முகப்பு

mardi 28 juin 2016

மனித மனம்


Manuel Sountha இன் படம்.
    நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட.
    வழக்கமான எண்ணங்களிலிருந்து மாறுபட்டு, புதிய சிந்தனைகளை ஏன் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? எதற்காக இந்த சிந்தனை மாற்றம் நமக்கு அவசியமாகிறது? சிந்தனையின் பயன்கள் . நல்ல எண்ணங்களின் வாயிலாக பல்வேறு நன்மைகள் நமக்கு வந்தடைகின்றன. அதாவது, நமது பொருளாதார மேம்பாடு, பிரச்சனைகளிலிருந்து விடுபடுதல், நமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் எண் ணங்களின் பங்கு மிகவும் அதிகம்.... மேலும், தனிப்பட்ட மற்றும் தொழில் முறையில் சிந்தனைகள் நம்மை முற்றிலும் புதியதொரு நிலைக்கு அழைத்துச்சென்று நமது வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன.
    சிந்தனையின் பயன்கள் பலவகை யில் இருந்தாலும், நல்ல சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளுதல் என்பது எளிதான செயல் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண் டியது அவசியமான ஒன்று. சிறந்த சிந்தனையாளராக மாறவேண்டு மானால் அதற்கான தேடல் மற்றும் உழைப்பு மிகவும் அவசியம். “சிந்தித்தல் என்பது கடினமான பணி, அதனாலேயே சிலர் மட்டும் அதனை செய்கின்றனர்” நமது சிந்தனையினை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போதே, சிறந்த சிந்தனையாளராக மாற ஆரம் பிக்கின்றோம் . மேலும், சிந்தனையானது மிகச் சிறந்த முதலீடு என்பதையும் தெளிவு படுத்துகிறார். தங்கச் சுரங்கங்கள் வற்றிப் போகலாம், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படலாம், சொத்துகள் கூட கைவிட்டுப்போகலாம் ஆனால், நன்கு சிந்திக்கும் திறனுடைய மனித மனம் ஒருபோதும் சோடைபோவதில்லை மற்றும் அது விலைமதிப்பற்றதும் கூட.

Aucun commentaire:

Enregistrer un commentaire