முகப்பு

vendredi 13 avril 2012

‎'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!


'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று!


   கர வருடம் மறைந்து இன்று நந்தன புத்தாண்டு மாலை 5.46 மணிக்கு மலர்கின்றது.

பழையன கழிந்து புதியன புகுதல் என்பது போல், கடந்த கால கசப்பான அனுபவங்கள் மறைந்து இனிய ஆண்டாக மலர வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாக இருக்கின்றது.

நம் நாட்டின் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த அவா இரட்டிப்பாகின்றது. ஆம், அடி மேல் அடி என்பதாகத்தானே எம்மவரின் வாழ்க்கை அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன? எம் வாழ்விலும் புது வசந்தம் வீசாதா என்று ஏங்கும் உள்ளங்கள் தாம் எத்தனை எத்தனை?

இவ்வேளை, பிறக்கும் புத்தாண்டு எமது வாழ்வில் சுபிட்சத்தை அள்ளித்தரும், அள்ளித்தர இறைவன் அருள்பாலிக்க வேண்டும்.

இது தவிர, புதிதாகப் பிறக்கும் நந்தன ஆண்டு நல்ல மழை பெய்யும், அமோக விளைச்சல் இருக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறையும் என்றெல்லாம் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றாலே பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். வரப்போகும் புத்தாண்டு எப்படி இருக்குமோ? இந்த வருடமாவது வளமான எதிர்காலம் அமையுமா? விலைவாசி குறையுமா போன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது நியாயம்தானே?

நம் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பதாகவே, பிறக்கப்போகும் தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பஞ்சாங்கமும் எடுத்தியம்புகிறது.

பஞ்சாங்கத்தில்

நல்ல மழை

"தமிழ் வருடங்கள் 60இல் நந்தன வருடம் 26ஆவது ஆண்டு. ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை புதுவருடம் பிறக்கிறது.

சித்திரை முதல் நாள் எந்த கிழமையில் பிறக்கிறதோ அதைப் பொறுத்துப் பலன் ஏற்படும். வெள்ளிக்கிழமை வருடப்பிறப்பு என்பதால் பஞ்சாங்கப் பலன் படி பெருமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பலத்த மழையினால் மலைவாழ் மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்படலாம்.

இந்த ஆண்டு வர்த்தக மேகம் உற்பத்தி ஆவதால் நல்ல மழை பொழிந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு 9 புயல்கள் வீசும். அதில் நான்கு பலவீனமடைந்ததாகக் காணப்படும். ஏனைய 5 புயல்களினால் எல்லாப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். ஆறுஇ குளம் நீர் நிரம்பி வழியும்.

இந்த ஆண்டு ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பு, சீற்றம் ஏற்படலாம். சூறாவளிக் காற்றால் கடலோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த ஆண்டு தான்யாதிபதியாக சூரியன் வருவதால் நெல், அரிசி, நவதானியங்கள் விலை கொஞ்சம் குறையலாம்.

பொதுவாகவே இந்த ஆண்டு சுக்கிர பகவான் மந்திரியாக வருவதால் வேலை இல்லாத் திண்டாட்டம் வெகுவாகக் குறையும்.

நம் நாட்டு அரசியல் நிலையிலும் சிறு மாற்றங்கள் நிகழலாம்" எனக் கூறப்படுகிறது


Aucun commentaire:

Enregistrer un commentaire