முகப்பு

lundi 3 décembre 2012

நமது கலாசாரம்

நாடி வந்தோரை இன்
முகம் கொண்டு வரவேற்ற
காலம் மலையேறி -
இன்று நீங்கள் வருகிறீர்களா?
அடடே ....... நாங்கள் வீட்டில்
இருக்க மாட்டோமே .......
என்று வரும் முன்னே
முகத்திலடித்தது போல்
திருப்பி அனுப்பும் அளவிற்கு
வளர்ந்து நிற்கிறது
இன்றைய கலாச்சாரம் .....
முகம் கொடுத்துப் பேசி
இன்பம் பல பகிர்ந்து
மகிழ்வோடு அளவளாவி
துன்பத்தைப் பகிர்ந்து
மனபாரம் இறக்கி
ஆதரவாய் இருந்தது போய் .....
இன்றோ. ... ஹாய் ஹலோ ..... ....
என்று வார்த்தைகளும்
சுருங்கி மனங்களும் சிறிதாகி .....
தான் தன்னுடையது .... .... ....
தன் வாழ்வு தன் குடும்பம்
என்ற அளவிற்க்குச் சுருங்கிக் கொண்டிருக்கிறது .... ....
எங்கே செல்கிறது
நமது வாழ்வு? நாகரீகப்
போர்வையில்
சிக்கித் தவிக்கிறது ..... .....
நமது கலாசாரம்



Aucun commentaire:

Enregistrer un commentaire