முகப்பு

vendredi 18 décembre 2015

பிறரை வாழ வைத்து வாழ்வோம்


நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ??? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???
ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ...
பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .
ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம்

Aucun commentaire:

Enregistrer un commentaire