முகப்பு

jeudi 19 janvier 2012

வெண் குஸ்டத்திற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

<>
வெண் குஸ்டத்திற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு
இந்தியாவின் ராணுவ விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம், லியூகோடெர்மா என்றும், விடிலிகோ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெண்குஷ்ட நோய்க்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்திய ராணுவ தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், அவ்வப்போது புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் செய்துவருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, மனிதர்களின் உடல் தோலின் நிறம் சில இடங்களில் உருமாறி வெள்ளைத்தழும்புகளாக பரவிப்படறும் வெண்குஷ்டநோய்க்கு மூலிகை அடிப்படையிலான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்து, பக்கவிளைவுகள் இல்லாதது என்றும், ஆரம்பகட்ட வெண்குஷ்டநோயை இந்த மருந்து மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இந்த மருந்து தயாரிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி செல்வ மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire