முகப்பு

jeudi 1 novembre 2012

எழுமின் எழுந்து தொழுமின் மாவீரரை

 
 
நாங்கள் எங்கள் வீட்டையும்
நாட்டையும் விட்டு விட்டு
பயந்து பாய்ந்தோடி இங்கு வந்தோம் ………………….
எங்கள் உடலையும் உயிரையும் காக்க !
ஆனால் மா வீரர்களோ …….……

உடலையும் உயிரையும் வேள்வித் தீயுள் போராட்ட
அக்கினி குண்டத்துள் அரப்ப்ணம் செய்தார்கள் நாட்டிற்காக!!

நன்றி மறப்பது மட்டுமல்ல அதை
மறுப்பதும் மறைப்பதும் கூட நன்றன்று கேளீர்!!!
ஓ ! மா வீரரே……மா வீரரே ……
ஈழத்தில் தமிழராய்ப் பிறக்கத் தடை
பிறந்தால் இளைஞர் யுவதிகளாய் வளரத் தடை
வளர்ந்தால் நகரத் தடை……நகரெங்கும் அதற்குப் பெருந்தடை
படிக்கத் தடை பல்கலைக்கழகம் போகத் தடை
தொழிலிற்கும் தடை இவற்றிற்காய் போராடத் தடை
போராடி பிடிபட நேர்ந்தால் வதைக்கு அஞ்சி இறக்கவும் தடை
அப்படி இறந்த மா வீரர்களிற்கு நினைக்கவும்
படைக்கவும் தொழுது அஞ்சலி செலுத்தவும் தடையா ?
நாங்கள் தூங்கும் போது …..கேட்கிறான்….
நாங்கள் தூங்குகிறோமா …
.தூங்குவது போல் பயத்தில் பாசாங்கு செய்கிறோமா?

வேரும் விழுதும் இழந்தாலும்
போரில் முகங்கள் தொலைந்தாலும்
ஈரக் கனவுகள் உலராது மீளத் துடிப்போம் உயிரோடு
ஓ! தமிழரே!! எழுமின் எழுந்து தொழுமின் மாவீரரை !!!


Aucun commentaire:

Enregistrer un commentaire