முகப்பு

mardi 11 décembre 2012

வாய் வீச்சில் வீரரடி

 
 
வாய் வீச்சில் வீரரடி - இவர்
நெஞ்செங்கும் வஞ்சமடி
வான் திறந்து பால் பொழிகின்றது என்பர்
பூகம்பத்தில் பன்னீர் கொப்புளிக்கின்றதென்பர்
தேனூற்று தெருவில் பாயுதென்பர்
தெவிட்டாதது தம் சொல்லுரை என்பர் ( வாய் வீச்சில் வீரரடி...)
பொய்யுரைத்து சிறு நெருப்பூட்டுவர்
தந்திரக் கதையால் தடுமாற்றம் வரவைப்பர்
தெள்ளமுதில் நஞ்சைக் கலந்தூற்றுவர்
தெரியாமல் சிறு நெருப்பூட்டுவர் (வாய் வீச்சில் வீரரடி...)
வீரம்செறி பரம்பரைக்கோர் வினை வைப்போர்
சிறுபிள்ளை விளையாட்டாய்க் குழி வைப்போர்
பிணக் குவியல் நடுவிலும் பேரம் பேசுவர்
மனக் கதவைக் கொஞ்சமும் திறப்பிலர் ( வாய் வீச்சில் வீரரடி...)
வரலாறு மறந்தெமக்கு வதை செய்வர்
வழி மறித்தெமக்கு பகை செய்வர்
கோடிகள் வைக்காக் கோடிக்குள்
நாலடித் துண்டை சிந்திக்கார்! ( வாய் வீச்சில் வீரரடி...)
இரு கையைக் கண்ணுக்குள் குறிவைப்பர்
இனமானம் இழந்தொரு விதி முனைவர்
வளமான வாழ்வுக்கு தணல் வைப்பர்
இழிவாக வரலாற்றில் பதிபடுவர் ( வாய் வீச்சில் வீரரடி...)
மிதிபட இனமொன்றும் புல்லல்ல கேட்பீர்
வழிகாட்டும் விடிவெள்ளி மறந்திடிலர் -எம்
மதி கண்டு ஏனோ பயந்திட்டார்
தலைகீழாய் தப்புகள் கீறுகின்றார் ( வாய் வீச்சில் வீரரடி...)
10.12.2012
வி. அல்விற்(france)

Aucun commentaire:

Enregistrer un commentaire