முகப்பு

dimanche 2 décembre 2012

இருதயத்தில் ஏற்படும் அடைப்பு

 



இருதயத்தில் ஏற்படும் அடைப்பு இருதயம்
நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே
நாம் வளமாக வாழ முடியும்.
இருதயமானது ஒரு தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள்
உள்ளது.
இந்த நான்கு அறைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.
இதில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து(Atherosclerosis) சிறியதாகும்
பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே
நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.
புகை பிடிப்பது இருதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும்
தன்மையையும் மிகவும் பாதிக்கும். கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும்
பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும்(critical stenosis) பட்சத்தில்
நெஞ்சுவலி அல்லது திடீரென்று இரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/
Myocardial infarction) வருகிறது.
நாளங்களில் 50 சதவீதத்திற்கு மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு
குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம்.
உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைப்பது, நீரிழிவு நோய் இருந்தால் அதைக்
கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டுவது, ஆரோக்கியமாக
உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.
ஆக இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி
இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய நாளங்களை
பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ,
அஞ்சியோப்லாச்ட்டியோ(angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்ய
வேண்டும்.



Aucun commentaire:

Enregistrer un commentaire