முகப்பு

vendredi 30 mai 2014

திருமணப் பொருத்தம்



திருமணப் பொருத்தம்

இன்று திருமணம் என்ற உடன் பல இடங்களில் பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் என்று ஆகிவிட்டது அப்படி இருக்க என் சாதம் தோஷம் அவர் ஜாதகம் தோஷம் இல்லை எப்படி திருமணம் செய்வது என்று அனைவரும் குழம்பி கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் உண்மையில் பொருத்தம் என்பது அந்த காலத்தில் இல்லவே இல்லை இன்றுதான் இப்படி பத்து பொருத்தம் வேண்டும் பத்தில் ஆறு இருந்தால் பொருந்தும் என்று சொல்கிறார்கள் இதில் மிக முக்கியமாய் இரண்டு பொருத்தம் வேண்டும் அது மாங்கல்யம் அல்லது யோனி இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ண கூடாது அது சரி இல்லாதவர்கள் வாழ்வில் இனிக்கத்தான் செய்கிறார்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் இயற்க்கையாக திருமண தோஷம் இருப்பின் அவர்கள் என்னதான் பொருத்தம் பார்த்து ச்திருமணம் செய்தாலும் அத்திருமணம் தோற்றுத்தான் போகும் அப்படி இருக்கையில் இந்த பொருத்தம் எப்படி  பொருந்தும் யோசிக்கவேண்டிய விசியமே ஆம் அப்படி பொருத்தம் இல்லாமல் எப்படி அந்த காலத்தில் ஜாதகத்தை இணைத்து இருப்பார்கள் ஆமா நாம் பொருத்தம் பார்க்கிறோம் என்று மற்றவர் போல இல்லாமல் அவருகளுடைய ஜாதகத்தில் ப்ராப்தம் என்னும் பொருத்தம் அமைய வேண்டும் ஆம் அப்போருதம் இல்லையேல் திருமண நிகழ்வே நடக்காது ஒருவருடன்

ப்ராப்தம் என்பது இறைவன் வகுத்த ஒன்று அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்க முடியாது ஆம் ஒரு பெண் ஜாதகத்தில் லகனத்தின் அதிபதி மற்றும் அவற்றின் சாரம் கொண்ட கிரகமும் இராசியின் அதிபதி அந்த கிரகத்தின் சாரம் அமைப்பை கொண்ட கிரகமும் ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியின் அமைப்பை அல்லது அந்த ஜாதகரின் தசா புத்திகளின் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் அல்லது ராசிநாதனின் தொடபுகளை பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அவர்கள் மனமொத்த தம்பதியினர் அதனால் இன்று அவ்வாறு பொருத்தம் பார்ப்பது இல்லை காரணம் இன்றைய சோதிடர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று கூட இருக்கலாம்

ஆம் ஒரு பெண் ஜாகத்தின் அமைப்பை நன்றாக ஆராய வேண்டும் அந்த பெண் அமைப்பு என்றும் கெட கூடாது அப்படி கேட்டு இருந்தால் இந்த ஆணின் அமைப்பும் கேட்டு விடும் அதாவது சக்தி இல்லையேல் அதனுள் சிவமும் இல்லாமல் போகும் ஒரு பெண்ணின் அமைப்பு அந்த சாதகரை திருமணம் செய்தால்அந்த குடும்பம் விருத்தி அடையும் அமைப்பு இருக்கவேண்டும் இல்லாத யோகத்தை கூட ஒரு சக்தி என்னும் பெண் வந்தால் தானாக வந்து விடும் அந்த சக்தியை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்

பெண் என்பவர் மண்ணுடன் ஒப்பிடுவார்கள் ஆண் என்பவர் விதையுடன் ஒப்பிடுவார்கள் மண்ணில் எந்த விதை வேண்டுமானாலும் விதைக்க முடியும் ஆனால் விதை நன்றாக அமைய வேண்டுமே அப்படி ஆணின் பங்கும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவ்வாறு பெண் என்னும் மண் அமைப்பை பெற்று இருப்பதால் அவர்கள் எவ்வித விதை விதைத்தாலும் அந்த விதை நன்றாக வளர அந்த மண்ணின் அமைப்பும் கேட்டு இருக்க கூடாது இப்படி காரகதுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஏனோ தானோ என்று திருமணம் செய்தாலோ நான் பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தேன் என்றாலும் பின்பு இல்லற வாழ்க்கை வினாகி போகும்

திருமணத்தில் முக்கியமாக காதல் திருமணம் இன்று சில காதல் மற்றும் திருமணம் பணம் வசதி மற்றும் வேலை படிப்பு இப்படியே தகுதிகள் அடிப்படையிலே அமைகிறது அப்படி அமைகிற திருமணம் எவ்விதத்திலும் மனோ திருப்தியை தராது அதனால் துக்கமும் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புக உண்டாகும் மனமொத்த தம்பதி இல்லாத சூழ்நிலையில் வேற்று ஒருவரை தேர்ந்து எடுத்து மறைமுக வாழ்கையை நடத்த வேண்டி வந்து விடும் அவ்வாறான பொருள் பணம் வீடு வசதியை பார்த்து திருமணமும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நிறுத்தி விடும் என்பது பலரும் அனுபவித்த உண்மையே

ஆம் ஒரு திருமணம் வைபோகம் என்பது இன்று காதல் திருமணம் என்றால் கூட அங்கும் பொருத்தம் என்கிற சாதகத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள் அப்படி பொருத்தம் பார்க்க முனைந்து விட்டல் அந்த காதல் அமைப்பு துண்டித்து விடுகிறது அதனால் அங்கு காதல் திருமணம் என்னும் நிலை மாறி விடுகிறது அதலால் காதலரை தேர்ந்து எடுக்கும் முன்பே பொருத்தம் பார்த்து காதலிப்பதும் எவ்விதத்திலும் சாத்தியம் ஆகாது அதனால் அவரவர் அமைப்பை அறிந்து கொண்டு அதன் சூச்சமா அமைப்பின் படி நடத்தி கொள்வதே சாத்தியம் இல்லையென்றாலும் அந்த திருமணத்தால் பதிப்பே வரும்

சாதக பொருத்தம் சரியாக இந்த ஜாதகத்தோடு பொருந்தி வரவேண்டும் என்று பார்த்தல் எப்படி முடியும் ஒரே அமைப்பு உடைய ஒருவருடைய சாதகம் போல இன்னொருவர் சாதகம் இருக்காது ஒவ்வொருவருடைய பிறப்பும் ஒவ்வோரு நோக்கத்திற்காக அமைக்க பட்ட ஒன்று ஒவ்வொரு ஆன்மாவும் வெவ்வேறு செயலுக்க படைக்க பட்ட ஒன்று அப்படி இருக்கையில் எப்படி ஒரே அமைப்பு உடைய ஜாதகம் அமையும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் தோஷ அமைப்பு என்பது மட்டும் அல்லாமால் ப்ராப்தம் என்னும் அமைப்பையும் சரி வர  ஆராய்ந்து அந்த கிரக சாராம்சம் சரி வர பொருந்தி அமைந்தால் அந்த சாதகர் இல்லறத்தில் நல்லறம் காண்பார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire