முகப்பு

samedi 10 novembre 2012

மனம்

 
 
 
ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

Aucun commentaire:

Enregistrer un commentaire