முகப்பு

lundi 15 septembre 2014

தமிழ் என்று எப்படி பொருள் வந்தது



தமிழ் என்று எப்படி பொருள் வந்தது 
என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்றுமெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன்,
உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..
தகவல் மூலம்: அதிசயம்

Aucun commentaire:

Enregistrer un commentaire