முகப்பு

mardi 30 mai 2017

https://www.youtube.com/watch?v=fq0Zko9NiYc

jeudi 25 mai 2017

ஏமாற்றி




நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்..

கஷ்டம்



நாம் விரும்பாத ஒருவரை விரும்புவது கஷ்டம்
நாம் விரும்பும் ஒருவரை வெறுப்பது கஷ்டம்

நேசிப்பது



உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லை

உண்மை



ஒரு மனிதன் தனது துயரத்தில் தான்
உண்மையான மனிதர்களை அறிகின்றான்……

புரிந்தது வாழ்க்கையும்



ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டாள் !..
தளர்ந்த மனத்துடன் தன் தந்தையை காண வந்தாள .
தனது சமையல் கூடத்துக்கு அழைத்துச்செனற தந்தை , 
ஒரு பாத்திரத்தில் கேரட்டுகளை வேகவைத்தார் !..
இன்னொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளை வேகவைத்தார் !.
சிறு நேரம் கழித்து இரண்டையும் சுட்டிக் காட்டி , " முட்டையின் உட்பகுதி திரவமாக இருந்தது. உஷ்ணத்தை எதிர்கொண்டதும் இறுகிவிட்டது !
கேரட்டின் உட்பகுதி திடமாய் இருந்தது , உஷ்ணத்தை எதிர்கொண்டதும இளகிவிட்டது ! "
" சோதனைகளும் இந்த உஷ்ணத்தை போலத்தான் ....
சோதனை வரும்போது கேரட் போல இளகிவிடக் கூடாது !
முட்டைபோல திடமாகி விடு ".... என்றார் !
மகளுக்கு சமையலோடு புரிந்தது வாழ்க்கையும் !!...

அன்னையர் தின வாழ்த்துகள்.


அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

mardi 23 mai 2017

விமரிசனங்கள்



மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே

நல்ல



நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - 
ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்

வாழ்க்கை



தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. 

தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.


jeudi 18 mai 2017

முள்ளிவாய்கால் 8 ஆண்டுகளாகியும்




முள்ளிவாய்கால் 8 ஆண்டுகளாகியும்...
8ஆண்டுகள் கழிந்து போகும்போக்கில் பேரினவாதிகள் தமிழனின் மரண ஓலங்களும் அழுகுரலும் அச்சுறுத்தலும் அழிப்பினையும் தான் புலப்படுத்துகிறார்கள்.. முள்ளிவாய்க்கால் கொடூர அவலம் இனம் அழிந்த பாதகம் இனவழிப்பின் நோக்கம் எத்தனை ஆயிரம் காலம் ஓடிச்சென்றாலும் தமிழன் வாழ்வை பேரினவாதிகள் நேயத்துடன் நெருங்காது. தமிழனுக்குச் சிறைகள் கைதுகள் சித்திரவதைக் கூடங்களைத்தான் பெருக்குகின்றார்கள். போரின் அவலங்களுக்கு மத்தியிலும் அரசியல் பழிவாங்கள் நடத்தும் பேரினவாதம் முள...்ளிவாய்கால் படுகொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்தக் தயக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ரணங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் சர்வதேச சமூகமும் நிறைவேற்றவில்லை. தமிழன் மகிழ்சியான வாழ்க்கை வாழ்வதைச் சொல்பவன் யார்? கைக்கூலிகளும் காட்டிக்கொடுக்கும் துரோகிகளும் பச்சோந்திகளும் தான். புத்தபிக்குகளும் சிங்களப் பேரினவாதக் கும்பல்களும் திரும்பவும் மேலிருந்து கீழாக தன்மானத் தமிழன் மீது இனவாதத்தை இறக்கிக் கொண்டு சீண்டிப் பார்க்கின்றார்கள். சொந்த நிலபுலன் விட்டு அகதியானவர் அவலம் 2009 .05.18 ஏழாண்டுகளாகியும் தீர்வுகாணத் தலையிடவில்லை சிஙகள இராணுவத்தால் விரட்டப்பட்டுத் துரத்தப்படும் போது அகதியானவர் இனவெறி இராணுவத்திடமே சொந்தமண்ணில் அடிமையாவது என்பது இன்றுவரை தீரவில்லை.
விடுதலைப் புலிகள் பதுங்கிப் பாய்வதையே விரும்பி வரவேற்று மாறும் சரித்திரத்தைக் காணத்துடிகின்றனர் என்பது இன்றைய அரசியல் அனுகுமுறையாகப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் பேரணிகளும் போராட்டம்தான். கூட்டங்கள் நடத்தி இளவட்டங்கள் கலந்து நிறைந்து நீண்ட ஊர்வலங்கள் கோஷங்கள் எழுப்பி தமிழர் நிலைப்பாடுகளை உரக்க வெளிப்படுத்துவதும் போராட்டங்கள்தான். வரலாறுகள் மறைக்கப்படாத மறுக்கப்படாத தேசபக்தி தான் உண்மையான போராட்டம். நாம் இப்போது ஆயத்தம் கொள்வோம் நமது முள்ளிவாய்க்கால் கனத்த கவலை சுமந்த 8வது ஆண்டு நினைவு நாள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் அழிவையும் வார்த்தைகளிலும் படங்களிலும் என்றுமே விளங்கப்படுத்த முடியாது. புலம்பெயர்ந்த தமிழர் கண்டனப் போராட்டங்களால்தான் முடியும். புலம்பெயர் தமிழர்களின் மன உறுதி போராடும் திறன் வெளிப்பட வேண்டும்.(sountha 18.05.2017)

