முகப்பு

dimanche 2 décembre 2012

முளைக் கீரை

 

ஆப்பிள் அல்வா


முளைக் கீரை முளைக்கீரையில் 85.7 சதவீதம் நீரும், 4 சதவீதம் புரதச்சத்தும், 0.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 2.7 சதவீதம் தாதுப்புக்களும், ஒரு சதவீதம் நார்ச் சத்தும், 6.3 சதவீதம் மாவுச் சத்தும் உள்ளன. 100 கிராம் கீரையில் 397 மில்லி கிராம் கால்...சியமும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்...லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும், 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும் உள்ளன. இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொள்வதால் ஒரு பூரண உணவுக்கு தேவையான எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது. இந்தக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். நல்ல மலமிளக்கியாகவும் இது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை, அலர்ஜி உள்ளவர்கள் இந்த கீரையைத் தவிர்க்க வேண்டும்.

 



Aucun commentaire:

Enregistrer un commentaire