முகப்பு

jeudi 27 décembre 2012

திருமண நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.

 
 
ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்!

அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.


திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால்
பெண்மைக்கே
உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது
தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது.



சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று
எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள்.



அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது.

மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும்.
குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.


வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து
அடியெடுத்து
வைக்க வேண்டும்
.


உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை
கண்டு கொள்ளாதீர்கள்.

உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு
செய்யாத
வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.



பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.

நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள்
தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.



மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது...
போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது.

சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல.
ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள்.



போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக்
கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும்
போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ,
கோபப்படுவதோ தவறு.



மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால்,
உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது.


அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.


அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள்
முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?





Aucun commentaire:

Enregistrer un commentaire