முகப்பு

mercredi 3 décembre 2014

neeya


kural


jhg


csh


antha


sos


mo


mol


03.12.2014


03.12.2014


ml


lundi 3 novembre 2014

indru


ullam



varumai


entha


pa


manam


nam


nam


uya


ve


sd


s


ss


ss


sd


dd



dd


ss


mardi 21 octobre 2014


தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? தீபாவளி என்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.
தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்? தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!! * இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
* கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம். உங்களுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

dimanche 28 septembre 2014

குறை கூற



ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
தப்புங்க தப்பு .......
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இதாங்க சரி.....
காலப்போக்கில்... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
..சௌந்தா.....

பெரும்பான்மை மனிதர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் தோல்வியடைந்து கொண்டே அந்தத் தோல்வியை வெற்றியாக்கவும் ஒரு வழியிருக்கிறது என்பதே பலர் அறியாத இரகசியமாகும்.

தேவையற்ற சொல்லைப் போல தேவையற்ற பேச்சும் தீங்கையே விளைவிக்கும். மௌனத்தைப் போல சிறந்த அழகு எங்குமே கிடையாது.

கடவுள் தந்த கடமையை மறந்து வீண்பேச்சிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்காமல் செயலில் ஈடுபடுங்கள். இருட்டைச் சபித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது. சௌந்தா.......

தள்ளாதவர்



வீட்டில் எது கொடுத்தாலும் பாவம் வேறு வழியின்றி வயோதிபர்கள் அதைத் தள்ளிவைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால்தான் அவர்களை தள்ளாதவர் என்று சொல்வார்கள். யாரையும் எதிர்க்க முடியாத வயதில் வேண்டாம் என்று தள்ளாமல் இருப்பதால் தள்ளாதவர் ஆகிறார்கள்.

ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது. சௌந்தா.

மனிதர்களின் அமைப்பிலே புனிதமானது திருமணம்தான். நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை இல்லை.

மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்.சௌந்தா....

காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

jeudi 25 septembre 2014

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது

கடவுள் தந்த கடமையை மறந்து வீண்பேச்சிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்காமல் செயலில் ஈடுபடுங்கள். இருட்டைச் சபித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது. சௌந்தா.......









"கஞ்சன்"



இது ஒரு நகைச்சுவை கதை அவ்வளவு தான், ஏன்னா நீங்க சிரிக்கனுமில்ல அதான்...முன்னாடியேவும்...
ஒரு ஊரில் மிகப்பெரிய "கஞ்சன்" இருந்தான், அவனுடைய தொழில் பெருங்காயம் வாங்கி விற்பனை செய்வது. அவனுக்கு ஒரு மகனும் இருந்தான். எப்பொழுது பார்த்தாலும் மகனை நீ கொஞ்சம் கூட கஞ்சத்தனமாக இல்லை என்று திட்டிக் கொண்டேயிருப்பான். ஆனாலும் மகன் அப்பாவிடம் பெயர் எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
அதற்கு ஏற்றார் போல, அவருடைய அப்பாவும் வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து பெருங்காய மூட்டைகள் பெருமளவில் வந்து இரங்கின. அதை இவன் இறக்க வேண்டியதாகி விட்டது. இறக்கும் பொழுது கைகளிலெல்லாம், பெருங்காயம் பெருமளவு ஒட்டிக் கொண்டது. கை கழுவச் சென்ற நேரத்தில் அவனது அம்மா, பருப்பு குழம்பு, சமைப்பதற்கு பெருங்காயம் வேண்டும் என்றார் உடனே இவன் தன் கையில் ஒட்டியுள்ள பெருங்காயத்தை தண்ணீரில் கழுவி அதை கொண்டுபோய் கொடுத்தான். அதை வைத்தே அவனுடைய அம்மா குழம்பு சமைத்தார்கள். உடனே பையன் இந்த கஞ்சத்தனத்தை கூறி அப்பாவிடம் பெயர் வாங்கி விட வேண்டும் என்று நினைத்தான். மறு நாள் அவனது அப்பா வீடு திரும்பினார்.
அப்பாவிடம் தான் செய்த கஞ்சத்தனத்தை கூறினான். அதை கேட்டு பாரட்டுவார் என்று நினைத்தான். ஆனால் அவனது அப்பா "ஒரே நாள்ள ரெண்டு கையையும் கழுவி ஊத்திட்டியே. ஒவ்வொரு விரலா கழுவி ஊத்தினா 10-நாள் கொழம்பு வைக்கலாமே என்றார்..." பையன் திகைத்து நின்றான்...
(சிரிப்பு வந்துச்சா...? வரலன்னா விடுங்க திரும்பவும் முயற்சி செய்யிறேன்...)

நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.




ஒரு நாய் கடைக்கு வந்துச்சு... கடைக்காரர் விரட்டி விட்டார், திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…
என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. 
நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.
கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது. பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது, கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.
கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.
நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்... நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.

உண்மை செய்திகள்



உண்மை செய்திகள்
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"
உண்மை செய்திகள்

lundi 15 septembre 2014

தமிழ் என்று எப்படி பொருள் வந்தது



தமிழ் என்று எப்படி பொருள் வந்தது 
என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்றுமெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்,
உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..
தகவல் மூலம்: அதிசயம்