முகப்பு

samedi 23 avril 2016

வாழ்கவளமுடன்.



    பருவ வயது குழந்தைகளை பாதுகா
    க்க பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!!!
    பெற்றோர், குழந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி.
    பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம். குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை சுற்றி ஓடுகின்றனர்.
    ...
    பருவம் எட்டுவதற்கு முன்னே பருவ லீலைகளின் மேல் மோகம், இச்சை நூல் இழை வழியே அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து சின்னாபின்னம் ஆக்கி விடுகிறது.
    இதில் இருந்து உங்கள் பருவ வயது குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர் கீழ் வரும் விஷயங்களை கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்…
    நண்பர்களாக இருங்கள்
    உங்கள் குழந்தைகளோடு நண்பர்கைாக பழகுங்கள், வாழ்வியல் குறித்து பேசுங்கள், முக்கியமாக இல்லறத்தைப் பற்றி.
    மனதினைப் புரிந்துக் கொள்ளுங்கள்
    உங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து பழகுங்கள். படிப்பு, உடை, உணவு மட்டுமின்றி, உணர்வுகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
    சமூக வலைதளம்
    மிக முக்கியமாக, சமூக வலைதளம் பற்றியும், அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எடுத்து கூறுங்கள். முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கு.
    உடல் உணர்வு
    ஒவ்வொரு தாயும், பெண் குழந்தையிடம் உடல் உணர்வுகளைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும். அப்போது இந்த வயதில் ஏற்படும் எல்லை மீறல்களை தடுக்க முடியும்.
    பெண்மையின் மகத்துவம்
    இன்று நாளுக்கு நாள் புதிதாய் ஓர் இளம் மங்கையின் நிர்வாணப் படம் வாட்ஸ்அப்பில் உலாவி வருகிறது. அதுவும் பள்ளி செல்லும் பிள்ளைகள். காதல் என்று கூறி ஏமாற்றப்படுகின்றனர். இதில் இருந்து அவர்களை காக்க பெண்மையை பற்றியும், நானம், கூச்சம், காதல் பற்றிய தெளிவாக கூறுங்கள்.
    தாத்தா, பாட்டி
    தாத்தா, பாட்டி எனும் உறவுகளை முதியோர் இல்லம் என்னும் சிறையில் அடைக்காது, வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களே குழந்தைகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
    வாழ்கவளமுடன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire