முகப்பு

dimanche 2 décembre 2012

அழகு

அழகு

விழிக்கு பார்வை அழகு
வீணைக்கு இசை அழகு
வழிக்கு அமைதி அழகு
வாழ்க்கைக்கு பொறுமை மிக அழகு

மொழிக்கு வார்த்தை அழகு
மோனலிசாவுக்கு சிரிப்பு அழகு
மரத்துக்கு கிளை அழகு
மாறுதலுக்கு பயணம் மிக அழகு

தென்னைக்கு இளநி அழகு
தேகத்திற்கு ஆரோக்கியம் அழகு
தமிழுக்கு இலக்கியம் அழகு
தாவி அணைக்கும்தாய் மிக அழகு

கருணைக்கு தெரேசா அழகு
காதலுக்கு தாஜ்மஹால் அழகு
கொடுக்கும்போது கைகள் அழகு
கோடைகாலம் குளிருக்கு மிக அழகு..

எங்கும் அழகு எதிலும் அழகு
பொங்கும் அழகு பொழியும் அழகு
பார்க்கும் விழியும் நினைக்கும் மனதும்
தூய்மையாய் இருப்பின் யாவும் அழகு.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire