முகப்பு

samedi 23 avril 2016

வணக்கம்


    வணக்கம் சொல்லும் பொழுது
    இருகரம் கூப்புவதன் அர்த்தம் என்ன ?
    வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது நம்மனதில் நிற்பவர்கள் என பொருள்படும்.
    நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்றல்
    நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி (கைகளை கூப்பி) சிரம்தாழ்த்தி வரவேற்க வேண்டும்.
    ...
    நம் கரங்களை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். சிரம் தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம்.என்று பொருள்படும்.
    தாய் தந்தையை வணங்குதல், வரவேற்றல்
    தாய் தந்தையை வணங்கும் போது முகத்தின் முன் கரங்கூப்பி வணங்க வேண்டும். (ஓர் மனிதனை அடையாளம் காண்பது என்றால் முகத்தை வைத்தே அடையாளம் காண்போம்.) நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதால் தாய் தந்தையை முகத்தின் முன் கரங்கூப்பி வணங்கவேண்டும்.
    குருவை வணங்குதல், வரவேற்றல்
    குருவை வணங்கும்போது நெற்றிக்குநேர் கரங்கூப்பி வணங்கவேண்டும். நம் சிந்தனையை தூண்டி நம்மை சித்தித்து செயற்பட வைத்தவர் என்பதினால்.குருவை நெற்றிக்கு நேர் கரங்கூப்பி வணங்க வேண்டும்.
    கடவுளை வணங்குதல்
    கடவுளை வணங்கும் போது இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்.
    கடவுள் அனைத்தையும் கடந்தவர். அனைத்தையும் நமக்கு தந்தவர். எப்பொழுதும் எம்மை ஆழ்பவர் என்பதனால் நம் கரங்களை முடிந்த அளவிற்க்கு தலைமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire