகத்தின் வரிகள் பதிவதுக்கு
சந்தர்பம் இல்லை...


வாழ்க்கையை உயர்த்தும்

 
 
உன்னை மகிழ்விக்கும்
வார்த்தைகளை விட,
உன்னைச் சிந்திக்க
வைக்கும் வார்த்தைகளை
கேள்.அது உன்
வாழ்க்கையை உயர்த்தும்..


500 ரூபாய்தாள்

 
 
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
 ...
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க...!


பல அர்த்தம்

 
 
பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்


ஒரு சின்ன கதை

 
 
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன்...
உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

 

சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்''

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

samedi 3 novembre 2012

உலகநீதி-

 
 
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
-உலகநீதி-


தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்

 
 
 
தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்:

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்
3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்
4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்
...
5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்
6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக
விளங்கும் தமிழ்
7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)
8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள்
அடங்கியது.
9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)
10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும்
இன்பம் பயப்பது.
11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை
பாராட்டும் தமிழ்)
12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்.
15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த
நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்.
16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்.
17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள்
அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்.
19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது.
20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)
21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்
22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்
23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது
24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்
25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது
27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்
28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)
30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்
31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது.
32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது.
34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது.
35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)
36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்
37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)
38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்.

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை —


ஆசான் வள்ளலார்

 
 
கருவில் கலந்த துணையே
என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே
என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே
என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே
-ஆசான் வள்ளலார்


நன்மை

 
 
"எண்ணாத்தால் எண்ணிய மூச்சால் சகல தீமைகளையும் அகற்றமுடியும். பிறருக்கு நன்மையே எண்ணி, நன்மையே செய்வீர். சகல நன்மைகளையும் பெறுவீர்"

vendredi 2 novembre 2012

அன்பு என்பது

 
 
அன்பு என்பது ஒரு ஜீவனின் மணி முடி, இதயத்தின் ஊற்று, உலகின் ஜீவ சக்தி, அன்பிலா உடம்பு என்பு தோல் போர்த்த வெற்றுடம்பு. அன்பிலா மனம் பாலைவனம், மன வறட்சிக்கு மாற்று மருந்து அன்பு. வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடும் அன்பு உயரிய தெய்வீகப் பண்பாகும். 

அழிவேயில்லை

 
 
அடுத்தவர் என்ன செய்கிறார் என்பதே நம்ம கவலையாகப் போய்விட்டது. தமிழுக்கு நாம் என்ன செய்தோமென நினைத்தால் போதும் தமிழிற்கு அழிவேயில்லை. 

மனிதனே அல்ல

 
 
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவன் ஆன்மீகவாதியுமல்ல, பகுத்தறிவாதியுமல்ல. அவன் மொத்தத்தில் மனிதனே அல்ல. மிருகங்களைவிடக் கீழ்த்தரமானவன். 

மகிழ்ச்சியே காரணம்

 
 

 
 
விஞ்ஞானிகள் இரண்டு எலியினை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.
ஒரு எலிக்கு நல்ல உணவு கொடுத்து தனியாகவும்...
இன்னொரு எலிக்கு நல்ல உணவு கொடுத்து கூட்டத்துடனும் விட்டார்கள்.
சாப்பாடு தினமும் இரண்டிற்கும் சரியாக கொடுக்கப்பட்டது.
கொஞ்ச காலங்களில் தனியாக இருந்த எலி இறந்துவிட்டது.
இரண்டாவது இருந்த எலி மிகவும் உற்சாகமாய் இருந்தது...
சாப்பாட்டை விட மகிழ்ச்சியே காரணம் என காரணம் என ஆய்வில் தெரியவந்தது...


jeudi 1 novembre 2012

உண்மைகள் உறங்கிடுமா

 
 
உரிமை மறுக்க பட்டதால்
உறங்க மறுத்தது என் விழிகள்
உணர்ச்சி பெருக்கெடுக்க
உண்மைகள் சொன்னேன்
உயிருக்கே அச்சுறுத்தல்
உண்மைகள் சொன்னது தமிழன் என்பதால்
உயிர்தான் பிரிந்தாலும்
உண்மைகள் உறங்கிடுமா


புன்னகை

 
 
உள்ளத்தின்
சோகத்தை
மறைக்க
உதடுகளின்
நாடகம்...
புன்னகை


எழுமின் எழுந்து தொழுமின் மாவீரரை

 
 
நாங்கள் எங்கள் வீட்டையும்
நாட்டையும் விட்டு விட்டு
பயந்து பாய்ந்தோடி இங்கு வந்தோம் ………………….
எங்கள் உடலையும் உயிரையும் காக்க !
ஆனால் மா வீரர்களோ …….……

உடலையும் உயிரையும் வேள்வித் தீயுள் போராட்ட
அக்கினி குண்டத்துள் அரப்ப்ணம் செய்தார்கள் நாட்டிற்காக!!

நன்றி மறப்பது மட்டுமல்ல அதை
மறுப்பதும் மறைப்பதும் கூட நன்றன்று கேளீர்!!!
ஓ ! மா வீரரே……மா வீரரே ……
ஈழத்தில் தமிழராய்ப் பிறக்கத் தடை
பிறந்தால் இளைஞர் யுவதிகளாய் வளரத் தடை
வளர்ந்தால் நகரத் தடை……நகரெங்கும் அதற்குப் பெருந்தடை
படிக்கத் தடை பல்கலைக்கழகம் போகத் தடை
தொழிலிற்கும் தடை இவற்றிற்காய் போராடத் தடை
போராடி பிடிபட நேர்ந்தால் வதைக்கு அஞ்சி இறக்கவும் தடை
அப்படி இறந்த மா வீரர்களிற்கு நினைக்கவும்
படைக்கவும் தொழுது அஞ்சலி செலுத்தவும் தடையா ?
நாங்கள் தூங்கும் போது …..கேட்கிறான்….
நாங்கள் தூங்குகிறோமா …
.தூங்குவது போல் பயத்தில் பாசாங்கு செய்கிறோமா?

வேரும் விழுதும் இழந்தாலும்
போரில் முகங்கள் தொலைந்தாலும்
ஈரக் கனவுகள் உலராது மீளத் துடிப்போம் உயிரோடு
ஓ! தமிழரே!! எழுமின் எழுந்து தொழுமின் மாவீரரை !!!