முகப்பு

dimanche 28 septembre 2014

தள்ளாதவர்



வீட்டில் எது கொடுத்தாலும் பாவம் வேறு வழியின்றி வயோதிபர்கள் அதைத் தள்ளிவைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால்தான் அவர்களை தள்ளாதவர் என்று சொல்வார்கள். யாரையும் எதிர்க்க முடியாத வயதில் வேண்டாம் என்று தள்ளாமல் இருப்பதால் தள்ளாதவர் ஆகிறார்கள்.

ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது. சௌந்தா.

மனிதர்களின் அமைப்பிலே புனிதமானது திருமணம்தான். நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை இல்லை.

மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்.சௌந்தா....

காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?

Aucun commentaire:

Enregistrer un commentaire