எவ்வளவு_பெரிய_நம்பிக்கை



ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன்
கடல் வழியாக பயணம் செய்கிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன,
இடியும் மின்னலுமாய் இருக்கிறது.
படகு ஆடுகிறது. அவரின் மனைவி நடுங்குகிறாள். ...
அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து
அவள் கேட்கிறாள் "உங்களுக்கு பயமாக இல்லையா" என்று.
கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து
அவள் கழுத்தில் வைக்கிறார்.
அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள்.
கணவன் "இந்த கத்தி, பயங்கரமானது,
உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?" என்று .
" கத்தி பயங்கரமானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர்.
என் கணவர். அதனால் பயமில்லை" என்று அதற்கு அவள் பதில் சொல்கிறாள்......
கணவன் புன்முறுவலோடு ,
"இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும், பயங்கரமானவை.
ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் , மிகப்பெரியவன்,
என் அன்புக்குரியவன், அதனால் எனக்கு பயமில்லை " என்கிறார்.

"எவ்வளவுபெரியநம்பிக்கை "
நம்பிக்கை தாங்க வாழ்க்கை..

மே 18



மே 18 தமிழனப் படுகொலையின் 8ம் ஆண்டு தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெருவலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சிக்காற்று எரியுண்டு' கதற கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் இருந்து அணையாது எரியும் பெரும் நெருப்பு.!


நல்ல பண்பு



ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.
நல்ல பண்புகளோடு வாழ்வோம்.......

பிறரை



எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


வெற்றிக்கனி




வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி


samedi 13 mai 2017

எதிர்காலம்

  1. இறைவனுக்கு தெரிந்த
    நம் எதிர்காலம் நமக்கு
    தெரிந்திருந்தால்...
    சில வேளைகளில் நம்
    நிகழ்காலத்தையே...
    நாம் வெறுக்க கூடும்

நம்பிக்கை

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

சுயநலம்.



உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

வாடுகிறோம்


வெளி நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லுவதை விட வெளி நாட்டில் வாடுகிறோம் என்று சொல்லுவதே சிறந்தது

நிழல்




  1. நிழலைப் போலவும் கண்ணாடியைப் போலவும் உன்னுடைய நண்பர்கள் இருக்கட்டும். கண்ணாடி என்றுமே பொய் சொல்லாது நிழல் என்றுமே பிரியாது