முகப்பு

mardi 3 mai 2016

பொண்ணு,,



    பொண்ணு,,
    போட்டோவுல பாக்குறதுக்கு அப்படி ஒன்னும் பேரழகாக தெரியாததால்
    பையனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனான் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பரிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இ...ருந்த நம்ம மாப்பிள்ளை பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,,
    'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்,
    இருந்தாலும்,,
    இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் வாழ,,,
    கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,,
    கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,,
    எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கணும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,,
    சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,)
    நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,,
    மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
    மனைவியும் பயங்கர கோபத்துடன்..
    அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"
    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire